வியாழன், 30 அக்டோபர், 2014

12 ராசி (லக்ன) காரர்கள் உணவு உண்ணும் விதம். (பொது பலனில் ஒரு சின்ன கற்ப்பனை)

12 ராசி (லக்ன) காரர்கள் உணவு உண்ணும் விதம்.
(பொது பலனில் ஒரு சின்ன கற்ப்பனை)


1) மேச ராசிகார்கள் உணவு சூடாகவும் சுவையாகவும் உண்ணுபவர்கள். வேகமாக உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். காரம், இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
2) ரிசப ராசிகார்கள் சுவையான அருசுவை உணவுகளை ரசித்து ருசித்து மெதுவாக உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். இனிப்பு, உவர்ப்பு சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
3) மிதுனம் ராசிகாரர்கள் குடுப்பத்தோடு கூட்டாஞ்சோறு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள். சப்பிடும்போது டி.வி பார்த்துக் கொண்டோ (அ) படித்துக்கொண்டோ (அ) பேசிக்கொண்டோ உணவு உண்பார்கள். இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
4) கடகம் ராசிகார்கள் தனக்கு பிடித்த உணவை உயர்தரமாக வீட்டில் செய்து சூடாக உண்ண விரும்புவார்கள். சப்பிடும்பொது அதிகம் தண்ணீர் குடிப்பார்கள். கீரை, ஊறுகாய், காரம், இனிப்பு சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
5) சிம்ம ராசிகாரர்கள் நிறைய பதார்தங்களுடன் உயர்தரமான உணவை சுவைக்காக உண்டு மகிழ்வார்கள். சப்பிடும்போது உணவை பாராட்டிக் கொண்டே உணவு உண்பார்கள். ஊறுகாய், கார சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
6) கன்னி ராசிகாரர்கள் உணவு எவ்வளவு சுவையாக இருந்தலும் அளவாகதான் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுவார்கள். இனிப்பு, உவர்ப்பு சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
7) துலாம் ராசிகார்கள் உணவை வீணாக்க மட்டார்கள். பழைய உணவையும் பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடுபவர்கள். ஊறுகாய், காரம், இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
8) விருச்சக ராசிகார்கள் உணவுக்கு மரியாதை தருபவர்கள். உணவை பசிக்காக உண்ணுபவர்கள். தூய்மையான சூடான் உணவை உண்பார்கள். துவர்ப்பு சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
9) தனுசு ராசிகாரர்கள் சுண்ட பசித்தபின் உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். வேகமாக மென்று உண்பவர்கள். உண்ணும் உணவில் காய், பழம், கீரை வகைகளை உண்டு உடலை பேணிக்கொள்வார்கள். கசப்பு, இனிப்பு சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
10) மகர ராசிகாரர்கள் நன்கு மென்று உண்பார்கள். பசிக்காக உண்பவர்கள். ருசியை பார்க்க மாட்டர்கள். பழைய உணவையும் பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடுபவர்கள். கீரை, கசப்பு, சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
11) கும்ப ராசிகாரர்கள் பல ஊர் உணவுகளை தேர்ந்தெடுத்து பிடித்ததை அதிகமாக சாப்பிடுபவர்கள். சாப்பிட்ட உடன் துங்கி ஓய்வெடுக்கும் பழக்கம் உள்ளவர்கள். கசப்பு, இனிப்பு, சுவையுள்ள உணவை சமமாக உண்பார்கள்.
10) மீன ராசிகாரர்கள் நினைத்த நேரத்தில் நினைத்த உணவை சூடாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர். அல்சர் நோயிக்கு சொந்தகாரர். (நேரம் தவறாமல் சப்பிடுவது நல்லது)வேகமாக உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். காரம், இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவை விரும்பி உண்பார்கள்.
சேற்றில் உழவன் கால் வைக்காவிட்டால்
நாம் உணவில் கை வைக்க முடியாது.
உழவு தொழில் செய்து நாட்டைக் காக்கும் உழவர் தம் குடுப்பத்தை வாழ்த்துவோம்.
மகத்துவம் பொருந்திய உணவை வீனாக்காமல் இருப்போம்.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக