செவ்வாய், 28 அக்டோபர், 2014









அஷ்டோத்ரி தெசா கணிதம்


ஜோதிட சாஸ்திரத்தில் பலன் நடக்கும் காலத்தை நிர்ணைக்கும் திசா புக்தி முறைகள் 36 க்கு மேல் உள்ளது. இன்று அதிகம் புழக்கத்தில் உள்ளது வம்சோத்திரி தசா. அழிந்து போன திசா புக்தி முறைதான் இந்த அஷ்டோத்ரி தெசா கணிதம்.அஷ்டோத்ரி அல்லது அஷ்டோத்ரன் என்றால் 108 என்று அர்த்தம். ஆகவே இதில் மொத்தம் 108 வருடங்கள் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.

இதில் 8 கிரகங்கள் தான் இடம் பெற்று உள்ளன. கேது இடம் பெறவில்லை.  (ஏனெனில் ராகு, கேது சம சப்தம விளைவை ஏற்படுத்துபவை.) 
28 நட்சத்திரங்கள் (அபிஜித் உட்பட) இடம் பெற்று உள்ளன. கீழ்கண்ட வரிசை படி நடைபெறும். இது ஒரு பழமையான திசா புக்தி முறை.


                  நட்ச்த்திரங்கள் - திசா நாதர்கள் - தெசா வருடம்


1) கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய 3 நட்ச்த்திரங்களுக்கு
                                   சுக்கிரன் தெசா வருடம் 21

2) திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய 4 நட்ச்த்திரங்களுக்கு                                                சூரியன் தெசா வருடம் 6

3) மகம், பூரம், உத்திரம் ஆகிய 3 நட்ச்த்திரங்களுக்கு
                                   சந்திரன் தெசா வருடம் 15

4) அஷ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய 4 நட்ச்த்திரங்களுக்கு
                                   செவ்வாய் தெசா வருடம் 8

5) அனுசம், கேட்டை, மூலம் ஆகிய 3 நட்ச்த்திரங்களுக்கு
                                   புதன் தெசா வருடம் 17

6) பூராடம், உத்திராடம், அபிஜித், திருஓணம் ஆகிய 4 நட்ச்த்திரங்களுக்கு
                                   சனி தெசா வருடம் 10

7) அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய 3 நட்ச்த்திரங்களுக்கு
                                   குரு தெசா வருடம் 19

8) உத்திரட்டாதி, ரேவதி, அசுவனி, பரணி ஆகிய 4 நட்ச்த்திரங்களுக்கு
                                   ராகு தெசா வருடம் 12

                                                        ஆக மொத்தம் 108 வருடங்கள்.

இதில் ஒன்றை கவனியுங்கள்
சுப கிரகங்களான சுக்கிரன், புதன், குரு,சந்திரன், ஆகியோருக்கு தலா 3 நட்ச்த்திரங்களும்,
அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகியோருக்கு தலா 4 நட்ச்த்திரங்களும் தந்துள்ளனை.
அதேபோல் சுப கிரகங்களுக்கு தெசா வருடம் அதிகமாக்வும், அசுப கிரகங்களுக்கு தெசா வருடம் குறைவாகவும் தந்து சமன் செய்து உள்ளனர்.

திசா மற்றும் புக்தி கீழ்கண்ட வரிசை கிரமத்திலேயே நடக்கும். 
                                  1) சுக்கிரன்
                                  2) சூரியன்
                                  3) சந்திரன்
                                  4) செவ்வாய்
                                  5) புதன்
                                  6) சனி
                                  7) குரு
                                  8) ராகு


திசா புக்தி கணிப்பதும் வம்சோத்ரி முறையில் நட்சத்திர செல்போக இருப்பை வைத்து கண்டறிய வேண்டும். திசா புக்தி பலங்கள் வம்சோத்திரி முறையிலேயே சொல்லப்பட்டுள்ளது.

புக்தியை பிரிக்கும்போது = (திசா நாதன் வருடம் * புத்தி நாதன் வருடம்) / 108 என கண்டறியவும்.
உதாரணம் சுக்கிரன் திசா சூரியன் புக்தி காலம் = (21*6) / 108 = 1.1666666666666666666666666666667 = 1 வருடம் 2 மாதம் 0 நாள்


அபிஜித் நட்சத்திரம்

ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. வம்சோத்திரி தேசா கணிதத்திற்கு பிறகு 27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டது.
அபிஜித் நட்சத்திரம் மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருஒணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் அபிஜித் நட்சத்திரம் ஆகும். (அதாவது மகராசி 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை)
(ஒரு நட்சத்திரத்தின் தொராய நாழிகை 60 எனும்போது உத்திராடத்தின் இறுதி 15 நாழிகைகளையும், அதனை அடுத்துள்ள திருவோணத்தின் முதல் 4 நாழிகைகளையும் உள்ளடக்கிய மொத்தம் 19 நாழிகைகளும் அபிஜித் நட்சத்திரம் ஆகும்)

உத்திராடம் முடியும் பாகை = 280.00 பாகை
உத்திராடத்தின் நன்கில் ஒரு பங்கு = 3.20 பாகை
திருஒணத்தின் 15ல் ஒரு பங்கு = 0.53.20 பாகை
அபிஜித் நட்சத்திர மொத்த பாகை = 4.13.20 பாகை
அபிஜித் நட்சத்திரம் = 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை.

(குறிப்பு : ஒருசில நூல்களில் உத்திராடம் 4ம் பாதமும் + திருஒணம் 1 ம் பாதமும் அபிஜித் என்றும்,
மேலும் ஒருசில நூல்களில் உத்திராடம் 3,4ம் பாதமும் + திருஒணம் 1,2 ம் பாதமும் அபிஜித் என்றும்,
இன்னும் ஒருசில நூல்களில் உத்திராடம் முடிவில் 5 நாழிகையும், திருஒணத்தின் ஆரம்பத்தில் உள்ள் 4 நாழிகை 4 வினாடியும் சேர்ந்த 9 நாழிகை 4 வினாடி அபிஜித் என்றும் சொல்லப்பட்டுள்ளது.)


தெரிந்ததைக் கொண்டு ஆரம்பிப்போம்.
தெரியாததை தெரிந்துக் கொள்வோம்.
வெற்றி நமதே !
வாழ்க வளமுடன் !

பிடித்தால் like and share பன்னவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக