வியாழன், 13 நவம்பர், 2014

(12 ராசிக்காரர்கள் தூங்கும் அழகு).12 ராசி (லக்கின) காரர்கள் தூங்கும் ஸ்டையில்(கருதுகோள் பொதுபலன்) 


1) மேச ராசிகாரர்கள் எல்லா வசதியும் கூடிய தனக்கு பிடித்த இடத்தில் தான் தூங்குவார்கள். இடமாறி படுத்தால் தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். புரண்டு புரண்டு படுக்கும் பழக்கம் உள்ளவர்கள். சிலர் பாதி கண் திறந்தபடி தூங்குவார்கள். தூக்கத்தில் பேசும் பழக்கம் உள்ளவர்கள். பகலில் நடந்த விஷயங்களை இரவில் உறக்கத்தில் உளருவார்கள். பேசிக்கொண்டு இருக்கையில் தூங்கி விடுவார்கள்.


2) ரிசப ராசிகாரர்கள் சோறுகண்ட இடம் சொர்க்கம் தூக்கம் வந்த இடம் பஞ்சனை என எந்த இடத்திலும் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். அதிகமான கனவுகள் வந்து அது வாழ்வில் மெய்படும். ஒந்திரித்து தூங்கும் போது உருண்டு இடமாறி படுத்திருப்பார்கள். குரட்டைவிடும் பழக்கம் உள்ளவர்கள். கையை தலைக்கு வைத்து தூங்குவார்கள். அடிக்கடி தேர்வு எழுதுவது போன்ற கனவு வரும். தூக்கத்தில் சங்கீதம் கேட்பார்கள். பாடல் கேட்டுக்கொண்டோ டிவி பார்த்துக்கொண்டோ தூங்குவார்கள்.

3) மிதுனம் ராசிகாரர்கள் தூக்கதில்கூட தொழில் சிந்தனையுடன் தூங்குவார்கள். தொழில் முன்னேற்றத்தை பற்றி கனவு அதிகம் வரும். தான் பயன்படுத்தும் தலையனை, போர்வையை யாருக்கும் தரமாட்டார்கள். ஒந்திரித்து படுக்கும் பழக்கம் உள்ளவர்கள். படித்த விஷயங்களை கனவில் அசைபோடுவார்கள். புத்தகம் படித்தபடி தூங்கிவிடுவார்கள்.

4)கடகம் ராசிகாரர்கள் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சுத்தமான இடத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். கனவில் குரு, தெய்வ தரிசனம் செய்வார்கள். நிமிர்ந்தும், ஒந்தரித்தும், கவிழ்ந்தும் நிமிர்ந்தும் படுத்து குரட்டை விடும் பழக்கம் இருக்கும். விளையாட்டு, காதல், அறிவு சார்ந்த விஷயங்களை தூக்கத்தில்
ரசிப்பார்கள். ஒழுக்கமாக உடை கலையாமல் உறங்குவார்கள்.
5) சிம்ம ராசிகாரர்கள் பாதுகாப்பான இடத்தில் மட்டும் எப்போதும் ஒரு பய உணர்வுடன் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். அடிக்கடி தீய கனவுகள் கண்டு பதி தூக்கத்தில் எழும் பழக்கம் உள்ளவர்கள். குளிர்சியான இடத்தில் கவிழ்ந்து படித்தால் தான் தூக்கம் வரும். வாழ்வில், வழக்கில் வெற்றி பெறுதல் உயர்பதவி அடைதல் பேன்ற கனவுகள் அடிக்கடி வரும். தூக்கதில் உடை கலைந்தது கூட தெரியாமல் உறங்குவார்கள்.

6) கன்னி ராசிகாரர்கள் துணையுடன் தூங்கும் பழக்கம் அல்லது தலையனையை கட்டிபிடித்துக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். கூட்டாளியை பற்றிய கனவு வரும். ஒந்திரித்து தூங்கும் போது அசயாமல் படித்திருப்பார்கள். சிலருக்கு திருமணத்துக்கு பிறகும் கூட திருமணம் சுபகாரியம் கொட்டுமேள சப்தம் அடிக்கடி கனவில் வரும். புத்தகம் படித்தபடி தூங்கிவிடுவார்கள்.

7) துலாம் ராசிகாரர்கள் குறைவாக தூக்கும் பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் அடிக்கடி தூக்கம் கெட்டால் எளிதில் நோய் வந்துவிடும். சிலர் தூக்கமாத்திரை போட்டு தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். ஒந்தரித்தும், கவிழ்ந்தும் நிமிர்ந்தும் படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவர். சிலர் கெட்ட கனவு கண்டு தூக்கதில் பயந்து எழுந்து கத்துவார்கள். தூக்கதில் உடை கலைந்தது கூட தெரியாமல் உறங்குவார்கள்.

8) விருச்சக ராசிகாரர்கள் விருப்பமான இடத்தில் படுத்து நல்ல ஆரோக்கியமான நீண்ட உறக்கம் செய்பவர்கள். மகிழ்சியான கனவுகள் (காதல் கனவுகள்) கண்பவர்கள். படுக்கையில் படுத்தவர் ஆடாமல் அசையாமல் படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவர். தூங்க போகும் முன் இறைவழிபாடு செய்யும் பழக்கம் உள்ளவர்கள். ஒழுக்கமாக் உடை கலையாமல் உறங்குவார்கள்.

9) தனுசு ராசிகாரர்கள் தனக்கு பிடித்த பஞ்சு மெத்தையில் சுகமாக தேவையான அளவு தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். தான் அடையா வேண்டிய வசதி வாய்ப்புகளை கனவாக் கண்பார்கள். கவிழ்ந்து உடல் முழுவதும் போர்வையால் போர்த்தியபடி தூங்கும் பழக்கம் உள்ளவர். கை கால்களை பரப்பிய படி கம்பீரமாக தூங்குவார்கள். பாடல் கேட்டுக்கொண்டோ டிவி பார்த்துக்கொண்டோ தூங்குவார்கள்.


10) மகர ராசிகாரர்கள் எப்படிபட்ட இடமாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைபடாமல் தூங்குவார்கள். அவர் முயற்சியை தூண்டுவதுபோல் ஆக்கபூர்வமான கனவு கண்பர்கள். பாதிவிழிப்பு நிலையில் நிமிர்ந்தும், ஒந்தரித்தும், கவிழ்ந்தும் நிமிர்ந்தும் படுத்து குரட்டை விடும் பழக்கம் இருக்கும். தூக்கத்தின் மூலம் ஆரோக்கியத்தை பேனுவார்கள்.
டிவி பார்த்துக்கொண்டு தூங்குவார்கள்.
11) கும்ப ராசிகாரர்கள் நிம்மதியாக உணவருந்திய பின் உறங்கும் பழக்கம் உள்ளவர்கள். பணத்தை பற்றிய கனவுகள் அதிகம் கண்பார்கள். தூங்கும் போது காலை ஆட்டியபடியோ அல்லது காலை பக்கத்தில் படுத்திருப்பவர்மேல் போட்டோ அல்லது கவிழ்ந்தோ படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவர். படுத்தவுடன் தூங்கிவிடும் புண்ணிவாங்கள். பேசிக்கொண்டு இருக்கையில் தூங்கி விடுவார்கள்.

12) மீன ராசிகாரர்கள் கண்களை பாதி திறந்தபடி தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். தன்னிலை மறந்து உறங்கும் தன்மை உள்ளவர்கள். தன்னைபற்றிய கனவு கண்பர்கள். ஜடம் போல ஆடாமல் அசையாமல் நிமிர்ந்தோ, ஒந்தரித்தோ படுக்கும் பழக்கம் உள்ளவர்கள். தூக்கதில் சுய சிந்தனையுடன் இருப்பார்கள் மற்றவர் தொட்டலோ, சின்ன சப்தம் கேட்டாலோ விழித்துக்கொள்வார்கள்.

கடவுள் மனிதனுக்கு அளித்த வரம் தூக்கம்
தூக்கமே நோயாளியின் மருந்து
அளவான தூக்கம் வளமான வாழ்வு
நல்ல இரவு உறக்கம் ஆரோக்கியத்தின் துவக்கம்
மற்றவர் தூக்கத்தை கேடுக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை செய்வோம்.

வெற்றி+மகிழ்ச்சி நமதே !! 
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty
12 ராசி (லக்கின) காரர்கள் வாகனம் ஓட்டும் ஸ்டையில்
(கருதுகோள் பொதுபலன்)


1) மேச ராசிகாரர்கள் சாலைவிதிகளை மதிக்காமல் வருபவரை திட்டிக்கொண்டே வேகமாகவும் குறிக்கோளுடன் வாகனம் ஓட்டுவார்கள். வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் மிக்கவர்கள்.

2) ரிசப ராசிகாரர்கள் நிதானமாக சாலைவிதிகளை மதித்து சகிப்பு தன்மையுடன் உடன் இருப்பவருடன் பேசிக்கொண்டே(சாப்பிட்டுக்கொண்டே) வாகனம் ஓட்டுவார்கள். பிரயாண பிரியர். 

3) மிதுனம் ராசிகாரர்கள் இடத்துக்கு தகுந்தற்போல் வேகம் அதிகப்படுத்தியும், குறைத்தும் படல் கேட்டுக்கொண்டோ அல்லது செல் பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். 
வாகனம் வருவாய் ஈட்டி தரவேண்டும் என விரும்புவார்கள்.

4) கடகம் ராசிகாரர்கள் சாலையில் நடக்கும் விசயங்களை பார்த்துக்கொண்டே உணர்ச்சி வசத்துடனும் பதட்டத்துடனும் வாகனம் ஓட்டுவார்கள். வாகனத்தை சுயகெளரவத்துக்காக வைத்திருப்பார்கள்.

5) சிம்ம ராசிகாரர்கள் கம்பிரமாக யாரை பற்றியும் கவலைபடாமல் வேகமாக அறிவாறலுடன் வாகனம் ஓட்டுவார்கள். வாகனத்துக்காக வீன் செலவு செய்வார்கள்.

6) கன்னி ராசிகாரர்கள் மெதுவகவும் நிதானமாகவும் பாதுகாப்பாக்வும் சாலைவிதிகளை மதித்து  வாகனம் ஓட்டுவார்கள். வண்டியின் மூலம் ஆதாயம் தேடுவார்கள்.


7) துலாம் ராசிகாரர்கள் பிறரையும் தன்னைபோல் மதித்து முன்னாலும் பின்னலும் வருபவர்களின் வேகத்தை அனுசரித்து வாகனம் ஓட்டுவார்கள். வாகனத்தை தொழிலுக்காக பயன்படுத்துவார்கள்.

8) விருச்சக ராசிகாரர்கள் யாரை பற்றியும், விபத்தை பற்றியும், கவலைபடாமல் சாலைவிதிகளை மதிக்காமல் மிக வேகமாக வாகனம் ஓட்டுவார்கள்.  வாகனத்தில் அடிக்கடி கோவில்களுக்கு சென்றுவருவதில் விருப்பம் உள்ளவர்கள்.

9) தனுசு ராசிகாரர்கள் ஒழுக்கமாக சாலைவிதிகளை மதித்து மிதவேகத்துடன் வழியில் காணும் விஷயங்களில் அறிவை செலுத்தி வழிதடங்களை ஞாபகத்தில் கொண்டபடியே  வாகனம் ஓட்டுவார்கள். வாகன காப்பீடு விஷயத்தில் அக்கரையுடன் இருப்பார்கள்.

10) மகர ராசிகாரர்கள் மிகுந்த செயல்திறனுடன் மெதுவாக கன்டிசன் இல்லாத வாகனத்தையும் தொழில் திறமையுடன் சகிப்பு தன்மையுடன் வாகனம் ஓட்டுவார்கள். பெரும்பாலும் அடித்தவர் வாகனத்தை ஓட்டுதில் விருப்பம் உள்ளவர்கள்.

11) கும்ப ராசிகாரர்கள் ரிப்பேர் ஆன வண்டியை கூட சரி செய்து ஓட்டி சாதனை படைப்பவர்கள் மிதவேகத்தில் வாகனம் ஓட்டுவார்கள். வாகனத்தில் தன்னிடல் பனிபுரிபவரையும் கூட்டிசென்று சமத்துவத்துடன் இருப்பதில் விருப்பம் உள்ளவர்.
10) மீன ராசிகாரர்கள் கற்பனை குதிரையை அவில்து விட்டபடி ஒரு மயக்க நிலையில் மிதவேகத்தில் வாகனம் ஓட்டுவார்கள். இரவில் வாகனம் ஓட்ட பிடிக்கும். அடிக்கடி சொந்த வாகனத்தில் இன்ப சுற்றுலா செல்ல விருப்பம் உள்ளவர்.


வாகனம் ஓட்டும்போது
மித வேகம் மிக நன்று
வாகனம் ஓட்டிக்கொண்டே செல் அழைப்பில் பேசுபவருக்கு
அழைப்பது எமனாக கூட இருக்கலாம்.
சாலை விதிகளை மதிப்போம். 
வெற்றி+மகிழ்ச்சி நமதே !! 
வாழ்க வளமுடன் !!!
AstroMarichettyசனி, 1 நவம்பர், 2014

உங்கள் ராசிபடி உங்கள் நண்பர்கள்

உங்கள் ராசிபடி உங்கள் நண்பர்கள் 
12 ராசி (லக்ன) காரர்கள் விரும்பி நட்புகொள்ளும் நண்பர்களின் குணாதிசயங்கள்.
(கருதுகோள் பொதுபலன் / ஆய்வினால் மாற்றத்திற்குட்பட்டவை)


மேசம் ராசிகாரர்கள் : 
 நட்புடன் பேசுபவர்கள், நம்பிக்கையாளர்கள், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர்கள், அதிர்ஸ்டசாலிகள், மற்றவரை மகிழ்விப்பவர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர் மற்றும் தனக்கு ஆதாயமாக உள்ள நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


ரிசபம் ராசிகாரர்கள் : 
ரகசியம் காப்பவர்கள், மறைமுக சிந்தனையாளர்கள்,  வெளி நாட்டவர்கள், கண்ணுக்கு தெரியதவர்கள், இண்டர்னெட் நண்பர்கள், முதலீட்டாளர்கள், துப்பறிபவர்கள், மெலிந்த அழகான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் அதிகம் செலவாளி நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


மிதுனம் ராசிகாரர்கள் : 
சுய சிந்தனையாளர்கள், செயல் திறன் மிக்கவர்கள், சக்தி மிக்கவர்கள், நல்ல நிறம், உயரம், உடல்வாகு, கௌரவம் மிக்கவர்கள், வீரம் மிக்கவர்கள், தான் சொல்வதை யோசிக்காமல் வேகமாக செய்யும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


கடகம் ராசிகாரர்கள் : 
முக அழகு, கண் அழகு, மூக்கு அழகு உள்ளவர்கள்,  பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், ஞாபக சக்தி உள்ளவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள்,  அழகான ஆடை அணிபவர்கள் மற்றும் தனக்கு நிதியுதவி வழங்கும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


சிம்மம் ராசிகாரர்கள் : 
இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம்  உள்ளவர்கள், எழுத்தற்றல் மிக்கவர்கள், தகவல் தொடர்பாளர்கள், ஞாபக சக்தி மிக்கவர்கள்,, ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் மற்றும் தன்னை புகழ்ந்து பேசும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


கன்னி ராசிகாரர்கள் : 
அன்பு மிக்கவர்கள், பாசம் மிக்கவர்கள், நேசம் மிக்கவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், சேவை குணம் உள்ளவர்கள், தாயை போல் பாசம் உள்ளவர்கள், பரிசு வழங்குபவர்கள்,  அழகிய வீடு, வாகனம் உள்ளவர்கள்,  கொளு கொளு உடம்பு உள்ளவர்கள் மற்றும் தன்னிடம் அன்பாகவும் ஆதரவாகவும் பேசும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


துலாம் ராசிகாரர்கள் : 
ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள்,, கலை ஞானம் மிக்கவர்கள், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், புகழ் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர்கள், சினிமா  காரர்கள், இசை ஆர்வம் உள்ளவர்கள், அதிர்ஸ்டசாலிகள், நல்ல உடல் கட்டு உள்ளவர்கள் மற்றும் தனது காரியத்தை சாதித்துக் கொள்ள தலைமை பொறுப்பில் உள்ள  நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.விருச்சகம் ராசிகாரர்கள் : 
வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளிகள், தன்னம்பிக்கையாளர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் தன்னிடம் விசுவாசமாக வேலை செய்யும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


தனுசு ராசிகாரர்கள் : 
தன்னைப்போல் குணமுள்ளவர்கள், கூட்டு சிந்தனையாளர்கள், வியாபாரிகள், கௌரவம் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், சரிசமமான அந்தஸ்து உள்ளவர்கள், கட்டழகு உள்ளவர்கள் மற்றும் சக வியாபார மற்றும் சக தொழில் கூட்டாளி நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.

மகரம்  ராசிகாரர்கள் : 
செயற்கையான அழகு உள்ளவர்கள், செயற்கையான பேச்சு உள்ளவர்கள், கொடூர குணம் உள்ளவர்கள், கஸ்டமான சாதனை செய்பவர்கள், சர்க்கஸ் காரர்கள், கார் & பைக் ரைடர்கள், பண பலம் உள்ளவர்கள், கொடூர தோற்றம் உள்ளவர்கள் மற்றும் தனது ரகசிய விஷயங்களுக்கு உதவும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


கும்பம் ராசிகாரர்கள் : 
நம்பிக்கையாளர்கள், இறை நம்பிக்கையாளர்கள், விவேகம் மிக்கவர்கள், விசுவாசம் மிக்கவர்கள்,  ஆராய்ச்சியாளர்கள், சொத்து மிக்கவர்கள், , நூலாசிரியர்கள், தலைவர்கள், பேச்சாளர்கள், பக்தி தோற்றம் உள்ளவர்கள், பருத்த உடல் உள்ளவர்கள் மற்றும் தனக்கு நல்ல விஷயங்களை சொல்லித்தரும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


மீனம்  ராசிகாரர்கள் : 
கௌரவமான வேலையில் உள்ளவர்கள், கௌரவமான பதவி உள்ளவர்கள், , அந்தஸ்து மிக்கவர்கள், விருது பெற்றவர்கள், திறமை மிக்கவர்கள், உயர்ந்த பொறுப்பு உள்ளவர்கள், தன்னுடன் வேலைபார்பவர்கள் மற்றும் தனக்கு நல்ல தொழில் ஆலோசனை வழங்கும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.

உன் நண்பனை காட்டு
சொல்கிறேன் 
நீ யாரென்று

உனது குணம் உனது நண்பனில் தெரியும்
ஆகவே நல்ல நண்பர்கள் உங்கள் வாழ்வின் ஏணிகள்

நட்புடன் இருப்போம்
நட்பை மதிப்போம்
வாழ்க வளமுடன்
AstroMarichetty