வியாழன், 16 அக்டோபர், 2014

வெற்றிக்கு வழிவகுக்கும் அதிர்ஷ்ட திக்கு (அனுபவ உண்மை) Winning Direction

வெற்றிக்கு வழிவகுக்கும் அதிர்ஷ்ட திக்கு
(அனுபவ உண்மை)
வாஸ்து படி 8 திசைகள் உள்ளன. அவற்றை அவரவருக்கான பெயரின் முதல் எழுத்து படி நம் முன்னோர்கள் பிரித்து உள்ளார்கள்.
அந்த படம் இங்கே காட்டப்பட்டுள்ளது.
அந்த திக்கில் நின்று அதன் எதிர் திசையை நோக்கி செயல், போர், சொற்ப்பொழிவு, கைய்யொப்பம் ஆகிய செயல் செய்தால் வெற்றி நிச்சயம்.
நமக்குரிய (பெயருக்கு உரிய) திசையில் வாசல் வைத்து வீடு கட்ட செல்வம் கொழிக்கும் என்பது அனுபவ உண்மை.
ராஷசர்களின் வாஸ்து சிற்பி மயன்.
தேவர்களின் வாஸ்து சிற்பி விஸ்வகர்மா.
இவர்கள் இணைந்த்து வாஸ்துபடி
ராவனேஸ்வரனுக்காக உருவாக்கியது இலங்கை.
ராவனேஸ்வரன் அண்ட சராசரங்களையும் ஆண்டான்.
வாஸ்துபடி இலங்கைகுள் ராமனாலும் நுழைய முடியவில்லை.
அதற்காக அனுமன் இலங்கையில் தீ வைத்த பிறகுதான்
ராமன் இலங்கைகுள் புக முடிந்தது.
ராமன் முதல் எழுத்து ரா = ய - வர்க்கம் = வடக்கு அதிர்ஷ்ட திசை
ராவனேஸ்வரன் முதல் எழுத்து ரா = ய - வர்க்கம் = வடக்கு அதிர்ஷ்ட திசை
இருவரின் அதிர்ஷ்ட திசையும் வடக்கு தான்.
போரில் ராமன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி போர் புரிந்தார்.
ராவனேஸ்வரன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி போர் புரிந்தார்.
ராமன் வெற்றி பெற்றார், ராவணன் மண்டான்.
இந்த அதிர்ஷ்ட திசை எளிதில் வெற்றியை தரும்.
உங்கள் அலுவலகங்களில் உங்கள் அதிர்ஷ்ட திசையில்
அமர்ந்து அதன் எதிர் திசையை நோக்கி அமர்ந்தால் வெற்றி நிச்சயம்.
இந்த மேலான கருத்தை வாஸ்து ராஜா பட்டம் பெற்ற மனையியல் வல்லுனர், திரு. பி.ஆர். கிருஷ்ணன் அய்யா அவர்களின் நூலில் இருந்து கிடைத்தது.
நான் எனது அலுவலகத்தில் வடமேற்கில் அமர்ந்து தென்கிழக்கை நோக்கி 10 வருடங்களாக அமர்ந்துள்ளேன்.
இதற்கு முன் இருந்ததற்க்கும் இதற்கும் வித்தியாசம் மிக உள்ளது.
நீங்களும் இதை தெரிந்து வாழ்வில் வெற்றி பெறவே இந்த பதிவு.
வெற்றி நமதே !
வாழ்க வளமுடன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக