வியாழன், 16 அக்டோபர், 2014

நட்சத்திர கந்தாயம் பலன் கண்டறியும் முறை. (Nakshatra Kanthayam)

நட்சத்திர கந்தாயம் பலன் கண்டறியும் முறை.
பஞ்சாங்கத்தில் போடும் நட்சத்திர கந்தாயம் கணிப்பது எப்படி என பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாளின் சைத்ர சுத்தபிரதமை தினத்தின் (தெலுங்கு வருட பிறப்பு) சூரிய உதய நேரத்தில் 1) திதி, 2) நாள், 3) நட்சத்திரம், 4) யோகம், 5) கரணம் என்று சொல்லும் பஞ்ச அங்கம் 5யையும் குறித்துக் கொள்ளவும்.
1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ
முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
உதாரணம் : ஜய வருடத்துக்கு பரணி நட்சதிரத்திற்கு கந்தாயம் கண்டறிவோம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாள் (தெலுங்கு வருட பிறப்பு).
ஜய வருடத்தின் முந்தைய வருடமான விஜய வருடத்தின் பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதமை நாளின் பஞ்சஅங்கங்கள்.
பங்குனி 17 (31-3-2014) திங்கட்கிழமை, ரேவதி நட்சத்திரம், ஐந்திரம் யோகம், கிம்ஸ்துக்கினம் கரணம் அன்றைய பஞ்ச அங்கங்கள் ஆகும்.
1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ = பிரதமை = 1
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ = திங்கள் = 2
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ = ரேவதி = 27
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ = ஐந்திரம் = 26
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ = கிம்ஸ்துக்கினம் = 11
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ = 1+2+27+26+11 = 67 ஆகும்
ஊ = 67
பரணி நட்சதிரத்திற்கு முதற்கந்தாயம் கண்டறிவோம்.
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ = பரணி = 2
முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) = ((67+2)x3) / 8 = 207 / 8 இன் மீதம் = 7 ஆகும்.
பரணி நட்சதிரத்திற்கு நடுகந்தாயம் கண்டறிவோம்.
நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) = ((67+2)x7) / 3) = 483 / 3 இன் மீதம் = 0 ஆகும்.
பரணி நட்சதிரத்திற்கு கடை கந்தாயம் கண்டறிவோம்.
கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) = ((67+2)x3) / 5) = 207 / 5 இன் மீதம் = 2 ஆகும்.
இவ்வாறு மற்ற நட்சத்திரத்திற்கும் கண்டறியவும்.
(குறிப்பு : ஒரு சில பஞ்சங்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை திதி முடியும் நேரத்தில் உள்ள திதி, நாள், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை வைத்தும் கணிக்கிறார்கள்.)
(குறிப்பு : ஒரு சில பஞ்சங்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை திதி ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள திதி, நாள், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை வைத்தும் கணிக்கிறார்கள்.)
வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக