சனி, 7 நவம்பர், 2015

12 ராசி (லக்ன) மாப்பிள்ளை தலை தீபாவளி கொண்டாடும் விதம்.


தலை தீபாவளி ஸ்பெஷல்
12 ராசி (லக்ன) மாப்பிள்ளை
தலை தீபாவளி கொண்டாடும் விதம்.
(கற்பனை கருதுகோள்)

1) மேச ராசி (லக்ன) மாப்பிள்ளை : ஏண்டி எனக்கு தலை தீபாவளியா இல்ல உங்க அக்கா புருஷணுக்கு தலை தீபாவளியா. எனக்கும் அவனுக்கும் ஒரேமாதிரி டிரஸ் உங்கப்பன் எடுத்து இருக்குறான். என்னை அவமானபடுத்தவே இந்த தலைதீபாவளிக்கு உங்கப்பன் கூப்புட்டு இருக்கான அப்படின்னு எதாவது காரணத்தை தேடி சண்டபோட்டுட்டே தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

2) ரிசப ராசி (லக்ன) மாப்பிள்ளை : செல்லம் உங்கப்பா தலை தீபாவளிக்கு 3 பவுண்ல செயின் போடுவார்னு பாத்த பொசுக்குன்னு உன்பேர் இனிசியல் போட்ட அரை பவுண் மோதிரம் தான் போட்டு இருக்காரு. செரி அடுத்த பண்டிகைக்கு பாத்துகொள்ளலாம். மாமியார் நல்ல வாய்க்கு ருசியாக சமைச்சி வச்சி இருக்காங்க அத சாப்பிட்டாவது தீபாவளியை கொண்டாடலாம்னு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

3) மிதுனம் ராசி (லக்ன) மாப்பிள்ளை : தலை தீபாவளிய உங்கப்ப தடபுடலா ஏற்பாடு பண்ணி இருக்கார் சூப்பர். ஏன்ன தீபாவளி ரிலீஸ் படத்துக்கு 2 டிக்கெட் ரிசர்வ் பன்னீருந்த சூப்பரோ சூப்பரா இருந்து இருக்கும். இப்பமட்டும் என்ன உங்க தம்பிகிட்ட சொல்லி 2 டிக்கெட் வாங்க சொல்லு ஏன்ன எந்த டீவியிலும் நல்ல புரகராம் இல்ல அப்படின்னு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

4) கடகம் ராசி (லக்ன) மாப்பிள்ளை : அன்பே உண்மைய சொல்லனுமுன்ன என் குடும்பத்தவிட உங்க குடும்பத்த எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு எல்லாம் என் மேல ரொம்ப பாசமா இருக்குறாங்க விழுந்த்து விழுந்து கவனிக்கிறாங்க. எனக்கு புடிச்ச டிரஸ், எனக்கு புடிச்ச சாப்பாடு, இரண்டு பேர் இனிசியல் போட்ட செயின் அப்புடின்னு உங்கப்ப அசத்திட்டர்னு சொல்லிட்டு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

5) சிம்ம ராசி (லக்ன) மாப்பிள்ளை : இங்க பாரு புள்ள கல்யாணத்துக்கு முன்னாடி உங்கப்ப சொன்னமாதிரி 5 பவுன் செயின் எனக்கு புடிச்ச ரெமெண்ட் பேண்ட் சர்ட் அப்புரம் ஹீரோ பைக் வாங்கி தாரலனா நான் தலை தீபாவளிக்கு வரமாட்டேன். என் உங்கவீட்டுல கொஞ்சம் கூட குறையக்கூடாது. அப்புரம் நான் பாட்டுக்கு எதாவது டூருக்கு போயிடுவேன் பாத்துக்கோ அப்படின்னு சொல்லிட்டு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

6) கன்னி ராசி (லக்ன) மாப்பிள்ளை : செல்லம் எனக்கு உங்க வீடு கொன்ஜம் அன்இசியா இருக்குது. சீக்கிரம் நம்ம வீட்டுக்கு போன நல்ல இருக்கும். ரோமுக்குள்ளவே அடஞ்சி இருக்க போர் அடிக்குது டியர். உங்க ஊர் கடைசியில் இருக்குற ஆற்றோரம் போய் ஜாலியா பேசிட்டு இருந்துட்டு சாப்பாட்டு டைம்கு வரலாம். எனக்கு புடிச்சதா உங்க அம்மாவை சமைச்சி வைக்க சொல்லிட்டு வா அப்படின்னு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

7) துலாம் ராசி (லக்ன) மாப்பிள்ளை : அம்முகுட்டி உங்கப்ப தலை தீபாவளிக்கு டிரசுக்கு கண்ணாபின்னான்னு செலவு பன்னிட போறாறு. எங்கிட்ட பணமா தரசொல்லி நான் எ க்கு புடிச்ச மாதிரி சிக்கனமா டிரஸ் எடுத்துக்கிறேன். பட்டாசுக்கு உரிய பணம், பவுண் காசு எல்லாம் பணமா தர சொல்லு (வியாபாரி யாஸ்சே) அத வச்சி வீட்டோட இ,எம்.ஐ. கட்டிடுவேன் அப்படின்னு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

8) விருச்சக ராசி (லக்ன) மாப்பிள்ளை : ஏண்டி என் ராஜீ குட்டி நம்ம தலை தீபாவளிக்கு ஜாக்பாட் அடிச்ச மாதிரி உங்கப்ப எனக்கு 5 பவுன் செயின் 1 பவுன் மோதிரம் போட்டு எனக்கு இன்ப அதிர்ச்சி தந்துட்டாரு. அதனால எனக்கு 1 கோட்டர் அடிச்ச தான் தீபாவளி கல கட்டும். அதனால நீ எனக்கு மட்டன் பிரியாணி பன்னிவை நான் கோட்டர் அடிச்சிட்டு வரேன் அப்படின்னு தலை தீபாவளியை கோட்டர்லையும் கட்டில்லையும் ஜாலியாக கொண்டாடுவார்கள்.

9) தனுசு ராசி (லக்ன) மாப்பிள்ளை : தலை தீபாவளி அதுவுமா நல்லெண்ணெய் தேச்சி குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்து பயபக்தியோட பட்டாசு வெடிச்சி கொண்டாடுவார்கள். தலை தீபாவளிக்கு என்ன முறையோ அதமட்டும் செய்ய சொல்லு ஊரு உலகம் எதும் சொல்லிட கூடாது இல்லையா அதுக்காக தான் நான் சொல்லுறேன். உங்க அக்காவுக்கு என்ன தலை தீபாவளி சீர் செஞ்சாங்களோ அத செஞ்சாலே போதும்னு சொல்லிட்டு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

10) மகர ராசி (லக்ன) மாப்பிள்ளை : தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளை தனக்கு என்ன என்ன தேவையோ கூச்சபடாம லிஸ்ட் போட்டு குடுத்துட்டு ஜாலியாக மாமனார் வீட்டுல கௌரவமாக படாபோபத்தொட இருப்பங்க. தனக்கு பிடிச்ச ஸ்வீட்ச சாப்பிட்டுடே நல்ல விசயங்களை பேசிட்டே மனைவி குடும்பதோட ஒருத்தர ஜாலியா தலை தீபாவளியை ஜாலியாக கொண்டாடுவார்கள்.
11) கும்ப ராசி (லக்ன) மாப்பிள்ளை : தான் நினைச்ச மாதிரி புது பொண்ணு (பொண்டாட்டி), புது காரு, புது டிரசு, புது வாட்சு, புது செயுனு, புது மோதிரமுன்னு தான் நினைச்ச தெல்லாம் தலை தீபாவளி சீரா தந்த மாமனாரை மனசுல நினைச்சி சந்தோச படுவங்க. தீபாவளி ரிலீஸ் படத்த ரிசர்வ் பன்னி மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தோட போயி பாத்து குதுகுலமா தலை தீபாவளியை ஜாலியாக கொண்டாடுவார்கள்.

12) மீன ராசி (லக்ன) மாப்பிள்ளை : பொண்டாட்டியை மாமனார் வீட்டுல கட்டில்ல சந்தோச படுத்தி தூங்க வச்சிட்டு. மாமனார் தனக்கு வங்கின டிரஸ், மோதிரம், செயின் எல்லாத்தையும் யாருக்கு தெரியாம போட்டுபார்த்து சந்தோச படுவாங்க. தலை தீபாவளியை மாமனார் வீட்டுல்ல நல்ல தூங்கி சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து சொந்தகாருங்க வீட்டுக்கு ஒவ்வொன்னா போயி பார்த்து ஜாலியா தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

விலைமதிப்பில்லாத உனது மனைவியை
பெற்று வளர்த்து ஆளாக்கி தந்தவரிடம்
வரதட்சனை என கேட்டு மணவாழ்வை சீரழிக்காமல்
அவர்கள் மகிழ்ச்சியுடன் தருவதை ஏற்றால்
வாழ்க்கை வசந்தம் ஆகும்
அனைவருக்கும் மகிழ்ச்சியான் தீபாவளி வாழ்த்துக்கள் !
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

சனி, 20 ஜூன், 2015

12 Rasi Ganapathi_12 ராசி கணபதி

உங்கள் காரியம் தடையின்றி வெற்றி பெற
அருள்பாளித்துஅதிர்ஷ்டம் அளிக்கும்
12 ராசிக்கான கணபதி உருவங்கள்
மற்றும் மந்திரங்கள்
(பக்தி கருதுகோள்)
ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது
நினைவுக்கு வருபவர் கடவுள்
அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்
பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
நன் உடலில் உள்ள (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனகதம், விசுத்தி, ஆக்நா) எனும் 6 ஆதாரங்களில் மூலாதரமாக விளங்கும் கணபதிக்கு எண்ணற்ற உருவங்கள் உள்ளன அவற்றில் 32 திவ்ய வடிவங்கள் முக்கியமானவை. அதில் 12 ராசிக்கு நன்மை அளிக்கும் 12 திவ்ய உருவங்களை அந்தந்த ராசிகாரர்கள் அந்த திவ்ய உருவங்களை மனதில் தியானித்து மூலமந்திரம் சொல்லி வழிபட்டு உங்கள் செயல்களை தொடங்க சகல விக்னங்களும் நீங்கி அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
12 ராசி கணபதிக்கான மூல மந்திரங்கள்
1. மேஷம் இராசி / இலக்கிணம் : விக்ன கணபதி :
ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா
2. ரிஷபம் இராசி / இலக்கிணம் : லக்ஷ்மி கணபதி :
ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம் ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !
3. மிதுனம் இராசி / இலக்கிணம் : த்விஜ கணபதி
ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ தந்ய
4. கடகம் இராசி / இலக்கிணம் : வித்யா கணபதி :
ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா
5. சிம்மம் இராசி / இலக்கிணம் : ஸிம்ஹ கணபதி
வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம் தக்ஷே விதத்தே கரை: வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம்
ஸந்மஞ்ஜரீ சாபயம் ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந: ஸங்கேந்துகௌர:
ஸூப: தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி: பாயாதபாயாத் ஸந:
6. கன்னி இராசி / இலக்கிணம் : ருணமோட்ச கணபதி :
ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்
7. துலாம் இராசி / இலக்கிணம் : நிருத்த கணபதி
ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:
8. விருட்சகம் இராசி / இலக்கிணம் : உச்சிஷ்ட கணபதி :
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா
9. தனுசு இராசி / இலக்கிணம் : பக்த கணபதி
நாளிகேராம்ர- கதளீ குடபாயாஸ- தாரிணம்
சரச்சந்த்ராய- வபுஷம் பஜே பக்தகணாதிபம்
10. மகரம் இராசி / இலக்கிணம் : வீர கணபதி :
ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்
11. கும்பம் இராசி / இலக்கிணம் : விஜய கணபதி :
ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா
12. மீனம் இராசி / இலக்கிணம் : யோக கணபதி :
ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:
இந்த மந்திரத்தை முழுமனதுடன் சொன்னால் 16 பேறும் பெற்று பேரானந்த பெருவாழ்வு வாழலாம். சகல நன்மையும் பெறலாம்
முயன்று பாருங்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty