வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

Astro Marichetty அவர்களுக்கு ஜோதிஷ மஹாமேரு விருது

நாமக்கல் மாவட்ட ஜோதிடர்கள் சங்கம்
5 ம் ஆண்டு துவக்க விழாவில்
திரு இளம்பிள்ளை E.A.மாரிசெட்டி அவர்களுக்கு
ஜோதிஷ மஹாமேரு  விருது வழங்கி கௌரவிக்கபட்டது

12 ராசி (லக்கின) காரர்கள் எழுதும் ஸ்டையில்

12 ராசி (லக்கின) காரர்கள் எழுதும் ஸ்டையில்
(கற்பனை கருதுகோள் பொதுபலன்)


1) மேச ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக வேகமாகவும், அதிக அழுத்தம் இல்லாமலும், எழுத்துக்கள் உயரமாகவும் மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். இடத்திற்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துகள் உயரமாகவும் நீள் வட்ட வடிவிலும் எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

2) ரிஷபம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து அழகாகவும், பொறுமையாகவும் அதிக அழுத்தம் கொடுத்து எழுத்துக்கள் குட்டையாகவும் வட்ட வடிவமாகவும் மற்றவர்களை வசிகரிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துகள் குட்டையாகவும் எழுத்து முடிவு ஸ்ரோக் வட்டமாக இருக்கும்படி எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

3) மிதுனம் ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து வித்தியாசமாவும், தனித்துவமாகவும், அழுத்தமாகவும், எழுத்துக்கள் ஏற்ற இறக்கத்துடன் ஸ்டையிலாக மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் ஏற்ற இறக்கத்துடன் ஸ்டையில் லெட்டரில் விதியாசமாக எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

4) கடகம் ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக வேகமாகவும், அதிக அழுத்தம் இல்லாமலும், எழுத்துக்கள் உயரமாகவும் மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் வட்டமும் கூர்மையும் கலந்ததாக இருக்கும். எழுத்தில் பாதி கூர்மையும், பாதி வட்ட வடிவம் கொண்டதாக எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

5) சிம்மம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து வேகமாகவுன், அழுத்தமில்லாமலும் சமமாகவும் நேர்த்தியாகவும் சுருக்கெழுத்தாகவும் தனித்துவமாகவும் எழுதுபவர்கள். தேவைக்கெற்ப அழகாக எழுதுபவர்கள். அதிர்ஷ்ட ஸ்டார் குறியீடுகள் அடங்கிய எழுத்துக்களை அடிக்கடி எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

6) கன்னீ ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து வேகமாகவும், அதிக அழுத்தமாகவும், எழுத்துக்கள் உயரம் குறைவாகவும், அகலமாக மற்றவருக்கு புரியாதபடி எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் அகலமாகவும் உயரம் குறைவாகவும் கூர்மையான எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

7) துலாம் ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக சீரான வேகத்தோடு அதிக அழுத்தமில்லாமல் ஒழுங்காக உயரமான எழுத்துகளை மற்றவர் எளிதில் படிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். இறைசின்னங்களுடன் உயரமான எழுத்துக்களை நீள் சதுர வடிவில் எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

8) விருச்சகம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து மெதுவாகவும், அதிக அழுத்தமாகவும், குட்டையாகவும் கூர்மை இல்லமலும் மற்றவர் சற்று கஷ்டபட்டு படிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். குட்டை எழுத்துக்களில் மேல் இருந்து கீழ்வரும் ஸ்ரோக் திக்காகவும் கீழ் இருந்து மேலே போகும் ஸ்ரொக் மெலிதாகவும் இருக்குமாறு எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

9) தனுசு ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து சீரான வேகத்தோடு அதிக அழுத்தமில்லாமல் ஒழுங்காக குட்டையாகவும் கூர்மை இல்லமலும் மற்றவர் எளிதில் படிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். தனித்துவமான எழுத்துகளின் முடிவு கடிகார எதிர்சுழற்சியாக அமையும்படியும் புள்ளிக்கு பதில் சிறு வட்டம் போடுவது போல் எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

10) மகரம் ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக மெதுவாகவும், அதிக அழுத்தமில்லாமல் ஒழுங்காக எழுத்துக்கள் உயரமாகவும் மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்தும் வேகத்தை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் கூர்மை இல்லாமல் உயரமாக நீள்வட்ட வடிவில் எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

11) கும்பம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து வேகமாகவும், அதிக அழுத்தமாகவும், எழுத்துக்கள் உயரம் குறைவாகவும், அகலமாக மற்றவருக்கு புரியும்படி எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். கூர்மையான உயரம் குறைவான வலது சுழற்சி எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.
12) மீனம் ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து சீரான வேகத்தோடு அழகாகவும் சம உயரத்திலும் அதிக அழுத்தமில்லாமல் மற்றவர் பாராட்டும் படி இடம் விட்டு எழுதுபவர்கள். மனோ நிலை மாறினாலும் எழுதும் எழுத்தும் எழுதும் விதமும் மாறாது. அழகான பூ பொன்ற வடிவ ஸ்டையில் எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

எண்ணும் எழுத்தும் கண் என தகும்
உங்கள் எழுத்து வடிவம் நடை ஆகியவற்றை மாற்றினால்
உங்கள் ஆழ்மனம் மாற்றம் அடைந்து
உங்கள் தலைஎழுத்து மாறும்
ஏன்னா கையெழுத்துமாதிரி தான்
தலை எழுத்து இருக்குமுன்னு சொல்லுவாங்க
அது நிஜம் தான்
உங்கள் கையெழுத்து வடிவம் மாறின
15 நாள்ல வித்தியாசம் தெரியும்
முயன்று பாருங்கள்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

உங்கள் ராசியும் (லக்கினமும்) அதன் அதிர்ஷ்ட தெய்வமும்

உங்கள் ராசியும் (லக்கினமும்)
அதன் அதிர்ஷ்ட தெய்வமும்
காலையில் எழுந்த உடன் தனக்கு பிடித்த தெய்வத்தை அல்லது
நமது முன்னோர்கள் வழிபட்ட தெய்வத்தை வணங்கி
நமது அன்றாட காரியங்களை செய்தால் நலமுடன் இருக்கும்.
அதேபோல் நமது ராசி அல்லது லக்கின
அதிர்ஷ்ட தெய்வத்தை வணங்கி வந்தால்
தங்கள் காரியம் வெற்றி அடைய வழிவகுக்கும்.


வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015


12 ராசி (லக்கின) காரர்கள் காதலை
சொல்லவேண்டிய இடம் / விதம்

(கற்பனை கருதுகோள் கவிதை பொதுபலன்)
(காதலர் தின ஸ்பேஷல்) 
அனைவருக்கும் காதலர் தின
நல்வாழ்த்துக்கள் !!!!!!!
(பிப்ரவரி 14)
1) மேச ராசி (லக்கின) காரர்கள் :
மலை பிரதேசம், டூரிஸ்ட் பிளேஸ், கோட்டை, குகை, பொழுது போக்கு இடங்களில் காதலை சொல்லாம்.
காதலை கவிதையாகவோ, வர்ணனையாகவோ சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
2) ரிஷபம் ராசி (லக்கின) காரர்கள் :
பாதுகாப்பான இடத்தில், அனாதை ஆஸ்ரமாம், வேலை செய்யும், மறைவான இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
காதலை ஒரு போது சேவையுடன் சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
3) மிதுனம் ராசி (லக்கின) காரர்கள் :
கடை வீதியில், ஜவுளிகடை, பேன்ஸி ஸ்டோர், ஜூவல்லரி ஷாப் போன்ற இடத்தில் நண்பர்களுடன் காதலை சொல்லலாம்.
காதலிக்கு அழகிய அவளுக்கு பிடித்த அன்பளிப்புடன் காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
4) கடகம் ராசி (லக்கின) காரர்கள் :
பாதுக்கான ஓதுக்கு புறத்தில் நீர் நிலைக்கு அருகில், சர்க்கஸ், ரேஸ், விளையாட்டு நடக்கும் இடம் அருகில் காதலை சொல்லாம்.
உங்கள் காதலி பார்க்கும்படி எதவது ஒரு சாதனை / சாகசம் செய்து காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

5) சிம்மம் ராசி (லக்கின) காரர்கள் :
கோவில் அருகில், புனித காரியம் நடக்கும் இடம் அருகில், தானம் தர்மம் செய்யும் இடங்களின் அருகில் காதலை சொல்லாம்.
புனிதமான இறை சின்னத்துடன் கூடிய காதல் பரிசு கொடுத்து காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.


6) கன்னீ ராசி (லக்கின) காரர்கள் :
தொழில் கூடங்கள் இருக்கு இடம் அருகில், நீர் நிலைக்கு அருகில், கௌரவமான இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் தொழில் கௌரவம், சம்பளம் ஆகியவற்றுடன் கொடுத்து காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
7) துலாம் ராசி (லக்கின) காரர்கள் :
உங்களுக்கு பிடித்த இடம், கும்பாபிசேகம், ஹோமம் நடக்கும் இடங்கள், நீர் கரை உள்ள இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் சாதனையுடன், நல்ல பரிசுடன் காதல் பரிசு கொடுத்து காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

8) விருச்சகம் ராசி (லக்கின) காரர்கள் :
கடற்கரைக்கருகில், பீச், பொழுது போக்கு இடம், மருத்துவ மனை, சேவை மையம் போன்ற இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் கற்பனை கனவுகளை அழகுடன் வெளிப்படுத்தி காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

9) தனுசு ராசி (லக்கின) காரர்கள் :
பகல் பொழுது காடு, வனம், இயற்கை சூழல் உள்ள இடம், தனிமையான இடம், போன்ற இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் அறிவையும், தன்னம்பிக்கையையும் உங்கள் காதலி புரிந்து கொள்ளும்படி காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
10) மகரம் ராசி (லக்கின) காரர்கள் :
நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயி நல்ல உணவு, ஐஸ்கிரீம், கூல் டிரிங்க், காபி சாப்புடுற இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் பண பலத்தையும் பேச்சாற்றலையும் உங்கள் காதலி புரிந்து கொள்ளும்படி காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

11) கும்பம் ராசி (லக்கின) காரர்கள் :
சினிமா தியேட்டர், பீச், விளையாட்டு மைதானம், ஜன நெருக்கம் அதிகம் உள்ள இடம், பஸ், டிரைன், போன்ற இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் காதலை நல்ல கிரீட்டிங்க் கார்டி, போனில், உங்கள் காதலிக்கு மட்டும் புரியும் படி இரட்டை அர்த்ததில் சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
12) மீனம் ராசி (லக்கின) காரர்கள் :
உங்க வீட்டுக்கோ அல்லது நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயி நல்ல உணவு சாப்பிட்ட பின் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் சேவை மனப்பன்மை, அன்பு பாசம் ஆகிவற்றோடு காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

நல்ல காதல் நல்ல சமுதாயத்தை உருவாகும்
தெளிவற்ற காதல் வாழ்க்கையையும் குடும்பத்தையும் சீரழிக்கும்.
காதலை சொல்லும் முன் உங்கள் குடும்பத்தையும் பெற்றோரையும்
சிந்தித்து பின் காதலை சொல்லுங்கள்.
அழகை பார்க்காமல் உள்ளதை பார்த்து காதலியுங்கள்
அப்போது தான் காதலிக்கும் போது இருக்கும் அன்பு
திருமணம் வரை நீடிக்கும்
வாழ்க வளமுடன்.
உண்மை காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty
http://jothidaulagam.blogspot.in/நவகிரகமும் மருத்துவ முறையும் (கருதுகோள் ஜோதிடம்)நவகிரகமும் மருத்துவ முறையும்
(கருதுகோள் ஜோதிடம்)
சர (மேசம், கடகம், துலாம், மகரம்) ராசி உடலை குறிக்கும்
ஸ்திர (ரிஷபம், சிம்மம், விருச்சகம், கும்பம்) ராசி உயிரை குறிக்கும்
உபய (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) ராசி ஆன்மாவை குறிக்கும்
சனி நோயாளியை குறிக்கும்
ராகு நோயினால் ஏற்படும் பிரச்சனையை குறிக்கும்
செவ்வாய் மருந்தை குறிக்கும்
குரு நோயிலிருந்து விடுபடுவதை குறிக்கும்
சூரியன் மருத்துவரை குறிக்கும்
சூரியன் + சூரியன் = பொது மருத்துவம், இயற்கை மருத்துவம், யோக மருத்துவம்,
சூரியன் + சந்திரன் = உணவு மருத்துவம், எண்ணெய் மருத்துவம் (ஆயுர்வேதம்)
சூரியன் + செவ்வாய் = ரணசிகிச்சை (ஆங்கில மருத்துவம்), அக்கு பன்சர் மருத்துவம்
சூரியன் + புதன் = ஹோமியோபதி மருத்துவம்
சூரியன் + குரு = மனோதத்துவ மருத்துவம்
சூரியன் + சுக்கிரன் = பாலியல் மருத்துவம், மலர் மருத்துவம், வண்ணமருத்துவம்,
சூரியன் + சனி = சித்தமருத்துவம், வர்ம வைத்தியம்
சூரியன் + ராகு = அசைவ உணவு மருத்துவம் (யுனானி மருத்துவம்), மந்திரீக மருத்துவம், பிராண சிகிச்சை,
சூரியன் + கேது = விஷ வைத்தியம், மயக்க மருத்துவம், மெஸ்மெரிசம், ஹிப்னாடிச மருத்துவம்
இதை பயன்படுத்துவது எப்படி
6 ம் பாவம் நோய்,
அதனால் ஏற்படும் வலி வேதனை 8ம் பாவம்
அதற்கு நாம் செல்லும் மருத்துவமனை 12ம் பாவகம்
நோயிலிருந்து குணமாவதை 5 ம் பாவகம் காட்டும்
ஆகவே 5ம் பாவாதிபதி நின்ற நட்சத்திரதிபதிக்குரிய மருத்துவம் செய்தால் நோய் குணமாகும்.உதாரணம் மீன லக்கினம் 5 ம் பாவதிபதி சந்திரன் விருச்சகத்தில் கேட்டை நட்சத்திரத்தில் இருந்தால்
அவருக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் நோய் குணமாகும்.
அனுபவத்தில் ஆய்வு செய்து பாருங்கள்.
சுத்தம் சுகாதரம் தரும்
அசுத்தம் நோயை உருவாக்கும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
Astro Marichetty
http://jothidaulagam.blogspot.in/