சனி, 7 நவம்பர், 2015

12 ராசி (லக்ன) மாப்பிள்ளை தலை தீபாவளி கொண்டாடும் விதம்.


தலை தீபாவளி ஸ்பெஷல்
12 ராசி (லக்ன) மாப்பிள்ளை
தலை தீபாவளி கொண்டாடும் விதம்.
(கற்பனை கருதுகோள்)

1) மேச ராசி (லக்ன) மாப்பிள்ளை : ஏண்டி எனக்கு தலை தீபாவளியா இல்ல உங்க அக்கா புருஷணுக்கு தலை தீபாவளியா. எனக்கும் அவனுக்கும் ஒரேமாதிரி டிரஸ் உங்கப்பன் எடுத்து இருக்குறான். என்னை அவமானபடுத்தவே இந்த தலைதீபாவளிக்கு உங்கப்பன் கூப்புட்டு இருக்கான அப்படின்னு எதாவது காரணத்தை தேடி சண்டபோட்டுட்டே தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

2) ரிசப ராசி (லக்ன) மாப்பிள்ளை : செல்லம் உங்கப்பா தலை தீபாவளிக்கு 3 பவுண்ல செயின் போடுவார்னு பாத்த பொசுக்குன்னு உன்பேர் இனிசியல் போட்ட அரை பவுண் மோதிரம் தான் போட்டு இருக்காரு. செரி அடுத்த பண்டிகைக்கு பாத்துகொள்ளலாம். மாமியார் நல்ல வாய்க்கு ருசியாக சமைச்சி வச்சி இருக்காங்க அத சாப்பிட்டாவது தீபாவளியை கொண்டாடலாம்னு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

3) மிதுனம் ராசி (லக்ன) மாப்பிள்ளை : தலை தீபாவளிய உங்கப்ப தடபுடலா ஏற்பாடு பண்ணி இருக்கார் சூப்பர். ஏன்ன தீபாவளி ரிலீஸ் படத்துக்கு 2 டிக்கெட் ரிசர்வ் பன்னீருந்த சூப்பரோ சூப்பரா இருந்து இருக்கும். இப்பமட்டும் என்ன உங்க தம்பிகிட்ட சொல்லி 2 டிக்கெட் வாங்க சொல்லு ஏன்ன எந்த டீவியிலும் நல்ல புரகராம் இல்ல அப்படின்னு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

4) கடகம் ராசி (லக்ன) மாப்பிள்ளை : அன்பே உண்மைய சொல்லனுமுன்ன என் குடும்பத்தவிட உங்க குடும்பத்த எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு எல்லாம் என் மேல ரொம்ப பாசமா இருக்குறாங்க விழுந்த்து விழுந்து கவனிக்கிறாங்க. எனக்கு புடிச்ச டிரஸ், எனக்கு புடிச்ச சாப்பாடு, இரண்டு பேர் இனிசியல் போட்ட செயின் அப்புடின்னு உங்கப்ப அசத்திட்டர்னு சொல்லிட்டு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

5) சிம்ம ராசி (லக்ன) மாப்பிள்ளை : இங்க பாரு புள்ள கல்யாணத்துக்கு முன்னாடி உங்கப்ப சொன்னமாதிரி 5 பவுன் செயின் எனக்கு புடிச்ச ரெமெண்ட் பேண்ட் சர்ட் அப்புரம் ஹீரோ பைக் வாங்கி தாரலனா நான் தலை தீபாவளிக்கு வரமாட்டேன். என் உங்கவீட்டுல கொஞ்சம் கூட குறையக்கூடாது. அப்புரம் நான் பாட்டுக்கு எதாவது டூருக்கு போயிடுவேன் பாத்துக்கோ அப்படின்னு சொல்லிட்டு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

6) கன்னி ராசி (லக்ன) மாப்பிள்ளை : செல்லம் எனக்கு உங்க வீடு கொன்ஜம் அன்இசியா இருக்குது. சீக்கிரம் நம்ம வீட்டுக்கு போன நல்ல இருக்கும். ரோமுக்குள்ளவே அடஞ்சி இருக்க போர் அடிக்குது டியர். உங்க ஊர் கடைசியில் இருக்குற ஆற்றோரம் போய் ஜாலியா பேசிட்டு இருந்துட்டு சாப்பாட்டு டைம்கு வரலாம். எனக்கு புடிச்சதா உங்க அம்மாவை சமைச்சி வைக்க சொல்லிட்டு வா அப்படின்னு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

7) துலாம் ராசி (லக்ன) மாப்பிள்ளை : அம்முகுட்டி உங்கப்ப தலை தீபாவளிக்கு டிரசுக்கு கண்ணாபின்னான்னு செலவு பன்னிட போறாறு. எங்கிட்ட பணமா தரசொல்லி நான் எ க்கு புடிச்ச மாதிரி சிக்கனமா டிரஸ் எடுத்துக்கிறேன். பட்டாசுக்கு உரிய பணம், பவுண் காசு எல்லாம் பணமா தர சொல்லு (வியாபாரி யாஸ்சே) அத வச்சி வீட்டோட இ,எம்.ஐ. கட்டிடுவேன் அப்படின்னு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

8) விருச்சக ராசி (லக்ன) மாப்பிள்ளை : ஏண்டி என் ராஜீ குட்டி நம்ம தலை தீபாவளிக்கு ஜாக்பாட் அடிச்ச மாதிரி உங்கப்ப எனக்கு 5 பவுன் செயின் 1 பவுன் மோதிரம் போட்டு எனக்கு இன்ப அதிர்ச்சி தந்துட்டாரு. அதனால எனக்கு 1 கோட்டர் அடிச்ச தான் தீபாவளி கல கட்டும். அதனால நீ எனக்கு மட்டன் பிரியாணி பன்னிவை நான் கோட்டர் அடிச்சிட்டு வரேன் அப்படின்னு தலை தீபாவளியை கோட்டர்லையும் கட்டில்லையும் ஜாலியாக கொண்டாடுவார்கள்.

9) தனுசு ராசி (லக்ன) மாப்பிள்ளை : தலை தீபாவளி அதுவுமா நல்லெண்ணெய் தேச்சி குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்து பயபக்தியோட பட்டாசு வெடிச்சி கொண்டாடுவார்கள். தலை தீபாவளிக்கு என்ன முறையோ அதமட்டும் செய்ய சொல்லு ஊரு உலகம் எதும் சொல்லிட கூடாது இல்லையா அதுக்காக தான் நான் சொல்லுறேன். உங்க அக்காவுக்கு என்ன தலை தீபாவளி சீர் செஞ்சாங்களோ அத செஞ்சாலே போதும்னு சொல்லிட்டு தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

10) மகர ராசி (லக்ன) மாப்பிள்ளை : தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளை தனக்கு என்ன என்ன தேவையோ கூச்சபடாம லிஸ்ட் போட்டு குடுத்துட்டு ஜாலியாக மாமனார் வீட்டுல கௌரவமாக படாபோபத்தொட இருப்பங்க. தனக்கு பிடிச்ச ஸ்வீட்ச சாப்பிட்டுடே நல்ல விசயங்களை பேசிட்டே மனைவி குடும்பதோட ஒருத்தர ஜாலியா தலை தீபாவளியை ஜாலியாக கொண்டாடுவார்கள்.
11) கும்ப ராசி (லக்ன) மாப்பிள்ளை : தான் நினைச்ச மாதிரி புது பொண்ணு (பொண்டாட்டி), புது காரு, புது டிரசு, புது வாட்சு, புது செயுனு, புது மோதிரமுன்னு தான் நினைச்ச தெல்லாம் தலை தீபாவளி சீரா தந்த மாமனாரை மனசுல நினைச்சி சந்தோச படுவங்க. தீபாவளி ரிலீஸ் படத்த ரிசர்வ் பன்னி மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தோட போயி பாத்து குதுகுலமா தலை தீபாவளியை ஜாலியாக கொண்டாடுவார்கள்.

12) மீன ராசி (லக்ன) மாப்பிள்ளை : பொண்டாட்டியை மாமனார் வீட்டுல கட்டில்ல சந்தோச படுத்தி தூங்க வச்சிட்டு. மாமனார் தனக்கு வங்கின டிரஸ், மோதிரம், செயின் எல்லாத்தையும் யாருக்கு தெரியாம போட்டுபார்த்து சந்தோச படுவாங்க. தலை தீபாவளியை மாமனார் வீட்டுல்ல நல்ல தூங்கி சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து சொந்தகாருங்க வீட்டுக்கு ஒவ்வொன்னா போயி பார்த்து ஜாலியா தலை தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

விலைமதிப்பில்லாத உனது மனைவியை
பெற்று வளர்த்து ஆளாக்கி தந்தவரிடம்
வரதட்சனை என கேட்டு மணவாழ்வை சீரழிக்காமல்
அவர்கள் மகிழ்ச்சியுடன் தருவதை ஏற்றால்
வாழ்க்கை வசந்தம் ஆகும்
அனைவருக்கும் மகிழ்ச்சியான் தீபாவளி வாழ்த்துக்கள் !
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

சனி, 20 ஜூன், 2015

12 Rasi Ganapathi_12 ராசி கணபதி

உங்கள் காரியம் தடையின்றி வெற்றி பெற
அருள்பாளித்துஅதிர்ஷ்டம் அளிக்கும்
12 ராசிக்கான கணபதி உருவங்கள்
மற்றும் மந்திரங்கள்
(பக்தி கருதுகோள்)
ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது
நினைவுக்கு வருபவர் கடவுள்
அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்
பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
நன் உடலில் உள்ள (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனகதம், விசுத்தி, ஆக்நா) எனும் 6 ஆதாரங்களில் மூலாதரமாக விளங்கும் கணபதிக்கு எண்ணற்ற உருவங்கள் உள்ளன அவற்றில் 32 திவ்ய வடிவங்கள் முக்கியமானவை. அதில் 12 ராசிக்கு நன்மை அளிக்கும் 12 திவ்ய உருவங்களை அந்தந்த ராசிகாரர்கள் அந்த திவ்ய உருவங்களை மனதில் தியானித்து மூலமந்திரம் சொல்லி வழிபட்டு உங்கள் செயல்களை தொடங்க சகல விக்னங்களும் நீங்கி அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
12 ராசி கணபதிக்கான மூல மந்திரங்கள்
1. மேஷம் இராசி / இலக்கிணம் : விக்ன கணபதி :
ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா
2. ரிஷபம் இராசி / இலக்கிணம் : லக்ஷ்மி கணபதி :
ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம் ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !
3. மிதுனம் இராசி / இலக்கிணம் : த்விஜ கணபதி
ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ தந்ய
4. கடகம் இராசி / இலக்கிணம் : வித்யா கணபதி :
ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா
5. சிம்மம் இராசி / இலக்கிணம் : ஸிம்ஹ கணபதி
வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம் தக்ஷே விதத்தே கரை: வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம்
ஸந்மஞ்ஜரீ சாபயம் ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந: ஸங்கேந்துகௌர:
ஸூப: தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி: பாயாதபாயாத் ஸந:
6. கன்னி இராசி / இலக்கிணம் : ருணமோட்ச கணபதி :
ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்
7. துலாம் இராசி / இலக்கிணம் : நிருத்த கணபதி
ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:
8. விருட்சகம் இராசி / இலக்கிணம் : உச்சிஷ்ட கணபதி :
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா
9. தனுசு இராசி / இலக்கிணம் : பக்த கணபதி
நாளிகேராம்ர- கதளீ குடபாயாஸ- தாரிணம்
சரச்சந்த்ராய- வபுஷம் பஜே பக்தகணாதிபம்
10. மகரம் இராசி / இலக்கிணம் : வீர கணபதி :
ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்
11. கும்பம் இராசி / இலக்கிணம் : விஜய கணபதி :
ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா
12. மீனம் இராசி / இலக்கிணம் : யோக கணபதி :
ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:
இந்த மந்திரத்தை முழுமனதுடன் சொன்னால் 16 பேறும் பெற்று பேரானந்த பெருவாழ்வு வாழலாம். சகல நன்மையும் பெறலாம்
முயன்று பாருங்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

சனி, 2 மே, 2015

சுப ஓரை, சுப ஹோரை கால அட்டவணை. கௌரி பஞ்சாங்கம்

சுப ஓரை ( பகல்) நேர அட்டவணை.
கௌரி பஞ்சாங்கம், ராகு எமகண்ட குளிகாதியர் காலங்கள்
மற்றும் ஓரையை வைத்து சுப நேரங்கள்
கண்டறிய உதவும் அட்டவணை.

பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty

புதன், 29 ஏப்ரல், 2015

மன்மத வருட நட்சத்திர கந்தாய பலன்

மன்மத வருட நட்சத்திர கந்தாய பலன்
(நட்சத்திர கந்தாய பலன் கண்டறியும் முறை.)

பஞ்சாங்கத்தில் போடும் நட்சத்திர கந்தாயம் கணிப்பது எப்படி என பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாளின் சைத்ர சுத்தபிரதமை தினத்தின் 1) திதி, 2) நாள், 3) நட்சத்திரம், 4) யோகம், 5) கரணம் என்று சொல்லும் பஞ்ச அங்கம் 5யையும் குறித்துக் கொள்ளவும்.
1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ
முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
உதாரணம் : மன்மத வருடத்துக்கு பரணி நட்சதிரத்திற்கு கந்தாயம் கண்டறிவோம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாள்.
மன்மத வருடத்தின் முந்தைய வருடமான ஜய வருடத்தின் பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதமை பங்குனி 07 (21-3-2015) சனிக்கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம், பிராம்யம் யோகம், பவம் கரணம் அன்றைய பஞ்ச அங்கங்கள் ஆகும்.
1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ = பிரதமை = 1
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ = சனி = 7
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ = உத்திரட்டாதி = 26
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ = பிராம்யம் = 25
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ = பவம் = 1
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ = 1+7+26+25+1 = 60 ஆகும்
ஊ = 67
பரணி நட்சதிரத்திற்கு முதற்கந்தாயம் கண்டறிவோம்.
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ = பரணி = 2
முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) = ((60+2)x3) / 8 = 186 / 8 இன் மீதம் = 2 ஆகும்.
பரணி நட்சதிரத்திற்கு நடுகந்தாயம் கண்டறிவோம்.
நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) = ((60+2)x7) / 3) = 434 / 3 இன் மீதம் = 2 ஆகும்.
பரணி நட்சதிரத்திற்கு கடை கந்தாயம் கண்டறிவோம்.
கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) = ((60+2)x3) / 5) = 186 / 5 இன் மீதம் = 1 ஆகும்.
இவ்வாறு மற்ற நட்சத்திரத்திற்கும் கண்டறியவும்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

உங்கள் ராசியும் உங்கள் மூளையின் செயல் திறனும் (கருது கோள் பொது பலன்)உங்கள் ராசியும் உங்கள் மூளையின் செயல் திறனும்
(கருது கோள் பொது பலன்)1) மேசம் (லக்கின) ராசிகாரர்களின்மூளையின் செயல் திறன் : 
கட்டளை, கணிதம், வாய்ப்பாடு, லாஜிக் மற்றும் தொழில் விசயங்களை பதிவு செய்யும் மூளை.

2) ரிசபம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
வர்ணஜாலத்தோடு கண்களால் பார்த்ததை, ரசித்தை, ருசித்த உணவின் சுவை தாய்மொழி அறிவு ஆகியவற்றை அப்படியே பதிவு செய்யும் மூளை.

3) மிதுனம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
முப்பரிமானமாக பார்க்கும் விஷயங்கள், ரசிக்கும் விஷங்களை, நுகரும் வாசனை அப்படியே பதிவு செய்யும் மூளை. ஒரே நேரத்தில் இருவேளைகள் செய்யும் மூளை.

4) கடகம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
அன்றாடம் பார்க்கும் ஒவியம், வரைபடம், தாங்கள் கற்பனை செய்யும் விசயம், உணர்வு பூர்வமாக அறியும் விசயங்களை பதிவு செய்யும் மூளை.

5) சிம்மம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தான் பார்த்த, கேட்ட, படித்த விசயங்களை தனது அறிவால் ஆராய்ந்து அதைவிட ஒருபடி மேலே போய் பதிவு செய்யும் மூளை.

6) கன்னி (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
பல்வேறு சப்தங்கள் இசை, பாடல் மற்றும் கேட்க்கும் விசயங்கள் மற்றும் ரகசியங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.

7) துலாம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தனது காதால் பலமுறை கேட்டதை, திரும்ப திரும்ப சொல்லிபார்த்ததை, மற்றவர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே பதிவு செய்யும் மூளை.

8) விருச்சகம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தனது ஐம்புலங்களால் உணர்ந்த உணர்வுப்பூர்வமான விசயங்கள் எழுதி பார்த்த, செய்து பார்த்த, சொல்லிப்பார்த்த, விஷயங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.

9) தனுசு (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
பலமொழி அறிவு, தான் படித்ததை, கேட்டதை. அறிந்ததை ஆய்வுக்கண்ணோடு கற்பனை செய்து அப்படியே பதிவு செய்யும் மூளை.
10) மகரம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
பலமுறை எழுதி பார்த்த, செய்து பார்த்த, சொல்லிப்பார்த்த, நினைவு படுத்தி பார்த்த விஷயங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.
11) கும்பம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
ராகத்தோடு லயமாக படிக்கும், கேட்கும் விஷயங்கள், மனமகிழ்ச்சியுடன் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சொன்ன, தொட்டுணர்ந்த விஷயங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.
12) மீனம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தான் கனவில் கண்ட விஷயம் கற்பனை மற்றும் பலமுறை பார்த்த கண்ணில் பட்ட சார்ட், பார்முலா, புத்தக பக்கங்கள் ஆகியாவை போட்டோ போல பதிவாகும்.

உயிர்கொண்டு இயங்கும் தாவரங்கள் சிறந்தவை !
அதனினும் உணர்வு கொண்டு இயங்கும் மிருகங்கள் சிறந்தவை !!
அதனினும் அறிவு கொண்டு இயங்கும் மனிதன் சிறந்தவன் !!!
அதனினும் தன் அறிவைக் கொண்டு தன் முன் நிற்பவரின் அறிவை அறிந்து அவருக்கு நல்வழி காட்டும் ஜோதிடன் சிறந்தவன் !!!!

அவ்வாறு மிருகத்திலிருந்து அறிவின்மூலம் வேறுபடும் மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிவை கொடுத்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்தவனாக இறைவன் படைத்துள்ளான். தனக்குள்ள அறிவின் மகத்துவத்தை அறிந்தால் ஞானம் கருதினும் கை கூடும்.
உங்களுக்குள் இருக்கும் வெற்றியாளனை உங்கள் லக்கினத்திலிருந்து அறிந்து அதன்படி முயன்றால்
நீங்கள் தான் விஞ்ஞானி / ஆய்வாளர் / பகுத்தறிவாளர் / ஓவியர் / எழுத்தாளர் / டாக்டர் / மெய்ஞானி / இசையமைப்பாளர் / பாடகர் எல்லாம்
அனைத்தும் உங்கள் வசம் .
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty

திங்கள், 13 ஏப்ரல், 2015

மன்மத வருட புத்தாண்டு பலன் ஆதாயம் விரையம். (ராசி பலன்)

மன்மத வருட புத்தாண்டு பலன்
ஆதாயம் விரையம்.
(ராசி பலன்)
முகனூல் நண்பர்கள் அனைவருக்கும் 
மன்மத வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!


பஞ்சாங்கத்தில் போடும் இராசிகளின் ஆதாயம் விரையம் கணிப்பது எப்படி என பார்ப்போம்.
1)ஆதாயம் விரையம் கண்டரிய வேண்டிய ராசிகளின் அதிபதிக்கு கதிர் தெரிய வேண்டும்.
2) அடுத்து அந்த ஆண்டின் இராஜா யார் என்பது தெரிய வேண்டும்.
3) அந்த ஆண்டின் இராஜா எப்படி கண்டு பிடிப்பது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாளின் அதிபதி அந்த ஆண்டின் இராஜா கிரகம் ஆகும். இது தெலுங்கு வருட பிறப்பு நாள் ஆகும்.
4) கிரக கதிர் செவ்வாய் =8, சுக்கிரன் = 21, புதன் = 17, சந்திரன் = 2, சூரியன் = 6, குரு = 19, சனி = 10 ஆகும்.
5) (((ஆதாயம் அறிய வேண்டிய ராசி அதிபதி கதிர் + அந்த ஆண்டு இராஜா கிரக கதிர்) X 3) + 5) / 15 இன் மீதம் ஆதாயம் ஆகும். மீதம் 0 வந்தால் 15 எனக் கொள்க.
6) மேற்கண்ட விடையின் ஈவை 3 ஆல் பெருக்கி அத்துடன் 5 யை கூட்டி வருவதை 15 ஆல் வகுக்க வரும் மீதன் விரயம் ஆகும். மீதம் 0 வந்தால் 15 எனக் கொள்க.
உதாரணம் மன்மத வருடத்துக்கு மேச, விருச்சக ராசியின் ஆதயம் விரயம் கண்போம்.
மன்மத வருடத்தின் இராஜா கண்டரிய மன்மத வருடத்தின் முந்தைய வருடமான ஜய வருடத்தின் பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதமை பங்குனி 07 (21-3-2015) சனிக்கிழமை ஆகும். ஆகவே மன்மத வருடத்தின் இராஜா = சனிபகவான் ஆவர்
.
ஆதயம் மேசம், விருச்சகம்
(((8+10)x3)+5)/15 = 59/15 இதன் மீதம் 14 ஆகவே ஆதாயம் 14 ஆகும்
ஈவு 3 இதை ((3X3)+5) / 15 இன் மீதி 14 ஆகும் ஆகவே விரையம் 14 ஆகும்.
ஆக மேசம், விருட்ச்சக ராசிகளின் ஆதாயம் 14 விரையம் 14 ஆகும்.
இதே போல் மற்ற ராசிக்கும் கண்டறியவும்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty

இனிய தமிழ் (மன்மத) புத்தாண்டு சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய தமிழ் (மன்மத) புத்தாண்டு 
சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !! 
வாழ்க வளமுடன்
AstroMarichetty

ஞாயிறு, 22 மார்ச், 2015

12 ராசிக்கான அதிர்ஷ்டம் அளிக்கும் ஆறுபடை ( 6+1 படை)முருகன் கோவில்

12 ராசிக்கான அதிர்ஷ்டம் அளிக்கும்
ஆறுபடை ( 6+1 படை)முருகன் கோவில்

‪#‎PalaniMuruganTemple‬ ‪#‎HinduTemple‬ ‪#‎MuruganTemple‬

ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது 
நினைவுக்கு வருபவர் கடவுள்
அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்
பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
கடவுளின்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
எனும் ஐந்தொழிலும் செய்யத்தெரிந்த
தமிழ் கடவுள் முருகனின் 7 படை வீடுகளில்
ஏந்த படை வீடு ஏந்த ராசிக்கு உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே அவரவர் ராசிக்குண்டன படை வீடு கோவிலுக்கு
சஷ்டி நாளிலோ உங்கள் நட்சத்திர நாளிலோ சென்றோ அல்லது
அந்த படை வீடு திருவுருவ படம் வைத்து
அதற்குண்டான மூலமந்திரம் சொல்லிவர
மனமது செம்மையாகி
உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.
முயன்று பாருங்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

சனி, 21 மார்ச், 2015

பைரவர் வரலாறு மற்றும் வழிபாடு முறை

 பைரவர் வரலாறு மற்றும் வழிபாடு முறை

(இளம்பிள்ளை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவில்
பைரவர் வழிபாட்டு குறிப்பிலிருந்து)
வாழ்க வளமுடன்.
AstroMarichetty
வியாழன், 19 மார்ச், 2015

12 ராசிக்குரிய பைரவர் வழிபாடு

12 ராசிக்குரிய பைரவர் வழிபாடு

தேய்பிறை அஷ்டமி என்றால் நினைவுக்கு வரும் கடவுள் பைரவர்.
அனைத்து சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக விளங்கும் பைரவர்
12 ராசி சக்கிரத்தின் ஜீவனாக விளங்குகிறார். 
அவரவர் ராசிக்குரிய பைரவரை அஸ்டமி நாளில்
வழிபட துன்பம் நீங்கி சுகவாழ்வு ஏற்படும்.
ஆகவே அவரவர் ராசிக்குண்டன பைரவரை உங்கள் நட்சத்திர நாளிலோ
தேய்பிறை அஷ்டமி நாளிலோ சென்றோ அல்லது
அந்த பைரவ மூர்த்தியின் திருவுருவ படம் வைத்து
அதற்குண்டான மூலமந்திரம் சொல்லிவர
மனமது செம்மையாகி உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.
முயன்று பாருங்கள் !!!
வாழ்க வளமுடன்.
AstroMarichetty

வெள்ளி, 13 மார்ச், 2015

உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள்

 உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள்
(கருதுகோள் பொது பலன்)
அனைத்து மகளிர்க்கும் எனது மனம் நிறைந்த
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !!!

1) மேசம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
அழகானவர், சரிசமமான அந்தஸ்து, கல்வி உள்ளவர், தன்னைப்போல் குணமுள்ளவர், கூட்டு சிந்தனையாளர், சுயதொழில் செய்பவர், வியாபாரிகள், கௌரவம் மிக்கவர், நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர், கட்டழகு உள்ளவர். வரவுக்குமேல் செலவு செய்பவர், மனைவவிக்கு முக்கியத்துவம் தருபவர், வரவு செலவு மனைவி கையில் இருக்கும்.

2) ரிசபம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
செயற்கையான அழகு உள்ளவர்கள், செயற்கையான பேச்சு உள்ளவர்கள், கொடூர குணம் உள்ளவர்கள், கஸ்டமான சாதனை செய்பவர்கள், சர்க்கஸ் காரர்கள், கார் & பைக் ரைடர்கள், பண பலம் உள்ளவர்கள், கொடூர தோற்றம் உள்ளவர்கள் மற்றும் தனது ரகசிய விஷயங்களுக்கு உதவுபவர். மனைவி வழி சொத்து வரும். மனைவியின் கை ஓங்கி இருக்கும்.


3) மிதுனம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
நம்பிக்கையாளர்கள், இறை நம்பிக்கையாளர்கள், விவேகம் மிக்கவர்கள், விசுவாசம் மிக்கவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சொத்து மிக்கவர்கள், , நூலாசிரியர்கள், தலைவர்கள், பேச்சாளர்கள், பக்தி தோற்றம் உள்ளவர்கள், பருத்த உடல் உள்ளவர்கள் மற்றும் தனக்கு நல்ல விஷயங்களை சொல்லித்தரும் குருவாக இருப்பார். மனைவி சொல்லே மந்திரம் என இருப்பர்.

4) கடகம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
கௌரவமான வேலையில் உள்ளவர்கள், கௌரவமான பதவி உள்ளவர்கள், , அந்தஸ்து மிக்கவர்கள், விருது பெற்றவர்கள், திறமை மிக்கவர்கள், உயர்ந்த பொறுப்பு உள்ளவர்கள், தன்னுடன் வேலைபார்பவர்கள். நல்ல தொழில் ஆலோசனை வழங்கும் மனைவி. மனைவியை தொழில் பார்ட்னராக இருந்து கணவனுக்கு உயர்வை தருவார்.
5) சிம்மம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
அறிவும், ஆதாயமும் கூடிய மனைவி, நட்புடன் பேசுபவர்கள், நம்பிக்கையாளர்கள், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர்கள், அதிர்ஸ்டசாலிகள், மற்றவரை மகிழ்விப்பவர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர். சேமிப்பாளர், மனைவி தனக்கு எப்போதும் ஆதாயமாக இருப்பார். வீண் செலவு செய்யமாட்டார்.
6) கன்னி (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
கல்வி மற்றும் அறிவுள்ளவர், ரகசியம் காப்பவர்கள், மறைமுக சிந்தனையாளர்கள், வெளி நாட்டவர்கள், கண்ணுக்கு தெரியதவர்கள், முதலீட்டாளர்கள், துப்பறிபவர்கள், மெலிந்த அழகான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் அதிகம் செலவாளி. ஈகோ குணம் உடையவர், ஆடம்பரம், பியூட்டி பார்லருக்கு அதிகம் செலவு செய்பவர்.

7) துலாம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
திடமான உடல் அமைப்பும், வேகமும் மிக்கவர், சுய சிந்தனையாளர்கள், செயல் திறன் மிக்கவர்கள், சக்தி மிக்கவர்கள், நல்ல நிறம், உயரம், உடல்வாகு, கௌரவம் மிக்கவர்கள், வீரம் மிக்கவர்கள், தான் சொல்வதை யோசிக்காமல் வேகமாக செய்பவர்கள். கணவனை அடக்கி ஆளும் திறன் பெற்றவர்கள். வீண் விரையம் செய்ய மாட்டார்கள்

8) விருச்சகம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
முக அழகு, கண் அழகு, மூக்கு அழகு உள்ளவர்கள், பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், ஞாபக சக்தி உள்ளவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், அழகான ஆடை அணிபவர்கள் மற்றும் தனக்கு தேவையான போது நிதியுதவி வழங்கும் மனைவியாக இருப்பார்கள். நல்ல நிதியமைச்சர். சிக்கனவாதி.

9) தனுசு (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
அழகான காதும், நீண்ட அழகான க்ழுத்தும் கொண்டவர்கள், இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம் உள்ளவர்கள், எழுத்தற்றல் மிக்கவர்கள், தகவல் தொடர்பாளர்கள், ஞாபக சக்தி மிக்கவர்கள்,, ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் மற்றும் தன்னை கணவன் புகழ்ந்து பேசினால் எதுவும் செய்வார்கள். செலவாளி.10) மகரம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
வட்ட முகம், அன்பும் அழகும் நிறைந்த முகம், அன்பு மிக்கவர்கள், பாசம் மிக்கவர்கள், நேசம் மிக்கவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், சேவை குணம் உள்ளவர்கள், தாயை போல் பாசம் உள்ளவர்கள், பரிசு வழங்குபவர்கள், அழகிய வீடு, வாகனம் உள்ளவர்கள், கொளு கொளு உடம்பு உள்ளவர்கள் மற்றும் தன்னிடம் அன்பாகவும் ஆதரவாகவும் பேசும் மனைவியாக இருப்பார்கள்.

11) கும்பம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
அழகும், அறிவும், மற்றவர் ரசிக்கும் தோற்றம் உள்ளவர், ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள், கலை ஞானம் மிக்கவர்கள், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், புகழ் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர்கள், சினிமா காரர்கள், இசை ஆர்வம் உள்ளவர்கள், அதிர்ஸ்டசாலிகள், நல்ல உடல் கட்டு உள்ளவர்கள். உங்கள் மனைவி  தலைமை பொறுப்பில் இருந்து உங்கள் காரியத்தை சாதித்து தருவார். செல்வம் மிக்கவர்.


12) மீனம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி  :
அழகானவர், அன்பானவர், பாதுகாப்பானவர், வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளிகள், தன்னம்பிக்கையாளர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள், கணவனிடம்  விசுவாசமாக இருப்பவர். வீண்விரையம் செய்யமாட்டார், கணவனுக்கு அடங்கி நடப்பவர். கணவனின் பாதி வேலைகளை செய்து வீட்டின் பாரத்தில் பங்கெடுத்துக்கொள்பவர்.

மனைவி என்பவள் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி
கணவனின் உணர்வையும் மனத்தையும் படிக்கும் ஆற்றல் பெற்றவள்
ஒவ்வொருவர் வெற்றிக்கு பின்னால் மனைவி இருக்கிறாள்
என்றால் அது மிகையாகாது.
எங்கோ பிறந்து தனது கணவனுக்கா உயிரையும் கொடுக்கும் மனைவியின்
மனதை புரிந்து வாழ்ந்தால் நமது வாழ்க்கை சொர்க்க புரி ஆகும்

வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty

வியாழன், 5 மார்ச், 2015

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான பன்னிரு பெருமாள்

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான
பன்னிரு பெருமாள்


ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது 
நினைவுக்கு வருபவர் கடவுள்
அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்
பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
கடவுளின்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
எனும் பஞ்ச காரியங்களில்
காக்கும் செயலை செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான பெருமாளின்
அவதாரத்தில் ஏந்த அவதாரம் ஏந்த ராசிக்கு உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே அவரவர் ராசிக்குண்டன அவதார பெருமாளின் கோவிலுக்கு உங்கள் நட்சத்திர நாளில் சென்றோ அல்லது
அந்த அவதார மூர்த்தியின் திருவுருவ படம் வைத்து
அதற்குண்டான மூலமந்திரம் சொல்லிவர
மனமது செம்மையாகி உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.
முயன்று பாருங்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

Astro Marichetty அவர்களுக்கு ஜோதிஷ மஹாமேரு விருது

நாமக்கல் மாவட்ட ஜோதிடர்கள் சங்கம்
5 ம் ஆண்டு துவக்க விழாவில்
திரு இளம்பிள்ளை E.A.மாரிசெட்டி அவர்களுக்கு
ஜோதிஷ மஹாமேரு  விருது வழங்கி கௌரவிக்கபட்டது

12 ராசி (லக்கின) காரர்கள் எழுதும் ஸ்டையில்

12 ராசி (லக்கின) காரர்கள் எழுதும் ஸ்டையில்
(கற்பனை கருதுகோள் பொதுபலன்)


1) மேச ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக வேகமாகவும், அதிக அழுத்தம் இல்லாமலும், எழுத்துக்கள் உயரமாகவும் மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். இடத்திற்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துகள் உயரமாகவும் நீள் வட்ட வடிவிலும் எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

2) ரிஷபம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து அழகாகவும், பொறுமையாகவும் அதிக அழுத்தம் கொடுத்து எழுத்துக்கள் குட்டையாகவும் வட்ட வடிவமாகவும் மற்றவர்களை வசிகரிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துகள் குட்டையாகவும் எழுத்து முடிவு ஸ்ரோக் வட்டமாக இருக்கும்படி எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

3) மிதுனம் ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து வித்தியாசமாவும், தனித்துவமாகவும், அழுத்தமாகவும், எழுத்துக்கள் ஏற்ற இறக்கத்துடன் ஸ்டையிலாக மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் ஏற்ற இறக்கத்துடன் ஸ்டையில் லெட்டரில் விதியாசமாக எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

4) கடகம் ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக வேகமாகவும், அதிக அழுத்தம் இல்லாமலும், எழுத்துக்கள் உயரமாகவும் மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் வட்டமும் கூர்மையும் கலந்ததாக இருக்கும். எழுத்தில் பாதி கூர்மையும், பாதி வட்ட வடிவம் கொண்டதாக எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

5) சிம்மம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து வேகமாகவுன், அழுத்தமில்லாமலும் சமமாகவும் நேர்த்தியாகவும் சுருக்கெழுத்தாகவும் தனித்துவமாகவும் எழுதுபவர்கள். தேவைக்கெற்ப அழகாக எழுதுபவர்கள். அதிர்ஷ்ட ஸ்டார் குறியீடுகள் அடங்கிய எழுத்துக்களை அடிக்கடி எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

6) கன்னீ ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து வேகமாகவும், அதிக அழுத்தமாகவும், எழுத்துக்கள் உயரம் குறைவாகவும், அகலமாக மற்றவருக்கு புரியாதபடி எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் அகலமாகவும் உயரம் குறைவாகவும் கூர்மையான எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

7) துலாம் ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக சீரான வேகத்தோடு அதிக அழுத்தமில்லாமல் ஒழுங்காக உயரமான எழுத்துகளை மற்றவர் எளிதில் படிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். இறைசின்னங்களுடன் உயரமான எழுத்துக்களை நீள் சதுர வடிவில் எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

8) விருச்சகம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து மெதுவாகவும், அதிக அழுத்தமாகவும், குட்டையாகவும் கூர்மை இல்லமலும் மற்றவர் சற்று கஷ்டபட்டு படிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். குட்டை எழுத்துக்களில் மேல் இருந்து கீழ்வரும் ஸ்ரோக் திக்காகவும் கீழ் இருந்து மேலே போகும் ஸ்ரொக் மெலிதாகவும் இருக்குமாறு எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

9) தனுசு ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து சீரான வேகத்தோடு அதிக அழுத்தமில்லாமல் ஒழுங்காக குட்டையாகவும் கூர்மை இல்லமலும் மற்றவர் எளிதில் படிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். தனித்துவமான எழுத்துகளின் முடிவு கடிகார எதிர்சுழற்சியாக அமையும்படியும் புள்ளிக்கு பதில் சிறு வட்டம் போடுவது போல் எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

10) மகரம் ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக மெதுவாகவும், அதிக அழுத்தமில்லாமல் ஒழுங்காக எழுத்துக்கள் உயரமாகவும் மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்தும் வேகத்தை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் கூர்மை இல்லாமல் உயரமாக நீள்வட்ட வடிவில் எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

11) கும்பம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து வேகமாகவும், அதிக அழுத்தமாகவும், எழுத்துக்கள் உயரம் குறைவாகவும், அகலமாக மற்றவருக்கு புரியும்படி எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். கூர்மையான உயரம் குறைவான வலது சுழற்சி எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.
12) மீனம் ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து சீரான வேகத்தோடு அழகாகவும் சம உயரத்திலும் அதிக அழுத்தமில்லாமல் மற்றவர் பாராட்டும் படி இடம் விட்டு எழுதுபவர்கள். மனோ நிலை மாறினாலும் எழுதும் எழுத்தும் எழுதும் விதமும் மாறாது. அழகான பூ பொன்ற வடிவ ஸ்டையில் எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

எண்ணும் எழுத்தும் கண் என தகும்
உங்கள் எழுத்து வடிவம் நடை ஆகியவற்றை மாற்றினால்
உங்கள் ஆழ்மனம் மாற்றம் அடைந்து
உங்கள் தலைஎழுத்து மாறும்
ஏன்னா கையெழுத்துமாதிரி தான்
தலை எழுத்து இருக்குமுன்னு சொல்லுவாங்க
அது நிஜம் தான்
உங்கள் கையெழுத்து வடிவம் மாறின
15 நாள்ல வித்தியாசம் தெரியும்
முயன்று பாருங்கள்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

உங்கள் ராசியும் (லக்கினமும்) அதன் அதிர்ஷ்ட தெய்வமும்

உங்கள் ராசியும் (லக்கினமும்)
அதன் அதிர்ஷ்ட தெய்வமும்
காலையில் எழுந்த உடன் தனக்கு பிடித்த தெய்வத்தை அல்லது
நமது முன்னோர்கள் வழிபட்ட தெய்வத்தை வணங்கி
நமது அன்றாட காரியங்களை செய்தால் நலமுடன் இருக்கும்.
அதேபோல் நமது ராசி அல்லது லக்கின
அதிர்ஷ்ட தெய்வத்தை வணங்கி வந்தால்
தங்கள் காரியம் வெற்றி அடைய வழிவகுக்கும்.


வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015


12 ராசி (லக்கின) காரர்கள் காதலை
சொல்லவேண்டிய இடம் / விதம்

(கற்பனை கருதுகோள் கவிதை பொதுபலன்)
(காதலர் தின ஸ்பேஷல்) 
அனைவருக்கும் காதலர் தின
நல்வாழ்த்துக்கள் !!!!!!!
(பிப்ரவரி 14)
1) மேச ராசி (லக்கின) காரர்கள் :
மலை பிரதேசம், டூரிஸ்ட் பிளேஸ், கோட்டை, குகை, பொழுது போக்கு இடங்களில் காதலை சொல்லாம்.
காதலை கவிதையாகவோ, வர்ணனையாகவோ சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
2) ரிஷபம் ராசி (லக்கின) காரர்கள் :
பாதுகாப்பான இடத்தில், அனாதை ஆஸ்ரமாம், வேலை செய்யும், மறைவான இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
காதலை ஒரு போது சேவையுடன் சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
3) மிதுனம் ராசி (லக்கின) காரர்கள் :
கடை வீதியில், ஜவுளிகடை, பேன்ஸி ஸ்டோர், ஜூவல்லரி ஷாப் போன்ற இடத்தில் நண்பர்களுடன் காதலை சொல்லலாம்.
காதலிக்கு அழகிய அவளுக்கு பிடித்த அன்பளிப்புடன் காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
4) கடகம் ராசி (லக்கின) காரர்கள் :
பாதுக்கான ஓதுக்கு புறத்தில் நீர் நிலைக்கு அருகில், சர்க்கஸ், ரேஸ், விளையாட்டு நடக்கும் இடம் அருகில் காதலை சொல்லாம்.
உங்கள் காதலி பார்க்கும்படி எதவது ஒரு சாதனை / சாகசம் செய்து காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

5) சிம்மம் ராசி (லக்கின) காரர்கள் :
கோவில் அருகில், புனித காரியம் நடக்கும் இடம் அருகில், தானம் தர்மம் செய்யும் இடங்களின் அருகில் காதலை சொல்லாம்.
புனிதமான இறை சின்னத்துடன் கூடிய காதல் பரிசு கொடுத்து காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.


6) கன்னீ ராசி (லக்கின) காரர்கள் :
தொழில் கூடங்கள் இருக்கு இடம் அருகில், நீர் நிலைக்கு அருகில், கௌரவமான இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் தொழில் கௌரவம், சம்பளம் ஆகியவற்றுடன் கொடுத்து காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
7) துலாம் ராசி (லக்கின) காரர்கள் :
உங்களுக்கு பிடித்த இடம், கும்பாபிசேகம், ஹோமம் நடக்கும் இடங்கள், நீர் கரை உள்ள இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் சாதனையுடன், நல்ல பரிசுடன் காதல் பரிசு கொடுத்து காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

8) விருச்சகம் ராசி (லக்கின) காரர்கள் :
கடற்கரைக்கருகில், பீச், பொழுது போக்கு இடம், மருத்துவ மனை, சேவை மையம் போன்ற இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் கற்பனை கனவுகளை அழகுடன் வெளிப்படுத்தி காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

9) தனுசு ராசி (லக்கின) காரர்கள் :
பகல் பொழுது காடு, வனம், இயற்கை சூழல் உள்ள இடம், தனிமையான இடம், போன்ற இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் அறிவையும், தன்னம்பிக்கையையும் உங்கள் காதலி புரிந்து கொள்ளும்படி காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
10) மகரம் ராசி (லக்கின) காரர்கள் :
நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயி நல்ல உணவு, ஐஸ்கிரீம், கூல் டிரிங்க், காபி சாப்புடுற இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் பண பலத்தையும் பேச்சாற்றலையும் உங்கள் காதலி புரிந்து கொள்ளும்படி காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

11) கும்பம் ராசி (லக்கின) காரர்கள் :
சினிமா தியேட்டர், பீச், விளையாட்டு மைதானம், ஜன நெருக்கம் அதிகம் உள்ள இடம், பஸ், டிரைன், போன்ற இடத்தில் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் காதலை நல்ல கிரீட்டிங்க் கார்டி, போனில், உங்கள் காதலிக்கு மட்டும் புரியும் படி இரட்டை அர்த்ததில் சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.
12) மீனம் ராசி (லக்கின) காரர்கள் :
உங்க வீட்டுக்கோ அல்லது நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயி நல்ல உணவு சாப்பிட்ட பின் உங்கள் காதலை சொல்லாம்.
உங்கள் சேவை மனப்பன்மை, அன்பு பாசம் ஆகிவற்றோடு காதலை சொன்னால் உங்கள் காதலிக்கு பிடிக்கும்.

நல்ல காதல் நல்ல சமுதாயத்தை உருவாகும்
தெளிவற்ற காதல் வாழ்க்கையையும் குடும்பத்தையும் சீரழிக்கும்.
காதலை சொல்லும் முன் உங்கள் குடும்பத்தையும் பெற்றோரையும்
சிந்தித்து பின் காதலை சொல்லுங்கள்.
அழகை பார்க்காமல் உள்ளதை பார்த்து காதலியுங்கள்
அப்போது தான் காதலிக்கும் போது இருக்கும் அன்பு
திருமணம் வரை நீடிக்கும்
வாழ்க வளமுடன்.
உண்மை காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty
http://jothidaulagam.blogspot.in/நவகிரகமும் மருத்துவ முறையும் (கருதுகோள் ஜோதிடம்)நவகிரகமும் மருத்துவ முறையும்
(கருதுகோள் ஜோதிடம்)
சர (மேசம், கடகம், துலாம், மகரம்) ராசி உடலை குறிக்கும்
ஸ்திர (ரிஷபம், சிம்மம், விருச்சகம், கும்பம்) ராசி உயிரை குறிக்கும்
உபய (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) ராசி ஆன்மாவை குறிக்கும்
சனி நோயாளியை குறிக்கும்
ராகு நோயினால் ஏற்படும் பிரச்சனையை குறிக்கும்
செவ்வாய் மருந்தை குறிக்கும்
குரு நோயிலிருந்து விடுபடுவதை குறிக்கும்
சூரியன் மருத்துவரை குறிக்கும்
சூரியன் + சூரியன் = பொது மருத்துவம், இயற்கை மருத்துவம், யோக மருத்துவம்,
சூரியன் + சந்திரன் = உணவு மருத்துவம், எண்ணெய் மருத்துவம் (ஆயுர்வேதம்)
சூரியன் + செவ்வாய் = ரணசிகிச்சை (ஆங்கில மருத்துவம்), அக்கு பன்சர் மருத்துவம்
சூரியன் + புதன் = ஹோமியோபதி மருத்துவம்
சூரியன் + குரு = மனோதத்துவ மருத்துவம்
சூரியன் + சுக்கிரன் = பாலியல் மருத்துவம், மலர் மருத்துவம், வண்ணமருத்துவம்,
சூரியன் + சனி = சித்தமருத்துவம், வர்ம வைத்தியம்
சூரியன் + ராகு = அசைவ உணவு மருத்துவம் (யுனானி மருத்துவம்), மந்திரீக மருத்துவம், பிராண சிகிச்சை,
சூரியன் + கேது = விஷ வைத்தியம், மயக்க மருத்துவம், மெஸ்மெரிசம், ஹிப்னாடிச மருத்துவம்
இதை பயன்படுத்துவது எப்படி
6 ம் பாவம் நோய்,
அதனால் ஏற்படும் வலி வேதனை 8ம் பாவம்
அதற்கு நாம் செல்லும் மருத்துவமனை 12ம் பாவகம்
நோயிலிருந்து குணமாவதை 5 ம் பாவகம் காட்டும்
ஆகவே 5ம் பாவாதிபதி நின்ற நட்சத்திரதிபதிக்குரிய மருத்துவம் செய்தால் நோய் குணமாகும்.உதாரணம் மீன லக்கினம் 5 ம் பாவதிபதி சந்திரன் விருச்சகத்தில் கேட்டை நட்சத்திரத்தில் இருந்தால்
அவருக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் நோய் குணமாகும்.
அனுபவத்தில் ஆய்வு செய்து பாருங்கள்.
சுத்தம் சுகாதரம் தரும்
அசுத்தம் நோயை உருவாக்கும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
Astro Marichetty
http://jothidaulagam.blogspot.in/

வெள்ளி, 30 ஜனவரி, 2015

உங்கள் பிளட் குரூப்பும் உங்கள் கேரக்டரும் : (பொது பலன் கருதுகோள்)

உங்கள் பிளட் குரூப்பும்
உங்கள் கேரக்டரும் :
(பொது பலன் கருதுகோள்)


A+ ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
நட்புடன் பேசுபவர்கள், நம்பிக்கையாளர்கள், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர்கள், அதிர்ஸ்டசாலிகள், மற்றவரை மகிழ்விப்பவர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர், வஞ்சகன், பொய்யன், முரடன், வழி நடப்பவன். பிறர்க்கு உதவுபவன். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள், கடுகடுப்பானவர், தனது கருத்தை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள், பிறர் குற்றத்தை எடுத்து சொல்லி மற்றவரிடம் கெட்ட பெயர் பெறுபவர். சிறந்த தொழில் வல்லுனர். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என தனது கடமையை தர்மத்தின் வழியில் செய்து பணத்தை ஈட்டுவார்கள். பணம் இவரை தேடி வரும். குறிக்கோள் மிக்கவர், அவசரககாரர்.

B+ ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
ரகசியம் காப்பவர்கள், மறைமுக சிந்தனையாளர்கள், வெளி நாட்டவர்கள், கண்ணுக்கு தெரியதவர்கள், இண்டர்னெட் நண்பர்கள், முதலீட்டாளர்கள், துப்பறிபவர்கள், மெலிந்த அழகான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் செலவாளி. செல்வந்தன், வசிகரம் மிக்கவன், மென்மையான செயல் செய்பவன், வழி நடத்துபவன். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், இவர்களை பாராட்டி எதையும் சாதிக்கலாம், இவர்களை விமர்சித்தால் இவர்களின் எதிர்ப்பு வந்து சேரும், கெஞ்சினால் மின்சுவார்கள், மிஞ்சினால் கென்சுவார்கள், செயல் திறன் மிக்கவர்கள். பணம் பத்தும் செய்யும் அந்த பணம் எனிடம் இருந்தால் நான் பதினொன்றும் செய்வேன் என்பது போல் பணத்தின்மீது அதிக பற்று உள்ளவர்கள். சகிப்பு தன்மை மிக்கவர், உற்பத்தியளர்

AB- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
முக அழகு, கண் அழகு, மூக்கு அழகு உள்ளவர்கள், பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், ஞாபக சக்தி உள்ளவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், அழகான ஆடை அணிபவர்கள் மற்றும் நிதியுதவி வழங்குபவர்கள். கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பனவன், வழி நடத்துதல் வழி நடப்பது இரண்டும். இனிய சொற்களால் யாரையும் மயக்கிவிடுப்வர்கள், சுற்றமும் நட்பும் நிரம்ப பெற்றவர்கள், பணிவுடையவர்கள். இளகிய மனம் உடையவர்கள், அடிக்கடி தனது கொள்கைகளையும் தொழிலையும் மாற்றுபவர்கள்.சின்ன மீனை போட்டி பெரியமீனை பிடிக்கும் லாப சிந்தனையாளர். பல வழிகளில் பணம் பன்னும் யுத்தியை கையால்பவர். வரவுக்குவமேல் செலவு செய்ய மாட்டார்கள். உணர்ச்சி வசககாரர், பாதுகப்பானவர்.

AB+ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம் உள்ளவர்கள், எழுத்தற்றல் மிக்கவர்கள், தகவல் தொடர்பாளர்கள், ஞாபக சக்தி மிக்கவர்கள்,, ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் மற்றும் தன்னை புகழ்ந்து பேசினால் எதையும் செய்வார்கள். தனவான், அலட்சிய பார்வை உள்ளவன், தீட்டிய திட்டத்தை முடித்தபின் தான் உறங்குவார்கள், சுற்றத்தினரை ஆதரிப்பவர்கள், வழி நடத்துபவன். யதார்தவாதி, அதிக நண்பர்களை வைத்துக்கொள்ள மாட்டார்கள், கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.பணம் போட்டு பணம் எடுக்கும் சூட்சமம் தெரிந்த தோழிலதிபர்கள். தனித்துவமான முறையில் பணத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியாளராக திகழ்வார்கள். கடன் வாங்கிய பணத்தை வைத்தே கடனை கட்டி லாபமும் பெறுவார்கள். வசிகரகாரர், வலிமையனவர்.

B- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள்,, கலை ஞானம் மிக்கவர்கள், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், புகழ் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர்கள், சினிமா காரர்கள், இசை ஆர்வம் உள்ளவர்கள், அதிர்ஸ்டசாலிகள், நல்ல உடல் கட்டு உள்ளவர்கள் மற்றும் தனது தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்.உழைப்பாளி, பலவீனன், விசுவாசி, வழி நடப்பவன். அவ்வளவு சீக்கிரம் பிறரிடம் பேசமாட்டார்கள், பிடித்தவர்களிடம் மட்டுமே பேசுவார்கள், தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள், பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். ஒத்து போகும் குணம், பொது ஜன தொடர்பளர்.

A- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளிகள், தன்னம்பிக்கையாளர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் விசுவாசமாக வேலை செய்பவர்கள். வஞ்சகன், பொய்யன், முரடன், வழி நடப்பவன். பிறர்க்கு உதவுபவன். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள், கடுகடுப்பானவர், தனது கருத்தை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள், பிறர் குற்றத்தை எடுத்து சொல்லி மற்றவரிடம் கெட்ட பெயர் பெறுபவர். சிறந்த தொழில் வல்லுனர். பணத்தை அடைய மற்றவரால் முடியாத செயலையும் மகிழ்ச்சியுடன் செய்து பணம் ஈட்டுபவர்கள். பணத்தின்மீது அதிக பற்று உள்ளவர்கள் ஆனால் பணத்தை சேமிக்க தெரியாதவர்கள். ஆழ்ந்து போகும் குணம், ஊடுருவும் தன்மையளர்.

O+ ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
தன்னைப்போல் குணமுள்ளவர்கள், கூட்டு சிந்தனையாளர்கள், வியாபாரிகள், கௌரவம் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், சரிசமமான அந்தஸ்து உள்ளவர்கள், கட்டழகு உள்ளவர்கள் மற்றும் சக வியாபார மற்றும் சக தொழில் கூட்டாளி நண்பர்களுடன் நட்புடன் இருப்பார்கள். சத்தியவான், தர்மவான், விவேகி, சந்தோஷவான், வழி நடத்துபவன். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள், சுற்றமிக்கவர்கள். சுற்றத்தற்கு தேவையனதை செய்ய தயங்காதவர்கள், பக்தி மிக்கவர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் சொன்னதை வேத வாக்காக எடுத்து நடப்பவர்கள்.என் செயல் பணி செய்து கிடப்பதே என பிறர்க்கு முன்னுதாரணமான தர்மத்தின் வழியில் பணத்தை ஈட்டுவார்கள். பணத்தின் மீது அதிக பற்று இல்லாதவர்கள். கடன் வாங்கி நேர்மையான முறையில் தொழில் செய்து கட்டுபவர்கள். திட்டமிடும் தன்மை, சரியக சிந்திபர்.

O- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
கௌரவமான வேலையில் உள்ளவர்கள், கௌரவமான பதவி உள்ளவர்கள், அந்தஸ்து மிக்கவர்கள், விருது பெற்றவர்கள், திறமை மிக்கவர்கள், உயர்ந்த பொறுப்பு உள்ளவர்கள், தன்னுடன் வேலைபார்பவர்கள் மற்றும் நல்ல தொழில் ஆலோசனை வழங்குபவர்கள். சத்தியவான், தர்மவான், விவேகி, சந்தோஷவான், வழி நடத்துபவன். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள், சுற்றமிக்கவர்கள். சுற்றத்தற்கு தேவையனதை செய்ய தயங்காதவர்கள், பக்தி மிக்கவர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் சொன்னதை வேத வாக்காக எடுத்து நடப்பவர்கள்.தர்மத்தின் வழியில் பணத்தை ஈட்டுபவர்கள். வீண் செலவு செய்ய மாட்டர்கள். தினமும் ஒரேமதிரியான வருமானம் ஈட்டும் தன்மையுள்ளவர்கள். இவர்கள் முக ராசிக்கு யாருடம் கடன் கேட்டாலும் கிடைக்கும். தெளிவற்ற தன்மை, செயளில் தனி தன்மையளர்.

மேற்கண்ட ரத்தபிரிவு இல்லாமல் ஸ்பெசல் ரத்தபிரிவுகள் உள்ளன.
மொத்தம் 33 க்கும் மேற்பட்ட ரத்த பிரிவுகள் உள்ளன.
உங்கள் ரத்த பிரிவை எழுதி உங்கள் பாக்கெட்டில்
வைத்திருங்கள் அது உங்களுக்கு அவசர காலத்தில் உதவும்
விலைமதிப்பில்லாத ரத்தத்தை
பிறர் உயிர் காக்க
ரத்த தானம் செய்து
அவர்களை நம்பி இருக்கும்
குடும்பத்தை காப்போம் !!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty
12 ராசி (லக்ன) காரர்களுக்கு பிடித்த பொங்கல்

12 ராசி (லக்ன) காரர்களுக்கு பிடித்த பொங்கல்
(பொது பலனில் ஒரு சின்ன கற்ப்பனை)
முகனூல் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

1) மேச ராசிகாரர்கள் சூடாகவும் சுவையாகவும் முந்திரி, திராட்சையுடன் நெய் கலந்த பொங்கலை ருசித்து ரசித்து உண்ணுபவர்கள். பொங்கல் தினத்தில் கரும்பு விரும்பி சாப்பிட்டுவிட்டு நாக்கை புண் செய்து கொள்ளாமல் இருந்தால் சரி. ஆடு மாடுகளை குழிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி பட்டி பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் இதிகாச சண்டை படங்களை பாத்து மகிழ்வார்கள்.

2) ரிசப ராசிகாரர்கள் மிதமான சூடாகவும் சுவையாகவும் வீட்டில் பாரம்பரிய முறையில் செய்த பொங்கலை ருசித்து ரசித்து உண்ணுபவர்கள். தித்திக்கும் செங்கரும்பை ஜீசாக எளிதில் குடிக்கவே ஆசை கொள்வார்கள், காளை மாடோ பசு மாடோ அவற்றை அலங்கரித்து அவற்றுடன் அன்புடன் பொங்கல் பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் குடுப்ப பாங்கான காமெடி படங்களை பாத்து மகிழ்வார்கள்.

3) மிதுனம் ராசிகாரர்கள் குடுப்பத்தோடு சூடாகவும் சுவையாகவும் முந்திரி, திராட்சையுடன் நெய் கலந்த பொங்கலை ருசித்து ரசித்து பொங்கல் புரோகிராமை டிவியில் பார்த்துக்கொண்டே உண்ணுபவர்கள். இனிப்போடு கார உணவையும் கல்ந்து சாப்பிட்டு கொண்ட்டடுவார்கள். டிவியில் பிரபலமாக ஓடியபடங்களை படங்களை பாத்து மகிழ்வார்கள்.

4) கடகம் ராசிகாரர்கள் தனக்கு பிடித்த பொங்கலை உயர்தரமாக வீட்டில் செய்து சூடாக நெய்யில் முந்த்திரி, திராட்சை மிதக்க நெய் சொட்ட சொட்ட உண்ண விரும்புவார்கள். அவர்கள் சப்பிடுவதை பார்த்தால் நமக்கு நாக்கில் எச்சில் ஊறும். கரும்பு ப்ரியர்கள். கால் நடைகளை அலங்காரம் செய்து அவற்றுடன் பொங்கல் கொண்ட்டாடுவார்கள், டிவியில் சண்டை, பிரமாண்மான சாகச படங்களை பாத்து மகிழ்வார்கள்.

5) சிம்ம ராசிகாரர்கள் ஸ்வாமிக்கு படைத்த பொங்கலுடன் இதர பல வகைகளுடன் தனது முன்னேற்றத்திற்கு உதவியவருடன் இனிப்பான பொங்கலை உண்டு மகிழ்வார்கள்.
அதேபோல் தனது பனிக்கு உதவிய கால் நடைகளை கௌரவிக்கும் பொருட்டு அவற்றிக்கு பூஜை செய்து பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் அங்காங்கே நடக்க்கும் பொங்கல் நிகழ்ச்சிகளை பாத்து மகிழ்வார்கள்.

6) கன்னி ராசிகாரர்கள் பொங்கல் எவ்வளவு சுவையாக இருந்தலும் அளவாகதான் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுவார்கள். தன் மனைவியுடன் (அ) கூட்டாளிகளுடன் பொங்கல் பண்டிகையை வீர விளையாட்டுடன் கொண்ட்டடுவார்கள். டிவியில் காமெடி படங்களை பாத்து மகிழ்வார்கள்.

7) துலாம் ராசிகாரர்கள் பொங்கலை சுவைக்காக செய்யாமல் பாரம்பர்யத்திற்காக செய்த்து உண்பார்கள். அக்கம் பக்கம் உள்ள வீட்டினருக்கு பொங்கல் பிரசாதத்தை வழங்கி மகிழ்வார்கள். வீர விளையாட்டை கண்டு மகிழ்வார்கள். பழைய படங்களையும் பாடல் காட்சிகளையும் பாத்து மகிழ்வார்கள்.

8) விருச்சக ராசிகாரர்கள் இறை நன்பிக்கையுடன் அதிகாலை எழுந்து பொங்கல் செய்து சுவாமிக்கு படைத்து இந்த ஆண்டு நமக்கு சிறப்பான ஆண்டு என்ற நம்பிக்கையுடன் பொங்கலை உண்டு மகிழ்வார்கள். வீர விளையாட்டில் கலந்துக்கொண்டு ஊருக்கும் குடுப்பத்துக்கும் பேர் பெற்று தருவார். டிவியில் அழகிய வசனங்கள் கொண்ட படங்களை பாத்து மகிழ்வார்கள்.

9) தனுசு ராசிகாரர்கள் சுஸ்வாமிக்கு படைத்த பொங்கலுடன் இதர பல வகைகளுடன் தனது முன்னேற்றத்திற்கு உதவியவருடன் இனிப்பான பொங்கலை உண்டு மகிழ்வார்கள்.
அதேபோல் தனது பனிக்கு உதவிய கால் நடைகளை கௌரவிக்கும் பொருட்டு அவற்றிக்கு பூஜை செய்து பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் ஆன்மீக படங்களை பாத்து மகிழ்வார்கள்.

10) மகர ராசிகாரர்கள் பொங்கல் எவ்வளவு சுவையாக இருந்தலும் அளவாகதான் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுவார்கள். தன் மனைவியுடன் (அ) தனக்கு பிடித்தவருடன் பொங்கல் பண்டிகையை வீர விளையாட்டுடன் கொண்ட்டடுவார்கள். டிவியில் பிரமாண்ட படம் மற்றும் அதிக வசூல் தந்த படங்களை பாத்து மகிழ்வார்கள்.

11) கும்ப ராசிகாரர்கள் சூடாகவும் சுவையாகவும் முந்திரி, திராட்சையுடன் நெய் கலந்த பொங்கலை ருசித்து ரசித்து பொங்கல் புரோகிராமை டிவியில் பார்த்துக்கொண்டே உண்ணுபவர்கள். இனிப்போடு கார உணவையும் கலந்து சாப்பிட்டு கொண்ட்டடுவார்கள். டிவி நியூசையும் ஸ்பெசல் திரைபடத்தையும் மாற்றி பாத்து மகிழ்வார்கள்.
12) மீன ராசிகாரர்கள் இறை நன்பிக்கையுடன் அதிகாலை எழுந்து பொங்கல் செய்து சுவாமிக்கு படைத்து இந்த ஆண்டு நமக்கு சிறப்பான ஆண்டு என்ற நம்பிக்கையுடன் பொங்கலை உண்டு மகிழ்வார்கள். பண்டிகை காலங்களில் மெய்மறந்த்து தூங்கி மகிழ்வார்கள். டிவியில் குடுப்ப பாங்கான காமெடி படங்களை பார்த்து தூங்கி மகிழ்வார்கள்.

சேற்றில் உழவன் கால் வைக்காவிட்டால்
நாம் உணவில் கை வைக்க முடியாது.
உழவு தொழில் செய்து நாட்டைக் காக்கும் உழவர் தம் குடுப்பத்தை வாழ்த்துவோம்.
தன் ரத்தத்தை பாலக்கி தரும் பசும் மற்றும் கால் நடைகளை பேணிக்காப்போம்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty