வெள்ளி, 30 ஜனவரி, 2015

உங்கள் பிளட் குரூப்பும் உங்கள் கேரக்டரும் : (பொது பலன் கருதுகோள்)

உங்கள் பிளட் குரூப்பும்
உங்கள் கேரக்டரும் :
(பொது பலன் கருதுகோள்)


A+ ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
நட்புடன் பேசுபவர்கள், நம்பிக்கையாளர்கள், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர்கள், அதிர்ஸ்டசாலிகள், மற்றவரை மகிழ்விப்பவர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர், வஞ்சகன், பொய்யன், முரடன், வழி நடப்பவன். பிறர்க்கு உதவுபவன். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள், கடுகடுப்பானவர், தனது கருத்தை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள், பிறர் குற்றத்தை எடுத்து சொல்லி மற்றவரிடம் கெட்ட பெயர் பெறுபவர். சிறந்த தொழில் வல்லுனர். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என தனது கடமையை தர்மத்தின் வழியில் செய்து பணத்தை ஈட்டுவார்கள். பணம் இவரை தேடி வரும். குறிக்கோள் மிக்கவர், அவசரககாரர்.

B+ ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
ரகசியம் காப்பவர்கள், மறைமுக சிந்தனையாளர்கள், வெளி நாட்டவர்கள், கண்ணுக்கு தெரியதவர்கள், இண்டர்னெட் நண்பர்கள், முதலீட்டாளர்கள், துப்பறிபவர்கள், மெலிந்த அழகான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் செலவாளி. செல்வந்தன், வசிகரம் மிக்கவன், மென்மையான செயல் செய்பவன், வழி நடத்துபவன். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், இவர்களை பாராட்டி எதையும் சாதிக்கலாம், இவர்களை விமர்சித்தால் இவர்களின் எதிர்ப்பு வந்து சேரும், கெஞ்சினால் மின்சுவார்கள், மிஞ்சினால் கென்சுவார்கள், செயல் திறன் மிக்கவர்கள். பணம் பத்தும் செய்யும் அந்த பணம் எனிடம் இருந்தால் நான் பதினொன்றும் செய்வேன் என்பது போல் பணத்தின்மீது அதிக பற்று உள்ளவர்கள். சகிப்பு தன்மை மிக்கவர், உற்பத்தியளர்

AB- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
முக அழகு, கண் அழகு, மூக்கு அழகு உள்ளவர்கள், பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், ஞாபக சக்தி உள்ளவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், அழகான ஆடை அணிபவர்கள் மற்றும் நிதியுதவி வழங்குபவர்கள். கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பனவன், வழி நடத்துதல் வழி நடப்பது இரண்டும். இனிய சொற்களால் யாரையும் மயக்கிவிடுப்வர்கள், சுற்றமும் நட்பும் நிரம்ப பெற்றவர்கள், பணிவுடையவர்கள். இளகிய மனம் உடையவர்கள், அடிக்கடி தனது கொள்கைகளையும் தொழிலையும் மாற்றுபவர்கள்.சின்ன மீனை போட்டி பெரியமீனை பிடிக்கும் லாப சிந்தனையாளர். பல வழிகளில் பணம் பன்னும் யுத்தியை கையால்பவர். வரவுக்குவமேல் செலவு செய்ய மாட்டார்கள். உணர்ச்சி வசககாரர், பாதுகப்பானவர்.

AB+ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம் உள்ளவர்கள், எழுத்தற்றல் மிக்கவர்கள், தகவல் தொடர்பாளர்கள், ஞாபக சக்தி மிக்கவர்கள்,, ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் மற்றும் தன்னை புகழ்ந்து பேசினால் எதையும் செய்வார்கள். தனவான், அலட்சிய பார்வை உள்ளவன், தீட்டிய திட்டத்தை முடித்தபின் தான் உறங்குவார்கள், சுற்றத்தினரை ஆதரிப்பவர்கள், வழி நடத்துபவன். யதார்தவாதி, அதிக நண்பர்களை வைத்துக்கொள்ள மாட்டார்கள், கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.பணம் போட்டு பணம் எடுக்கும் சூட்சமம் தெரிந்த தோழிலதிபர்கள். தனித்துவமான முறையில் பணத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியாளராக திகழ்வார்கள். கடன் வாங்கிய பணத்தை வைத்தே கடனை கட்டி லாபமும் பெறுவார்கள். வசிகரகாரர், வலிமையனவர்.

B- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள்,, கலை ஞானம் மிக்கவர்கள், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், புகழ் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர்கள், சினிமா காரர்கள், இசை ஆர்வம் உள்ளவர்கள், அதிர்ஸ்டசாலிகள், நல்ல உடல் கட்டு உள்ளவர்கள் மற்றும் தனது தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்.உழைப்பாளி, பலவீனன், விசுவாசி, வழி நடப்பவன். அவ்வளவு சீக்கிரம் பிறரிடம் பேசமாட்டார்கள், பிடித்தவர்களிடம் மட்டுமே பேசுவார்கள், தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள், பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். ஒத்து போகும் குணம், பொது ஜன தொடர்பளர்.

A- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளிகள், தன்னம்பிக்கையாளர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் விசுவாசமாக வேலை செய்பவர்கள். வஞ்சகன், பொய்யன், முரடன், வழி நடப்பவன். பிறர்க்கு உதவுபவன். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள், கடுகடுப்பானவர், தனது கருத்தை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள், பிறர் குற்றத்தை எடுத்து சொல்லி மற்றவரிடம் கெட்ட பெயர் பெறுபவர். சிறந்த தொழில் வல்லுனர். பணத்தை அடைய மற்றவரால் முடியாத செயலையும் மகிழ்ச்சியுடன் செய்து பணம் ஈட்டுபவர்கள். பணத்தின்மீது அதிக பற்று உள்ளவர்கள் ஆனால் பணத்தை சேமிக்க தெரியாதவர்கள். ஆழ்ந்து போகும் குணம், ஊடுருவும் தன்மையளர்.

O+ ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
தன்னைப்போல் குணமுள்ளவர்கள், கூட்டு சிந்தனையாளர்கள், வியாபாரிகள், கௌரவம் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், சரிசமமான அந்தஸ்து உள்ளவர்கள், கட்டழகு உள்ளவர்கள் மற்றும் சக வியாபார மற்றும் சக தொழில் கூட்டாளி நண்பர்களுடன் நட்புடன் இருப்பார்கள். சத்தியவான், தர்மவான், விவேகி, சந்தோஷவான், வழி நடத்துபவன். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள், சுற்றமிக்கவர்கள். சுற்றத்தற்கு தேவையனதை செய்ய தயங்காதவர்கள், பக்தி மிக்கவர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் சொன்னதை வேத வாக்காக எடுத்து நடப்பவர்கள்.என் செயல் பணி செய்து கிடப்பதே என பிறர்க்கு முன்னுதாரணமான தர்மத்தின் வழியில் பணத்தை ஈட்டுவார்கள். பணத்தின் மீது அதிக பற்று இல்லாதவர்கள். கடன் வாங்கி நேர்மையான முறையில் தொழில் செய்து கட்டுபவர்கள். திட்டமிடும் தன்மை, சரியக சிந்திபர்.

O- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
கௌரவமான வேலையில் உள்ளவர்கள், கௌரவமான பதவி உள்ளவர்கள், அந்தஸ்து மிக்கவர்கள், விருது பெற்றவர்கள், திறமை மிக்கவர்கள், உயர்ந்த பொறுப்பு உள்ளவர்கள், தன்னுடன் வேலைபார்பவர்கள் மற்றும் நல்ல தொழில் ஆலோசனை வழங்குபவர்கள். சத்தியவான், தர்மவான், விவேகி, சந்தோஷவான், வழி நடத்துபவன். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள், சுற்றமிக்கவர்கள். சுற்றத்தற்கு தேவையனதை செய்ய தயங்காதவர்கள், பக்தி மிக்கவர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் சொன்னதை வேத வாக்காக எடுத்து நடப்பவர்கள்.தர்மத்தின் வழியில் பணத்தை ஈட்டுபவர்கள். வீண் செலவு செய்ய மாட்டர்கள். தினமும் ஒரேமதிரியான வருமானம் ஈட்டும் தன்மையுள்ளவர்கள். இவர்கள் முக ராசிக்கு யாருடம் கடன் கேட்டாலும் கிடைக்கும். தெளிவற்ற தன்மை, செயளில் தனி தன்மையளர்.

மேற்கண்ட ரத்தபிரிவு இல்லாமல் ஸ்பெசல் ரத்தபிரிவுகள் உள்ளன.
மொத்தம் 33 க்கும் மேற்பட்ட ரத்த பிரிவுகள் உள்ளன.
உங்கள் ரத்த பிரிவை எழுதி உங்கள் பாக்கெட்டில்
வைத்திருங்கள் அது உங்களுக்கு அவசர காலத்தில் உதவும்
விலைமதிப்பில்லாத ரத்தத்தை
பிறர் உயிர் காக்க
ரத்த தானம் செய்து
அவர்களை நம்பி இருக்கும்
குடும்பத்தை காப்போம் !!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty
12 ராசி (லக்ன) காரர்களுக்கு பிடித்த பொங்கல்

12 ராசி (லக்ன) காரர்களுக்கு பிடித்த பொங்கல்
(பொது பலனில் ஒரு சின்ன கற்ப்பனை)
முகனூல் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

1) மேச ராசிகாரர்கள் சூடாகவும் சுவையாகவும் முந்திரி, திராட்சையுடன் நெய் கலந்த பொங்கலை ருசித்து ரசித்து உண்ணுபவர்கள். பொங்கல் தினத்தில் கரும்பு விரும்பி சாப்பிட்டுவிட்டு நாக்கை புண் செய்து கொள்ளாமல் இருந்தால் சரி. ஆடு மாடுகளை குழிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி பட்டி பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் இதிகாச சண்டை படங்களை பாத்து மகிழ்வார்கள்.

2) ரிசப ராசிகாரர்கள் மிதமான சூடாகவும் சுவையாகவும் வீட்டில் பாரம்பரிய முறையில் செய்த பொங்கலை ருசித்து ரசித்து உண்ணுபவர்கள். தித்திக்கும் செங்கரும்பை ஜீசாக எளிதில் குடிக்கவே ஆசை கொள்வார்கள், காளை மாடோ பசு மாடோ அவற்றை அலங்கரித்து அவற்றுடன் அன்புடன் பொங்கல் பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் குடுப்ப பாங்கான காமெடி படங்களை பாத்து மகிழ்வார்கள்.

3) மிதுனம் ராசிகாரர்கள் குடுப்பத்தோடு சூடாகவும் சுவையாகவும் முந்திரி, திராட்சையுடன் நெய் கலந்த பொங்கலை ருசித்து ரசித்து பொங்கல் புரோகிராமை டிவியில் பார்த்துக்கொண்டே உண்ணுபவர்கள். இனிப்போடு கார உணவையும் கல்ந்து சாப்பிட்டு கொண்ட்டடுவார்கள். டிவியில் பிரபலமாக ஓடியபடங்களை படங்களை பாத்து மகிழ்வார்கள்.

4) கடகம் ராசிகாரர்கள் தனக்கு பிடித்த பொங்கலை உயர்தரமாக வீட்டில் செய்து சூடாக நெய்யில் முந்த்திரி, திராட்சை மிதக்க நெய் சொட்ட சொட்ட உண்ண விரும்புவார்கள். அவர்கள் சப்பிடுவதை பார்த்தால் நமக்கு நாக்கில் எச்சில் ஊறும். கரும்பு ப்ரியர்கள். கால் நடைகளை அலங்காரம் செய்து அவற்றுடன் பொங்கல் கொண்ட்டாடுவார்கள், டிவியில் சண்டை, பிரமாண்மான சாகச படங்களை பாத்து மகிழ்வார்கள்.

5) சிம்ம ராசிகாரர்கள் ஸ்வாமிக்கு படைத்த பொங்கலுடன் இதர பல வகைகளுடன் தனது முன்னேற்றத்திற்கு உதவியவருடன் இனிப்பான பொங்கலை உண்டு மகிழ்வார்கள்.
அதேபோல் தனது பனிக்கு உதவிய கால் நடைகளை கௌரவிக்கும் பொருட்டு அவற்றிக்கு பூஜை செய்து பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் அங்காங்கே நடக்க்கும் பொங்கல் நிகழ்ச்சிகளை பாத்து மகிழ்வார்கள்.

6) கன்னி ராசிகாரர்கள் பொங்கல் எவ்வளவு சுவையாக இருந்தலும் அளவாகதான் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுவார்கள். தன் மனைவியுடன் (அ) கூட்டாளிகளுடன் பொங்கல் பண்டிகையை வீர விளையாட்டுடன் கொண்ட்டடுவார்கள். டிவியில் காமெடி படங்களை பாத்து மகிழ்வார்கள்.

7) துலாம் ராசிகாரர்கள் பொங்கலை சுவைக்காக செய்யாமல் பாரம்பர்யத்திற்காக செய்த்து உண்பார்கள். அக்கம் பக்கம் உள்ள வீட்டினருக்கு பொங்கல் பிரசாதத்தை வழங்கி மகிழ்வார்கள். வீர விளையாட்டை கண்டு மகிழ்வார்கள். பழைய படங்களையும் பாடல் காட்சிகளையும் பாத்து மகிழ்வார்கள்.

8) விருச்சக ராசிகாரர்கள் இறை நன்பிக்கையுடன் அதிகாலை எழுந்து பொங்கல் செய்து சுவாமிக்கு படைத்து இந்த ஆண்டு நமக்கு சிறப்பான ஆண்டு என்ற நம்பிக்கையுடன் பொங்கலை உண்டு மகிழ்வார்கள். வீர விளையாட்டில் கலந்துக்கொண்டு ஊருக்கும் குடுப்பத்துக்கும் பேர் பெற்று தருவார். டிவியில் அழகிய வசனங்கள் கொண்ட படங்களை பாத்து மகிழ்வார்கள்.

9) தனுசு ராசிகாரர்கள் சுஸ்வாமிக்கு படைத்த பொங்கலுடன் இதர பல வகைகளுடன் தனது முன்னேற்றத்திற்கு உதவியவருடன் இனிப்பான பொங்கலை உண்டு மகிழ்வார்கள்.
அதேபோல் தனது பனிக்கு உதவிய கால் நடைகளை கௌரவிக்கும் பொருட்டு அவற்றிக்கு பூஜை செய்து பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் ஆன்மீக படங்களை பாத்து மகிழ்வார்கள்.

10) மகர ராசிகாரர்கள் பொங்கல் எவ்வளவு சுவையாக இருந்தலும் அளவாகதான் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுவார்கள். தன் மனைவியுடன் (அ) தனக்கு பிடித்தவருடன் பொங்கல் பண்டிகையை வீர விளையாட்டுடன் கொண்ட்டடுவார்கள். டிவியில் பிரமாண்ட படம் மற்றும் அதிக வசூல் தந்த படங்களை பாத்து மகிழ்வார்கள்.

11) கும்ப ராசிகாரர்கள் சூடாகவும் சுவையாகவும் முந்திரி, திராட்சையுடன் நெய் கலந்த பொங்கலை ருசித்து ரசித்து பொங்கல் புரோகிராமை டிவியில் பார்த்துக்கொண்டே உண்ணுபவர்கள். இனிப்போடு கார உணவையும் கலந்து சாப்பிட்டு கொண்ட்டடுவார்கள். டிவி நியூசையும் ஸ்பெசல் திரைபடத்தையும் மாற்றி பாத்து மகிழ்வார்கள்.
12) மீன ராசிகாரர்கள் இறை நன்பிக்கையுடன் அதிகாலை எழுந்து பொங்கல் செய்து சுவாமிக்கு படைத்து இந்த ஆண்டு நமக்கு சிறப்பான ஆண்டு என்ற நம்பிக்கையுடன் பொங்கலை உண்டு மகிழ்வார்கள். பண்டிகை காலங்களில் மெய்மறந்த்து தூங்கி மகிழ்வார்கள். டிவியில் குடுப்ப பாங்கான காமெடி படங்களை பார்த்து தூங்கி மகிழ்வார்கள்.

சேற்றில் உழவன் கால் வைக்காவிட்டால்
நாம் உணவில் கை வைக்க முடியாது.
உழவு தொழில் செய்து நாட்டைக் காக்கும் உழவர் தம் குடுப்பத்தை வாழ்த்துவோம்.
தன் ரத்தத்தை பாலக்கி தரும் பசும் மற்றும் கால் நடைகளை பேணிக்காப்போம்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

பிறந்த கிழமையும் பலனும்

ஜோதிடம் கற்கலாம் வாங்க !
(பிறந்த கிழமையும் பலனும்- பொது பலன் கருதுகோள்)
பகுதி - 1ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் : 
தனவான், அலட்சிய பார்வை உள்ளவன், தீட்டிய திட்டத்தை முடித்தபின் தான் உறங்குவார்கள், சுற்றத்தினரை ஆதரிப்பவர்கள், வழி நடத்துபவன். யதார்தவாதி, அதிக நண்பர்களை வைத்துக்கொள்ள மாட்டார்கள், கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.

திங்கட்கிழமை பிறந்தவர்கள் :
கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பனவன், வழி நடத்துதல் வழி நடப்பது இரண்டும். இனிய சொற்களால் யாரையும் மயக்கிவிடுப்வர்கள், சுற்றமும் நட்பும் நிரம்ப பெற்றவர்கள், பணிவுடையவர்கள். இளகிய மனம் உடையவர்கள், அடிக்கடி தனது கொள்கைகளையும் தொழிலையும் மாற்றுபவர்கள்.

செவ்வாய்கிழமை பிறந்தவர்கள் :
வஞ்சகன், பொய்யன், முரடன், வழி நடப்பவன். பிறர்க்கு உதவுபவன். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள், கடுகடுப்பானவர், தனது கருத்தை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள், பிறர் குற்றத்தை எடுத்து சொல்லி மற்றவரிடம் கெட்ட பெயர் பெறுபவர். சிறந்த தொழில் வல்லுனர்.

புதன்கிழமை பிறந்தவர்கள் :
கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறறை மகிழ்விப்பவன், விவேகி, வழி நடத்துதல் வழி நடப்பது இரண்டும். நயமாகவும் விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை உள்ளவன், தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள், தனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து மகிழ்வார்கள். ரகசியமானவர்கள், சமாதன பிரியர்.

வியாழக்கிழமை பிறந்தவர்கள் :
சத்தியவான், தர்மவான், விவேகி, சந்தோஷவான், வழி நடத்துபவன். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள், சுற்றமிக்கவர்கள். சுற்றத்தற்கு தேவையனதை செய்ய தயங்காதவர்கள், பக்தி மிக்கவர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் சொன்னதை வேத வாக்காக எடுத்து நடப்பவர்கள்.

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் :
செல்வந்தன், வசிகரம் மிக்கவன், மென்மையான செயல் செய்பவன், வழி நடத்துபவன். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், இவர்களை பாராட்டி எதையும் சாதிக்கலாம், இவர்களை விமர்சித்தால் இவர்களின் எதிர்ப்பு வந்து சேரும், கெஞ்சினால் மின்சுவார்கள், மிஞ்சினால் கென்சுவார்கள், செயல் திறன் மிக்கவர்கள்.

சனிக்கிழமை பிறந்தவர்கள் :
உழைப்பாளி, பலவீனன், விசுவாசி, வழி நடப்பவன். அவ்வளவு சீக்கிரம் பிறரிடம் பேசமாட்டார்கள், பிடித்தவர்களிடம் மட்டுமே பேசுவார்கள், தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள், பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள்.

(குறிப்பு: ஜோதிடம் தெரியாதவர்கள் விளையாட்டாக ஜோதிடம் தெரிந்துக்கொள்ள எழுதிய பொதுவான பலன் பதிவு ஆகும். ஒருசிலருக்கு பொருந்தும் ஒருசிலருக்கு பொருந்தாது)
7 நாட்களில் எந்த நாளில் பிறந்திருந்தாலும்
84000 (யோனி பேதங்களில்) உயிரினங்களில்
மனிதராக பிறக்க புண்ணியம் செய்தோம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்
நாம் வாடிய நிலையில் வரும் மக்களை ஜோதிடம் என்ற டானிக் கொடுத்து
அவர்கள் முன்னேற மனித நேயத்துடம் வழிகாட்டுவோம்.
வெறும் கையுடன் என்ன செய்வது என்றால் அது மூடத்தனம்
அந்த கையில் கடவுள் 10 விரல் தத்திருக்கிறார் என்றால்
அது தான் நம் தன்னம்பிக்கையின் மூலதனம்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

12 ராசி (லக்கின) காரர்கள் தர்மம் (பரிகாரம்) செய்யும் ஸ்டையில்

12 ராசி (லக்கின) காரர்கள் தர்மம் (பரிகாரம்) செய்யும் ஸ்டையில்
ஜோதிட மறுமலர்ச்சி பரிகாரம்
(ஜோதிட கருதுகோள் ராசி பரிகாரம்)


மனகஷ்டத்தோடு வந்தவன்
தீர்க்கிறான் !?!
ஜோதிடரின்
பண கஷ்டத்தை
--------------------------------(புதுகவிதை)
அப்படி நம் கஷ்டத்தை போக்கும்
மக்களுக்கு நல்லது செய்வது நம் கடமை அல்லவா ?
ஜோதிடத்தின் புதிய அனுகுமுறை கொண்டு
மக்கள் தொண்டாற்றுவோம் வாருங்கள்.
அனைவருக்கும் மகிழ்ச்சியை தருவோம்.

1) மேச (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவி செய்தால், பறவைகளுக்கு தானியம் வைத்தல், பிறர் உயர நல்ல ஆலோசனையும் உதவியும் செய்வதன் மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும். ப

2) ரிசப (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
அன்னதானம் செய்வது அல்லது அன்னதானம் செய்ய உதவுவது, அல்லது ஆதரவற்றவரை பராமரிப்பது, பசு மற்றும் மிருகங்களுக்கு உணவிடுதல், அவற்றை துன்புறுத்தாமல் இருத்தல், மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

3) மிதுனம் (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வங்கிதருவது இலவசமாக டியூசன் எடுத்து உதவுவது, பறவைகளுக்கு தானியம் வைத்தல், பறவை இனம் அழியாமல் காத்தல் மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

4) கடகம் (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
வருடம் ஒருமுறை ரத்த தானம் செய்து பிறர் உயிர் காக்க உதவுவது, இலவச தங்கும் விடுதி அமைத்து தருவது, வஸ்திர தானம் செய்வது மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

5) சிம்ம (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
அன்னாதை குழந்தகளுக்கு உதவுவது, அன்னாதை ஆசிரமத்திற்கு உதவுவது, அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது, வஸ்திர தானம் செய்வது, மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

6) கன்னி (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
தன்னை விட வசதி குறைவானவருக்கு மருத்துவ உதவி செய்தல், அல்லது இலவச மருத்துவமனைக்கு நங்கொடை கொடுத்தல், பசு மற்றும் மிருகங்களுக்கு உணவிடுதல், அவற்றை துன்புறுத்தாமல் இருத்தல், மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

7) துலாம் (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
திருமண வயது கடந்து திருமணம் செய்ய முடியாமல் இருப்பவர் திருமணம் நடக்க உதவுவது. தாலி வாங்கி தருதல், வசதியானவர்கள் இலவச திருமணம் நடத்தி வைத்தல் ஆகியவற்றின் மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

8) விருச்சக (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
விபத்தில் அடிபட்டு கேட்பறற்று இருப்பவருக்கு மருத்துவ உதவி செய்வது, வஸ்திர தானம் செய்வது, பொதி இடங்களில் இலவச கழிவறைகள் அமைத்து தருதல், அடுத்தவர் ஈம காரியம் செய்ய உதவுவது, தன் மரணத்துக்கு பின் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வது மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

9) தனுசு (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
கல்வி பயில முடியாத குழந்தைகளுக்கு படிக்க உதவிசெய்தல், டிரஸ்ட் அமைத்து இலவச மருதுவமுகாம், இலவச கல்வி, இலவச சேவை செய்வது, மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

10) மகர (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
உடல் ஊனமுற்றோருக்கு உதவுவது, உடல் ஊனமுற்றோரை தனது நிறுவனங்களில் பனியில் அமர்த்தி உதவுவது, உடல் ஊனமுற்றோருக்கு இலவச கருவி அல்லது தொழில் அமைத்து தருவதன் மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

11) கும்ப (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
ஆதரவற்ற முதியோர்க்கு உதவுவது, முதியோர் இல்லம் அமைப்பது, முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, தான் இறந்தபின் தனது உடம்பை மருத்துவ ஆய்வுக்கு கொடுத்து உதவுவது மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

12) மீன (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
வஸ்திர தானம் செய்வது, இலவச மருத்துவ முகாம்களுக்கு உதவுவது. இலவச தங்கும் விடுதி அமைத்து தருவது, தனது இறப்புக்கு பின் கண்தானம் செய்வது மூலம் இறப்பற்ற நிலை பெறலாம், தனக்கு மிஞ்சியதை தானம் செய்வது மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.


ஒன்றை எதிர்பார்த்து செய்வது தானம்
பிரதிபலன் எதிபாரமல் செய்வது தர்மம்
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
நாம் செய்யும் பரிகாரம் மற்றவரை
மகிழ்ச்சியில் ஆழ்த்தவேடும்
அவரின் வாழ்த்து நம் பாவத்தை போக்கும்
சந்தோஷதுல பெரிய சந்தோஷம் மததவங்கள சந்தோஷ படுத்தி பக்குறது தான். மத்தவங்களுக்கு சந்தோசம் கொடுத்த நமக்கு சந்தோசம் தானா வரும். நன்றி.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichettyபுதன், 7 ஜனவரி, 2015

உங்கள் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கலாம் வாங்க !!! 12 ராசி (லக்கின) பெண்கள் வீட்டை பராமரிக்கும் முறை.

உங்கள் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கலாம் வாங்க !!!
(உங்கள் வீடு தூய்மை இந்தியாவா ?)
12 ராசி (லக்கின) பெண்கள் வீட்டை பராமரிக்கும் முறை.
(கற்பனை கருதுகோள் பொதுபலன்)1) மேச (லக்கின) ராசிக்காரர்கள் :
பம்பரமாக சுழன்று வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து இருப்பவர்கள். இவர்கள் வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தான் இருக்கும் வீடு குடிசை ஆனாலும் சரி மாளிகை ஆனாலும் சரி அதை பராமரிப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. எந்த இடத்தையும் தனக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் திறமை உள்ளவர்கள். அப்பார்ட்மெண்ட் அல்லது காம்பவுண்ட் தொடர் குடியிருப்புகளில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள், சந்தணம்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.

2) ரிசப (லக்கின) ராசிக்காரர்கள் :
பேச்சில் இருக்கும் சுத்தம் வீட்டை பராமரிப்பதில் இருக்காது. வீடு எப்போதும் வெப்பமாக இருக்கும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். ராயல் வாழ்கை வாழ்பவர்கள். அடிக்கடி வீட்டை மாற்றும் தன்மை உள்ளவர்கள். உயரமான வீடு, அரண்மை போன்ற வீடு, காம்பவுண்போட்ட கேட் போட்ட தனி வீட்டில் வசிக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  சிகப்பு, ரோஸ்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,

3) மிதுனம் (லக்கின) ராசிக்காரர்கள் :
தான் வீட்டை பராமரிக்க விட்டாலும் வேலை ஆட்களை வைத்து அழகாக பராமரிப்பவர்கள். எப்போதும் வீட்டு ஜன்னல்கள் முடப்பட்டு இருக்கும்.
வாசனை புகைகளுடன் வீடு இருக்கும். சொந்தவீடு வாங்கிய பின் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் ஆசைபடுவார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் இருக்க விரும்புவார்கள். நல்ல தண்ணீர் வசதியுள்ள பாதுகாப்பான வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  வெண்மை, மின்னும் நிறம்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : பச்சை, சயான், பிஸ்தா

4) கடகம் (லக்கின) ராசிக்காரர்கள் :
சுத்தம் சுகாதரம், சுத்தம் சோறு போடும் என்பதுபோல் வீட்டை அழக்காக பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும்.  வீடு கௌரவத்தையும் அந்தஸ்தையும் தருவதாக அமையும். அண்டை வீட்டார் இவரை கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு வீட்டை வைத்தி இருப்பார்கள். கீழ் வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள். ஜன நடமாட்டம் உள்ள இடத்தில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  பச்சை, சயான், பிஸ்தா
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,

5) சிம்ம (லக்கின) ராசிக்காரர்கள் :
தனது வீட்டை எப்போதும் கிரிமினாசினி கொண்டு தூய்மையாகவும் சுகாதாரமானவும் வைத்திருப்பார்கள். வீட்டை அலங்காரம் செய்ய அதிக செலவு செய்வார்கள். வீடு எப்போதும் குளிர்ச்சியுடன் இருக்கும். வீட்டின் கழிவறைகள் மிக சுத்தமாக இருக்கும். அண்டை வீட்டாருடன் அளவுடன் பழகுவார்கள். வீட்டில் அதிகமாக தண்ணீர் செலவு செய்வார்கள். இவர்கள் எப்போதும் தொடர் வீடு மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை, மில்க் ஒயிட்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : சிகப்பு, ரோஸ்,

6) கன்னி (லக்கின) ராசிக்காரர்கள் :
தனது வீட்டை எப்போதும் கோவில் போல பூசி மெழுகி அழகுடனும் பக்தியுடனும் பராமரிப்பார்க்ள். ஆன்மீக பொருட்களைக் கொண்டு அழகுடன் பராமரிப்பதில் வல்லவர்கள். வீட்டின் ஜன்னல்கள் அடிக்கடி மூடியே இருக்கும் அதனால் வீடு வெப்பமாக விருக்கும். வீட்டில் எடுத்த பொட்களை இடம் மாற்றி வைப்பது இவர்களுக்கு பிடிக்காது. தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் விரும்புவார்கள். மாடி வீட்டில் மாடியில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  ஆரஞ்ச், ரோஸ்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : மஞ்சள், சந்தணம்.

7) துலாம் (லக்கின) ராசிக்காரர்கள் :
செய்யும் தொழிலே தெய்வம் வீட்டை பராமரிப்பதே எனது தலையாய கடமை என்பது போல் எண்ணம் கொண்டவர்கள் ஆனால் செயல் தான் கொஞ்சம் கம்மி. வாசனை புகைகளுடன் வீடு இருக்கும். சொந்தவீடு வாங்கிய பின் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் ஆசைபடுவார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் இருக்க விரும்புவார்கள். நல்ல தண்ணீர் வசதியுள்ள பாதுகாப்பான வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  பச்சை, சயான், பிஸ்தா
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்

8) விருச்சக (லக்கின) ராசிக்காரர்கள் :
தன்னைபோல யாரும் வீட்டை பராமரிக்க முடியாது என்பது போல வீட்டை பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். இந்த வீடு வாங்கிய பின்தான் எல்லாம் வந்தது என வீட்டும் மீது செண்டிமெண்ட் வைத்து இருப்பார்கள்
ஜன நடமாட்டம் குறைவான இயற்கையான சூழ் நிலைஉள்ள தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் விரும்புவார்கள். மாடி வீட்டில் மாடியில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  வெண்மை, மின்னும் நிறம்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்

9) தனுசு (லக்கின) ராசிக்காரர்கள் :
சுத்தத்தை உயிரை விட உயர்வாக மதிப்பவர்கள். வீட்டில் யார் எப்படி இருந்தாலும் இவர்கள் வீட்டை சரியாக பராமரித்துக்கொண்டு இருப்பார்கள். வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மற்றவர் எடுத்த பொருளை சரியான இடத்தில் வைக்காவிட்டாலும் இவர்கள் சரியான இடத்தில் வைப்பவர்கள், எதிலும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். தனது உறவினர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தனி வீட்டில் வசிக்கவே ஆசைபடுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  சிகப்பு, ரோஸ்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : மஞ்சள், சந்தணம்.

10) மகர (லக்கின) ராசிக்காரர்கள் :
வீட்டை பராமரிப்பதெல்லாம் ஒரு வேலையா என்பது போல் எனோதானோ என பராமரிப்பார்கள். எப்போதும் வீட்டு ஜன்னல்கள் முடப்பட்டு இருக்கும். டு எப்போதும் வெப்பமாக இருக்கும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். ராயல் வாழ்கை வாழ்பவர்கள். எதிர் வீட்டாரை ஒப்பிட்டு வீட்டின் ஒவ்வொரு வேலையையும் செய்வார்கள். கீழ்வீட்டில் அதுவும் தொடர் வீட்டுகளில் வசிக்கும் வாய்ப்பை அதிகம் பெறுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள், சந்தணம்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : சிகப்பு, ரோஸ்

11) கும்ப (லக்கின) ராசிக்காரர்கள் :
வீட்டை அழகாகவும் வசிகரமாகவும் சுத்தமாகவும் பராமரிப்பவர்கள். தனது வாடகை வீட்டைகூட சொந்தவீடு போல பராமரிப்பவர்கள். மற்றவர்கள் தன் வீட்டை உதாரணம் சொல்வது போல தன்வீட்டை பராமரிப்பார்கள், கடன் வாங்கி வீடு வாங்கி தனது ஆடம்பர வாழ்வை நடத்துவார்கள். தனி வீட்டில் காம்பவுண்ட் உடன் உள்ள வீட்டில் வாழ ஆசை கொண்டவர்கள். அக்கம் பக்கம் வீட்டாருடன் நட்புடன் இருக்க மாட்டார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  நீலம், அடர்ந்த வர்ணம்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,

12) மீன (லக்கின) ராசிக்காரர்கள் :
ஆரோக்கியம், சுத்தம் சுகாதரம், சுத்தம் சோறு போடும் என்பதுபோல் வீட்டை அழக்காக பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். வீடு குளிர்சியாகவும் காற்றோட்டமாகவும் இருக்கும். வீட்டிற்குள் இருக்கும்போது மகிழ்சியாகவும் ஆரோக்கியமாகவும் கருதுவார்கள். ஒன்றுபோல் இருக்கும் வீடுகளில் அதிகமாக வசிப்பார்கள்.  அண்டை வீட்டாருடன் நட்புடன் பழகுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் :  நீலம், அடர்ந்த வர்ணம்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட  நிறம் : பச்சை, சயான், பிஸ்தா


குடிசை வீடோ அல்லது மாடி வீடோ
தூய்மையான வீடு ஆரோக்கியமான வீடு
நம் வீடும் அதை சுற்றிய இடமும் சுத்தமானால்
நாடு சுத்தமாகும் சுகாதாரமாகும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மீன்கள் அழுக்கை திண்று அந்த இடத்தை சுத்தமாகும்
மீன ராசி மருத்துவமனையை குறிக்கும்
அழகான சுத்தமான வீடு வசியமான வீடாக இருக்கும்
அதுவே நாம் நினைத்ததை நிறைவேற்றும் அதிர்ஷ்ட வீடு

வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty
வியாழன், 1 ஜனவரி, 2015

12 பாவ 2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

12 பாவ 2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
(2 என்ற அன்பான சந்திரனும், 0 என்ற ஹீரோவும், 1 என்ற நல்ல தலைமை தரும் சூரியனும், 5 என்ற அறிவான புதனும்
இனைந்து 8 என்ற உழைப்பை தரும் சனி எண்ணில் புத்தாண்டு பிறக்கிறது.)
2015 புத்தாண்டு எனது நண்பர்களுக்கும்
அவர்களின் குடும்பத்தினர் அனைவரும்
மற்றும் உலக மக்கள் அனைவரும்
1) கீர்த்தி, புகழ் நிறைந்த ஆண்டாகவும்
2) குடும்ப மேன்மை, செல்வம், நிறைந்த ஆண்டாகவும்
3) உங்களின் முயற்சியை வெற்றியடைய வைக்கும் ஆண்டாகவும்
4) பூமி, வீடு, வாகனம் சுகம் நிறைந்த ஆண்டாகவும்
5) குழந்தை, மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாகவும்
6) வழக்கு, கடன், நோய் இல்லாத ஆண்டாகவும்
7) கூட்டாளி, மனைவி ஆகியோகியோரால் உங்களுக்கு நன்மை தரும் ஆண்டாகவும்
8) நீண்ட ஆயுளை தரும் ஆண்டாகவும்
9) தந்தை மற்றும் உங்கள் தர்ம காரியத்தால் நீங்கள் சிறப்படையும் ஆண்டாகவும்
10) தொழில், வியாபாரம், உத்தியோகம் செழிப்படையும் ஆண்டாகவும்
11) உங்களுக்கு சித்தியும் மகிழ்ச்சியும், லாபமும் நிறைந்த ஆண்டாகவும்
12) நிம்மதியான தூக்கமும், சேமிப்பும் நிறைந்த ஆண்டாக
இருக்க உங்கள் 12 பாவகங்களும் உங்களை முன்னேற்ற பாதையில்
கொண்டு சென்று வெற்றிமேல் வெற்றி குவிக்க அன்புடன்
வாழ்த்தி மகிழ்கிறேன்.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty