வியாழன், 16 அக்டோபர், 2014

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம். Abijith Star.

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம்.
ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. வம்சோத்திரி தேசா கணிதத்திற்கு பிறகு 27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டது. அபிஜித் நட்சத்திரம் மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருஒணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் அபிஜித் நட்சத்திரம் ஆகும். (அதாவது மகராசி 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை)
(ஒரு நட்சத்திரத்தின் தொராய நாழிகை 60 எனும்போது உத்திராடத்தின் இறுதி 15 நாழிகைகளையும், அதனை அடுத்துள்ள திருவோணத்தின் முதல் 4 நாழிகைகளையும் உள்ளடக்கிய மொத்தம் 19 நாழிகைகளும் அபிஜித் நட்சத்திரம் ஆகும்)
உத்திராடம் முடியும் பாகை = 280.00 பாகை
உத்திராடத்தின் நன்கில் ஒரு பங்கு = 3.20 பாகை
திருஒணத்தின் 15ல் ஒரு பங்கு = 0.53.20 பாகை
அபிஜித் நட்சத்திர மொத்த பாகை = 4.13.20 பாகை
அபிஜித் நட்சத்திரம் = 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை.
(குறிப்பு : ஒருசில நூல்களில் உத்திராடம் 4ம் பாதமும் + திருஒணம் 1 ம் பாதமும் அபிஜித் என்றும்,
மேலும் ஒருசில நூல்களில் உத்திராடம் 3,4ம் பாதமும் + திருஒணம் 1,2 ம் பாதமும் அபிஜித் என்றும்,
இன்னும் ஒருசில நூல்களில் உத்திராடம் முடிவில் 5 நாழிகையும், திருஒணத்தின் ஆரம்பத்தில் உள்ள் 4 நாழிகை 4 வினாடியும் சேர்ந்த 9 நாழிகை 4 வினாடி அபிஜித் என்றும் சொல்லப்பட்டுள்ளது.)
அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் :
1) அதிர்ஷ்டம் மிக்கவர்கள்.
2) அன்பும், கண்டிப்பும் மிக்கவர்.
3) தலைமை பண்பும் சேவை மனமும் கொண்டவர்கள்.
4) தொழில் கெளரவம் மிக்கவர்கள்,
5) செய்யும் தொழில் மீது பற்றுக்கொண்டவர்கள்.
6) சுகமும் மகிழ்ச்சியும் மிக்கவர்கள்.
7) தாய், தந்தை இருவருக்கும் பிடித்தபிள்ளை.
8) தாய், தந்தை இருவருவரும் குணமும் ஒருங்கே உள்ளர்.
9) தாய், தந்தை இருவருவரின் சாயலும் உள்ளவர்.
10) கல்வி விசயத்தில் கவனம் தேவை, தடைபட வாய்ப்பு உண்டு.
11) தொழிற்கல்வி சிறப்பு தரும்.
12) தர்ம குணம் உள்ளவர்கள்.
13) மருத்துவ துறையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
14) தொடர் முயர்ச்சியாளர்.
15) அறிவாளிகளை உடன் வைத்து இருப்பவர்.
16) திருமணத்திற்கு பிறகு தந்தை அன்பு தடைபடும் வாய்ப்பு உண்டு.
17) ஆய்வு மனபண்மை உள்ளவர்.
18) சுய தொழில் நன்மை தரும்.
19) உத்திராடம் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தை குறிக்கும்.
அதிக நட்பு வட்டாரம் இருக்கும்.
20) ஆன்மீக பற்றும் தன்னம்பிக்கையும் ஒருங்கே கொண்டவர்கள்.
(இவை அனைத்தும் பொது பலங்கள்)
அபிஜித் முகூர்த்தம் :
நண்பகல் உச்சி நேரம் 11.45 A.M to- 12.15 P.M மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் 5.45 A.M to- 6.15 A.M (கோதூளி முகூர்த்தம்), உச்சி காலம் 11.45 A.M to- 12.15 P.M (அபிஜித் முகூர்த்தம்), அஸ்தமான காலம் 5.45 P.M to- 6.15 P.M (கோதூளி முகூர்த்தம்), ஆகிய மூன்று முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும். இந்த மூன்று வேளைக்கும் நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சாங்க தோசம் கிடையாது. சூரிய உதய அஸ்தமன நேர பேதத்தை கணக்கில் கொள்ளவும்.
நல்ல பஞ்சாங்க நாளும் மேற்கண்ட கோதூளி முகூர்த்தம் அல்லது அபிஜித் முகூர்த்தமம் வந்தால் அதிக பலன் தரும்.
நாள் செய்வதை நல்லவனும் செய்யமாட்டன்.
வெற்றி நமதே !
வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக