சனி, 1 நவம்பர், 2014

உங்கள் ராசிபடி உங்கள் நண்பர்கள்

உங்கள் ராசிபடி உங்கள் நண்பர்கள் 
12 ராசி (லக்ன) காரர்கள் விரும்பி நட்புகொள்ளும் நண்பர்களின் குணாதிசயங்கள்.
(கருதுகோள் பொதுபலன் / ஆய்வினால் மாற்றத்திற்குட்பட்டவை)


மேசம் ராசிகாரர்கள் : 
 நட்புடன் பேசுபவர்கள், நம்பிக்கையாளர்கள், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர்கள், அதிர்ஸ்டசாலிகள், மற்றவரை மகிழ்விப்பவர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர் மற்றும் தனக்கு ஆதாயமாக உள்ள நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


ரிசபம் ராசிகாரர்கள் : 
ரகசியம் காப்பவர்கள், மறைமுக சிந்தனையாளர்கள்,  வெளி நாட்டவர்கள், கண்ணுக்கு தெரியதவர்கள், இண்டர்னெட் நண்பர்கள், முதலீட்டாளர்கள், துப்பறிபவர்கள், மெலிந்த அழகான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் அதிகம் செலவாளி நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


மிதுனம் ராசிகாரர்கள் : 
சுய சிந்தனையாளர்கள், செயல் திறன் மிக்கவர்கள், சக்தி மிக்கவர்கள், நல்ல நிறம், உயரம், உடல்வாகு, கௌரவம் மிக்கவர்கள், வீரம் மிக்கவர்கள், தான் சொல்வதை யோசிக்காமல் வேகமாக செய்யும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


கடகம் ராசிகாரர்கள் : 
முக அழகு, கண் அழகு, மூக்கு அழகு உள்ளவர்கள்,  பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், ஞாபக சக்தி உள்ளவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள்,  அழகான ஆடை அணிபவர்கள் மற்றும் தனக்கு நிதியுதவி வழங்கும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


சிம்மம் ராசிகாரர்கள் : 
இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம்  உள்ளவர்கள், எழுத்தற்றல் மிக்கவர்கள், தகவல் தொடர்பாளர்கள், ஞாபக சக்தி மிக்கவர்கள்,, ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் மற்றும் தன்னை புகழ்ந்து பேசும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


கன்னி ராசிகாரர்கள் : 
அன்பு மிக்கவர்கள், பாசம் மிக்கவர்கள், நேசம் மிக்கவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், சேவை குணம் உள்ளவர்கள், தாயை போல் பாசம் உள்ளவர்கள், பரிசு வழங்குபவர்கள்,  அழகிய வீடு, வாகனம் உள்ளவர்கள்,  கொளு கொளு உடம்பு உள்ளவர்கள் மற்றும் தன்னிடம் அன்பாகவும் ஆதரவாகவும் பேசும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


துலாம் ராசிகாரர்கள் : 
ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள்,, கலை ஞானம் மிக்கவர்கள், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், புகழ் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர்கள், சினிமா  காரர்கள், இசை ஆர்வம் உள்ளவர்கள், அதிர்ஸ்டசாலிகள், நல்ல உடல் கட்டு உள்ளவர்கள் மற்றும் தனது காரியத்தை சாதித்துக் கொள்ள தலைமை பொறுப்பில் உள்ள  நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.விருச்சகம் ராசிகாரர்கள் : 
வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளிகள், தன்னம்பிக்கையாளர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் தன்னிடம் விசுவாசமாக வேலை செய்யும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


தனுசு ராசிகாரர்கள் : 
தன்னைப்போல் குணமுள்ளவர்கள், கூட்டு சிந்தனையாளர்கள், வியாபாரிகள், கௌரவம் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், சரிசமமான அந்தஸ்து உள்ளவர்கள், கட்டழகு உள்ளவர்கள் மற்றும் சக வியாபார மற்றும் சக தொழில் கூட்டாளி நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.

மகரம்  ராசிகாரர்கள் : 
செயற்கையான அழகு உள்ளவர்கள், செயற்கையான பேச்சு உள்ளவர்கள், கொடூர குணம் உள்ளவர்கள், கஸ்டமான சாதனை செய்பவர்கள், சர்க்கஸ் காரர்கள், கார் & பைக் ரைடர்கள், பண பலம் உள்ளவர்கள், கொடூர தோற்றம் உள்ளவர்கள் மற்றும் தனது ரகசிய விஷயங்களுக்கு உதவும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


கும்பம் ராசிகாரர்கள் : 
நம்பிக்கையாளர்கள், இறை நம்பிக்கையாளர்கள், விவேகம் மிக்கவர்கள், விசுவாசம் மிக்கவர்கள்,  ஆராய்ச்சியாளர்கள், சொத்து மிக்கவர்கள், , நூலாசிரியர்கள், தலைவர்கள், பேச்சாளர்கள், பக்தி தோற்றம் உள்ளவர்கள், பருத்த உடல் உள்ளவர்கள் மற்றும் தனக்கு நல்ல விஷயங்களை சொல்லித்தரும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.


மீனம்  ராசிகாரர்கள் : 
கௌரவமான வேலையில் உள்ளவர்கள், கௌரவமான பதவி உள்ளவர்கள், , அந்தஸ்து மிக்கவர்கள், விருது பெற்றவர்கள், திறமை மிக்கவர்கள், உயர்ந்த பொறுப்பு உள்ளவர்கள், தன்னுடன் வேலைபார்பவர்கள் மற்றும் தனக்கு நல்ல தொழில் ஆலோசனை வழங்கும் நண்பர்களுடன் நட்பு கொள்வார்கள்.

உன் நண்பனை காட்டு
சொல்கிறேன் 
நீ யாரென்று

உனது குணம் உனது நண்பனில் தெரியும்
ஆகவே நல்ல நண்பர்கள் உங்கள் வாழ்வின் ஏணிகள்

நட்புடன் இருப்போம்
நட்பை மதிப்போம்
வாழ்க வளமுடன்
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக