வெள்ளி, 17 அக்டோபர், 2014

லக்னாதிபதி ஜாதகரின் செயலின் பிரதிபளிப்பு

லக்னாதிபதி ஜாதகரின் செயலின் பிரதிபளிப்பு
(ஒர் அறிமுகம் - ஜோதிட ஆரம்ப நிலையாளர்களுக்கு)

லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் சுயசிந்தனையாளர், சுய நலவாதி, அறிவாளி, வேகமானவர்.
லக்னாதிபதி 2ல் இருந்தால் பண பற்று உள்ளவர். பேச்சாற்றல் ஆர்வம் இருக்கும், பணத்தை தேடுபவர்.
லக்னாதிபதி 3ல் இருந்தால் தொடர் முயற்சியாளர், பிரயாண ஆர்வம் உள்ளவர். எழுத்தாற்றல் ஆர்வம் இருக்கும்.
லக்னாதிபதி 4ல் இருந்தால் சொத்து சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். கல்வியாளர்.
லக்னாதிபதி 5ல் இருந்தால் கலை ஆர்வம் உள்ளவர். அதிர்ஷ்டம் மிக்கவர். எதையும் டேக் ட் ஈசி என எடுத்துக் கொள்பவர்.
லக்னாதிபதி 6ல் இருந்தால் எதிரி, நோய், வழக்குகளை கண்டு பயபடாமல் அதை நெருங்குபவர்.
லக்னாதிபதி 7ல் இருந்தால் மற்றவருடன் சுமூக உறவு உள்ளவர். வியாபாரி.
லக்னாதிபதி 8ல் இருந்தால் மற்றவரால் செய்யமுடியாத வேலையை செய்து பிரச்சனை மற்றும் விபத்தில் மாட்டிக்கொள்பவர். எதிர்மறை சிந்தனியாளர்.
லக்னாதிபதி 9ல் இருந்தால் ஆன்மீக சிந்தனையாளர், குரு உபதேசம் கேட்டு நடப்பவர்.
லக்னாதிபதி 10ல் இருந்தால் தொழில் பற்று உள்ளவர். தொழில் கெளரவம் மிக்கவர்.
லக்னாதிபதி 11ல் இருந்தால் லாப சிந்தனையாளர், நட்பு வட்டாரம் மிக்கவர்.
லக்னாதிபதி 12ல் இருந்தால் வெளி நாட்டு தொடர்பு, மறைமுக சிந்தனையாளர்.
லக்னாதிபதி பிறபாவத்தில் இருப்பதற்க்கும் பிறபாவாதிபதி லக்னதில் இருப்பதற்க்கும் விதியாசம் உண்டு.
உதாரணம் :
லக்னாதிபதி 8ல் இருந்தால் ஜாதகர் ஆப்பை தேடி போய் ஒக்காருவார்.
8ம் பாவாதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் இருக்கும் இடத்தை தேடி ஆப்பு வரும்.
லக்னாதிபதி 2ல் இருந்தால் ஜாதகர் பணத்தை தேடி செல்வார்.
2ம் பாவாதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் இருக்கும் இடத்தை தேடி பணம் வரும்.
வாழ்க வளமுடன்.
வெற்றி நமதே !

1 கருத்து:

testing சொன்னது…

நான் உங்களை நேரில் சந்திக்க விருப்புகிறேன் உங்கள் mobile no,Address கிடைக்கும்மா ?
நன்றி
நகுல்.

கருத்துரையிடுக