வெள்ளி, 30 ஜனவரி, 2015

உங்கள் பிளட் குரூப்பும் உங்கள் கேரக்டரும் : (பொது பலன் கருதுகோள்)

உங்கள் பிளட் குரூப்பும்
உங்கள் கேரக்டரும் :
(பொது பலன் கருதுகோள்)


A+ ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
நட்புடன் பேசுபவர்கள், நம்பிக்கையாளர்கள், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர்கள், அதிர்ஸ்டசாலிகள், மற்றவரை மகிழ்விப்பவர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர், வஞ்சகன், பொய்யன், முரடன், வழி நடப்பவன். பிறர்க்கு உதவுபவன். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள், கடுகடுப்பானவர், தனது கருத்தை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள், பிறர் குற்றத்தை எடுத்து சொல்லி மற்றவரிடம் கெட்ட பெயர் பெறுபவர். சிறந்த தொழில் வல்லுனர். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என தனது கடமையை தர்மத்தின் வழியில் செய்து பணத்தை ஈட்டுவார்கள். பணம் இவரை தேடி வரும். குறிக்கோள் மிக்கவர், அவசரககாரர்.

B+ ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
ரகசியம் காப்பவர்கள், மறைமுக சிந்தனையாளர்கள், வெளி நாட்டவர்கள், கண்ணுக்கு தெரியதவர்கள், இண்டர்னெட் நண்பர்கள், முதலீட்டாளர்கள், துப்பறிபவர்கள், மெலிந்த அழகான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் செலவாளி. செல்வந்தன், வசிகரம் மிக்கவன், மென்மையான செயல் செய்பவன், வழி நடத்துபவன். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், இவர்களை பாராட்டி எதையும் சாதிக்கலாம், இவர்களை விமர்சித்தால் இவர்களின் எதிர்ப்பு வந்து சேரும், கெஞ்சினால் மின்சுவார்கள், மிஞ்சினால் கென்சுவார்கள், செயல் திறன் மிக்கவர்கள். பணம் பத்தும் செய்யும் அந்த பணம் எனிடம் இருந்தால் நான் பதினொன்றும் செய்வேன் என்பது போல் பணத்தின்மீது அதிக பற்று உள்ளவர்கள். சகிப்பு தன்மை மிக்கவர், உற்பத்தியளர்

AB- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
முக அழகு, கண் அழகு, மூக்கு அழகு உள்ளவர்கள், பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், ஞாபக சக்தி உள்ளவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், அழகான ஆடை அணிபவர்கள் மற்றும் நிதியுதவி வழங்குபவர்கள். கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பனவன், வழி நடத்துதல் வழி நடப்பது இரண்டும். இனிய சொற்களால் யாரையும் மயக்கிவிடுப்வர்கள், சுற்றமும் நட்பும் நிரம்ப பெற்றவர்கள், பணிவுடையவர்கள். இளகிய மனம் உடையவர்கள், அடிக்கடி தனது கொள்கைகளையும் தொழிலையும் மாற்றுபவர்கள்.சின்ன மீனை போட்டி பெரியமீனை பிடிக்கும் லாப சிந்தனையாளர். பல வழிகளில் பணம் பன்னும் யுத்தியை கையால்பவர். வரவுக்குவமேல் செலவு செய்ய மாட்டார்கள். உணர்ச்சி வசககாரர், பாதுகப்பானவர்.

AB+ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம் உள்ளவர்கள், எழுத்தற்றல் மிக்கவர்கள், தகவல் தொடர்பாளர்கள், ஞாபக சக்தி மிக்கவர்கள்,, ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் மற்றும் தன்னை புகழ்ந்து பேசினால் எதையும் செய்வார்கள். தனவான், அலட்சிய பார்வை உள்ளவன், தீட்டிய திட்டத்தை முடித்தபின் தான் உறங்குவார்கள், சுற்றத்தினரை ஆதரிப்பவர்கள், வழி நடத்துபவன். யதார்தவாதி, அதிக நண்பர்களை வைத்துக்கொள்ள மாட்டார்கள், கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.பணம் போட்டு பணம் எடுக்கும் சூட்சமம் தெரிந்த தோழிலதிபர்கள். தனித்துவமான முறையில் பணத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியாளராக திகழ்வார்கள். கடன் வாங்கிய பணத்தை வைத்தே கடனை கட்டி லாபமும் பெறுவார்கள். வசிகரகாரர், வலிமையனவர்.

B- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள்,, கலை ஞானம் மிக்கவர்கள், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், புகழ் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர்கள், சினிமா காரர்கள், இசை ஆர்வம் உள்ளவர்கள், அதிர்ஸ்டசாலிகள், நல்ல உடல் கட்டு உள்ளவர்கள் மற்றும் தனது தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்.உழைப்பாளி, பலவீனன், விசுவாசி, வழி நடப்பவன். அவ்வளவு சீக்கிரம் பிறரிடம் பேசமாட்டார்கள், பிடித்தவர்களிடம் மட்டுமே பேசுவார்கள், தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள், பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். ஒத்து போகும் குணம், பொது ஜன தொடர்பளர்.

A- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளிகள், தன்னம்பிக்கையாளர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் விசுவாசமாக வேலை செய்பவர்கள். வஞ்சகன், பொய்யன், முரடன், வழி நடப்பவன். பிறர்க்கு உதவுபவன். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள், கடுகடுப்பானவர், தனது கருத்தை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள், பிறர் குற்றத்தை எடுத்து சொல்லி மற்றவரிடம் கெட்ட பெயர் பெறுபவர். சிறந்த தொழில் வல்லுனர். பணத்தை அடைய மற்றவரால் முடியாத செயலையும் மகிழ்ச்சியுடன் செய்து பணம் ஈட்டுபவர்கள். பணத்தின்மீது அதிக பற்று உள்ளவர்கள் ஆனால் பணத்தை சேமிக்க தெரியாதவர்கள். ஆழ்ந்து போகும் குணம், ஊடுருவும் தன்மையளர்.

O+ ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
தன்னைப்போல் குணமுள்ளவர்கள், கூட்டு சிந்தனையாளர்கள், வியாபாரிகள், கௌரவம் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், சரிசமமான அந்தஸ்து உள்ளவர்கள், கட்டழகு உள்ளவர்கள் மற்றும் சக வியாபார மற்றும் சக தொழில் கூட்டாளி நண்பர்களுடன் நட்புடன் இருப்பார்கள். சத்தியவான், தர்மவான், விவேகி, சந்தோஷவான், வழி நடத்துபவன். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள், சுற்றமிக்கவர்கள். சுற்றத்தற்கு தேவையனதை செய்ய தயங்காதவர்கள், பக்தி மிக்கவர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் சொன்னதை வேத வாக்காக எடுத்து நடப்பவர்கள்.என் செயல் பணி செய்து கிடப்பதே என பிறர்க்கு முன்னுதாரணமான தர்மத்தின் வழியில் பணத்தை ஈட்டுவார்கள். பணத்தின் மீது அதிக பற்று இல்லாதவர்கள். கடன் வாங்கி நேர்மையான முறையில் தொழில் செய்து கட்டுபவர்கள். திட்டமிடும் தன்மை, சரியக சிந்திபர்.

O- ரத்த பிரிவை சேர்ந்தவர்களின் குணாதிசியங்கள் :
கௌரவமான வேலையில் உள்ளவர்கள், கௌரவமான பதவி உள்ளவர்கள், அந்தஸ்து மிக்கவர்கள், விருது பெற்றவர்கள், திறமை மிக்கவர்கள், உயர்ந்த பொறுப்பு உள்ளவர்கள், தன்னுடன் வேலைபார்பவர்கள் மற்றும் நல்ல தொழில் ஆலோசனை வழங்குபவர்கள். சத்தியவான், தர்மவான், விவேகி, சந்தோஷவான், வழி நடத்துபவன். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள், சுற்றமிக்கவர்கள். சுற்றத்தற்கு தேவையனதை செய்ய தயங்காதவர்கள், பக்தி மிக்கவர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் சொன்னதை வேத வாக்காக எடுத்து நடப்பவர்கள்.தர்மத்தின் வழியில் பணத்தை ஈட்டுபவர்கள். வீண் செலவு செய்ய மாட்டர்கள். தினமும் ஒரேமதிரியான வருமானம் ஈட்டும் தன்மையுள்ளவர்கள். இவர்கள் முக ராசிக்கு யாருடம் கடன் கேட்டாலும் கிடைக்கும். தெளிவற்ற தன்மை, செயளில் தனி தன்மையளர்.

மேற்கண்ட ரத்தபிரிவு இல்லாமல் ஸ்பெசல் ரத்தபிரிவுகள் உள்ளன.
மொத்தம் 33 க்கும் மேற்பட்ட ரத்த பிரிவுகள் உள்ளன.
உங்கள் ரத்த பிரிவை எழுதி உங்கள் பாக்கெட்டில்
வைத்திருங்கள் அது உங்களுக்கு அவசர காலத்தில் உதவும்
விலைமதிப்பில்லாத ரத்தத்தை
பிறர் உயிர் காக்க
ரத்த தானம் செய்து
அவர்களை நம்பி இருக்கும்
குடும்பத்தை காப்போம் !!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக