வெள்ளி, 30 ஜனவரி, 2015

12 ராசி (லக்கின) காரர்கள் தர்மம் (பரிகாரம்) செய்யும் ஸ்டையில்

12 ராசி (லக்கின) காரர்கள் தர்மம் (பரிகாரம்) செய்யும் ஸ்டையில்
ஜோதிட மறுமலர்ச்சி பரிகாரம்
(ஜோதிட கருதுகோள் ராசி பரிகாரம்)


மனகஷ்டத்தோடு வந்தவன்
தீர்க்கிறான் !?!
ஜோதிடரின்
பண கஷ்டத்தை
--------------------------------(புதுகவிதை)
அப்படி நம் கஷ்டத்தை போக்கும்
மக்களுக்கு நல்லது செய்வது நம் கடமை அல்லவா ?
ஜோதிடத்தின் புதிய அனுகுமுறை கொண்டு
மக்கள் தொண்டாற்றுவோம் வாருங்கள்.
அனைவருக்கும் மகிழ்ச்சியை தருவோம்.

1) மேச (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவி செய்தால், பறவைகளுக்கு தானியம் வைத்தல், பிறர் உயர நல்ல ஆலோசனையும் உதவியும் செய்வதன் மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும். ப

2) ரிசப (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
அன்னதானம் செய்வது அல்லது அன்னதானம் செய்ய உதவுவது, அல்லது ஆதரவற்றவரை பராமரிப்பது, பசு மற்றும் மிருகங்களுக்கு உணவிடுதல், அவற்றை துன்புறுத்தாமல் இருத்தல், மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

3) மிதுனம் (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வங்கிதருவது இலவசமாக டியூசன் எடுத்து உதவுவது, பறவைகளுக்கு தானியம் வைத்தல், பறவை இனம் அழியாமல் காத்தல் மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

4) கடகம் (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
வருடம் ஒருமுறை ரத்த தானம் செய்து பிறர் உயிர் காக்க உதவுவது, இலவச தங்கும் விடுதி அமைத்து தருவது, வஸ்திர தானம் செய்வது மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

5) சிம்ம (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
அன்னாதை குழந்தகளுக்கு உதவுவது, அன்னாதை ஆசிரமத்திற்கு உதவுவது, அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது, வஸ்திர தானம் செய்வது, மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

6) கன்னி (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
தன்னை விட வசதி குறைவானவருக்கு மருத்துவ உதவி செய்தல், அல்லது இலவச மருத்துவமனைக்கு நங்கொடை கொடுத்தல், பசு மற்றும் மிருகங்களுக்கு உணவிடுதல், அவற்றை துன்புறுத்தாமல் இருத்தல், மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

7) துலாம் (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
திருமண வயது கடந்து திருமணம் செய்ய முடியாமல் இருப்பவர் திருமணம் நடக்க உதவுவது. தாலி வாங்கி தருதல், வசதியானவர்கள் இலவச திருமணம் நடத்தி வைத்தல் ஆகியவற்றின் மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

8) விருச்சக (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
விபத்தில் அடிபட்டு கேட்பறற்று இருப்பவருக்கு மருத்துவ உதவி செய்வது, வஸ்திர தானம் செய்வது, பொதி இடங்களில் இலவச கழிவறைகள் அமைத்து தருதல், அடுத்தவர் ஈம காரியம் செய்ய உதவுவது, தன் மரணத்துக்கு பின் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வது மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

9) தனுசு (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
கல்வி பயில முடியாத குழந்தைகளுக்கு படிக்க உதவிசெய்தல், டிரஸ்ட் அமைத்து இலவச மருதுவமுகாம், இலவச கல்வி, இலவச சேவை செய்வது, மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

10) மகர (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
உடல் ஊனமுற்றோருக்கு உதவுவது, உடல் ஊனமுற்றோரை தனது நிறுவனங்களில் பனியில் அமர்த்தி உதவுவது, உடல் ஊனமுற்றோருக்கு இலவச கருவி அல்லது தொழில் அமைத்து தருவதன் மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

11) கும்ப (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
ஆதரவற்ற முதியோர்க்கு உதவுவது, முதியோர் இல்லம் அமைப்பது, முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, தான் இறந்தபின் தனது உடம்பை மருத்துவ ஆய்வுக்கு கொடுத்து உதவுவது மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

12) மீன (ராசி) லக்கின காரர்களுக்கான தர்மம் (பரிகாரம்) :
வஸ்திர தானம் செய்வது, இலவச மருத்துவ முகாம்களுக்கு உதவுவது. இலவச தங்கும் விடுதி அமைத்து தருவது, தனது இறப்புக்கு பின் கண்தானம் செய்வது மூலம் இறப்பற்ற நிலை பெறலாம், தனக்கு மிஞ்சியதை தானம் செய்வது மூலம் உங்கள் பாவம் போய் அதிர்ஷ்டம் வந்து சேரும்.


ஒன்றை எதிர்பார்த்து செய்வது தானம்
பிரதிபலன் எதிபாரமல் செய்வது தர்மம்
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
நாம் செய்யும் பரிகாரம் மற்றவரை
மகிழ்ச்சியில் ஆழ்த்தவேடும்
அவரின் வாழ்த்து நம் பாவத்தை போக்கும்
சந்தோஷதுல பெரிய சந்தோஷம் மததவங்கள சந்தோஷ படுத்தி பக்குறது தான். மத்தவங்களுக்கு சந்தோசம் கொடுத்த நமக்கு சந்தோசம் தானா வரும். நன்றி.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichettyகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக