வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

நவகிரகமும் மருத்துவ முறையும் (கருதுகோள் ஜோதிடம்)



நவகிரகமும் மருத்துவ முறையும்
(கருதுகோள் ஜோதிடம்)




சர (மேசம், கடகம், துலாம், மகரம்) ராசி உடலை குறிக்கும்
ஸ்திர (ரிஷபம், சிம்மம், விருச்சகம், கும்பம்) ராசி உயிரை குறிக்கும்
உபய (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) ராசி ஆன்மாவை குறிக்கும்
சனி நோயாளியை குறிக்கும்
ராகு நோயினால் ஏற்படும் பிரச்சனையை குறிக்கும்
செவ்வாய் மருந்தை குறிக்கும்
குரு நோயிலிருந்து விடுபடுவதை குறிக்கும்
சூரியன் மருத்துவரை குறிக்கும்
சூரியன் + சூரியன் = பொது மருத்துவம், இயற்கை மருத்துவம், யோக மருத்துவம்,
சூரியன் + சந்திரன் = உணவு மருத்துவம், எண்ணெய் மருத்துவம் (ஆயுர்வேதம்)
சூரியன் + செவ்வாய் = ரணசிகிச்சை (ஆங்கில மருத்துவம்), அக்கு பன்சர் மருத்துவம்
சூரியன் + புதன் = ஹோமியோபதி மருத்துவம்
சூரியன் + குரு = மனோதத்துவ மருத்துவம்
சூரியன் + சுக்கிரன் = பாலியல் மருத்துவம், மலர் மருத்துவம், வண்ணமருத்துவம்,
சூரியன் + சனி = சித்தமருத்துவம், வர்ம வைத்தியம்
சூரியன் + ராகு = அசைவ உணவு மருத்துவம் (யுனானி மருத்துவம்), மந்திரீக மருத்துவம், பிராண சிகிச்சை,
சூரியன் + கேது = விஷ வைத்தியம், மயக்க மருத்துவம், மெஸ்மெரிசம், ஹிப்னாடிச மருத்துவம்
இதை பயன்படுத்துவது எப்படி
6 ம் பாவம் நோய்,
அதனால் ஏற்படும் வலி வேதனை 8ம் பாவம்
அதற்கு நாம் செல்லும் மருத்துவமனை 12ம் பாவகம்
நோயிலிருந்து குணமாவதை 5 ம் பாவகம் காட்டும்
ஆகவே 5ம் பாவாதிபதி நின்ற நட்சத்திரதிபதிக்குரிய மருத்துவம் செய்தால் நோய் குணமாகும்.



உதாரணம் மீன லக்கினம் 5 ம் பாவதிபதி சந்திரன் விருச்சகத்தில் கேட்டை நட்சத்திரத்தில் இருந்தால்
அவருக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் நோய் குணமாகும்.
அனுபவத்தில் ஆய்வு செய்து பாருங்கள்.
சுத்தம் சுகாதரம் தரும்
அசுத்தம் நோயை உருவாக்கும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
Astro Marichetty
http://jothidaulagam.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக