வெள்ளி, 30 ஜனவரி, 2015

12 ராசி (லக்ன) காரர்களுக்கு பிடித்த பொங்கல்

12 ராசி (லக்ன) காரர்களுக்கு பிடித்த பொங்கல்
(பொது பலனில் ஒரு சின்ன கற்ப்பனை)
முகனூல் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

1) மேச ராசிகாரர்கள் சூடாகவும் சுவையாகவும் முந்திரி, திராட்சையுடன் நெய் கலந்த பொங்கலை ருசித்து ரசித்து உண்ணுபவர்கள். பொங்கல் தினத்தில் கரும்பு விரும்பி சாப்பிட்டுவிட்டு நாக்கை புண் செய்து கொள்ளாமல் இருந்தால் சரி. ஆடு மாடுகளை குழிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி பட்டி பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் இதிகாச சண்டை படங்களை பாத்து மகிழ்வார்கள்.

2) ரிசப ராசிகாரர்கள் மிதமான சூடாகவும் சுவையாகவும் வீட்டில் பாரம்பரிய முறையில் செய்த பொங்கலை ருசித்து ரசித்து உண்ணுபவர்கள். தித்திக்கும் செங்கரும்பை ஜீசாக எளிதில் குடிக்கவே ஆசை கொள்வார்கள், காளை மாடோ பசு மாடோ அவற்றை அலங்கரித்து அவற்றுடன் அன்புடன் பொங்கல் பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் குடுப்ப பாங்கான காமெடி படங்களை பாத்து மகிழ்வார்கள்.

3) மிதுனம் ராசிகாரர்கள் குடுப்பத்தோடு சூடாகவும் சுவையாகவும் முந்திரி, திராட்சையுடன் நெய் கலந்த பொங்கலை ருசித்து ரசித்து பொங்கல் புரோகிராமை டிவியில் பார்த்துக்கொண்டே உண்ணுபவர்கள். இனிப்போடு கார உணவையும் கல்ந்து சாப்பிட்டு கொண்ட்டடுவார்கள். டிவியில் பிரபலமாக ஓடியபடங்களை படங்களை பாத்து மகிழ்வார்கள்.

4) கடகம் ராசிகாரர்கள் தனக்கு பிடித்த பொங்கலை உயர்தரமாக வீட்டில் செய்து சூடாக நெய்யில் முந்த்திரி, திராட்சை மிதக்க நெய் சொட்ட சொட்ட உண்ண விரும்புவார்கள். அவர்கள் சப்பிடுவதை பார்த்தால் நமக்கு நாக்கில் எச்சில் ஊறும். கரும்பு ப்ரியர்கள். கால் நடைகளை அலங்காரம் செய்து அவற்றுடன் பொங்கல் கொண்ட்டாடுவார்கள், டிவியில் சண்டை, பிரமாண்மான சாகச படங்களை பாத்து மகிழ்வார்கள்.

5) சிம்ம ராசிகாரர்கள் ஸ்வாமிக்கு படைத்த பொங்கலுடன் இதர பல வகைகளுடன் தனது முன்னேற்றத்திற்கு உதவியவருடன் இனிப்பான பொங்கலை உண்டு மகிழ்வார்கள்.
அதேபோல் தனது பனிக்கு உதவிய கால் நடைகளை கௌரவிக்கும் பொருட்டு அவற்றிக்கு பூஜை செய்து பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் அங்காங்கே நடக்க்கும் பொங்கல் நிகழ்ச்சிகளை பாத்து மகிழ்வார்கள்.

6) கன்னி ராசிகாரர்கள் பொங்கல் எவ்வளவு சுவையாக இருந்தலும் அளவாகதான் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுவார்கள். தன் மனைவியுடன் (அ) கூட்டாளிகளுடன் பொங்கல் பண்டிகையை வீர விளையாட்டுடன் கொண்ட்டடுவார்கள். டிவியில் காமெடி படங்களை பாத்து மகிழ்வார்கள்.

7) துலாம் ராசிகாரர்கள் பொங்கலை சுவைக்காக செய்யாமல் பாரம்பர்யத்திற்காக செய்த்து உண்பார்கள். அக்கம் பக்கம் உள்ள வீட்டினருக்கு பொங்கல் பிரசாதத்தை வழங்கி மகிழ்வார்கள். வீர விளையாட்டை கண்டு மகிழ்வார்கள். பழைய படங்களையும் பாடல் காட்சிகளையும் பாத்து மகிழ்வார்கள்.

8) விருச்சக ராசிகாரர்கள் இறை நன்பிக்கையுடன் அதிகாலை எழுந்து பொங்கல் செய்து சுவாமிக்கு படைத்து இந்த ஆண்டு நமக்கு சிறப்பான ஆண்டு என்ற நம்பிக்கையுடன் பொங்கலை உண்டு மகிழ்வார்கள். வீர விளையாட்டில் கலந்துக்கொண்டு ஊருக்கும் குடுப்பத்துக்கும் பேர் பெற்று தருவார். டிவியில் அழகிய வசனங்கள் கொண்ட படங்களை பாத்து மகிழ்வார்கள்.

9) தனுசு ராசிகாரர்கள் சுஸ்வாமிக்கு படைத்த பொங்கலுடன் இதர பல வகைகளுடன் தனது முன்னேற்றத்திற்கு உதவியவருடன் இனிப்பான பொங்கலை உண்டு மகிழ்வார்கள்.
அதேபோல் தனது பனிக்கு உதவிய கால் நடைகளை கௌரவிக்கும் பொருட்டு அவற்றிக்கு பூஜை செய்து பொங்கல் கொண்டாடுவார்கள். டிவியில் ஆன்மீக படங்களை பாத்து மகிழ்வார்கள்.

10) மகர ராசிகாரர்கள் பொங்கல் எவ்வளவு சுவையாக இருந்தலும் அளவாகதான் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுவார்கள். தன் மனைவியுடன் (அ) தனக்கு பிடித்தவருடன் பொங்கல் பண்டிகையை வீர விளையாட்டுடன் கொண்ட்டடுவார்கள். டிவியில் பிரமாண்ட படம் மற்றும் அதிக வசூல் தந்த படங்களை பாத்து மகிழ்வார்கள்.

11) கும்ப ராசிகாரர்கள் சூடாகவும் சுவையாகவும் முந்திரி, திராட்சையுடன் நெய் கலந்த பொங்கலை ருசித்து ரசித்து பொங்கல் புரோகிராமை டிவியில் பார்த்துக்கொண்டே உண்ணுபவர்கள். இனிப்போடு கார உணவையும் கலந்து சாப்பிட்டு கொண்ட்டடுவார்கள். டிவி நியூசையும் ஸ்பெசல் திரைபடத்தையும் மாற்றி பாத்து மகிழ்வார்கள்.
12) மீன ராசிகாரர்கள் இறை நன்பிக்கையுடன் அதிகாலை எழுந்து பொங்கல் செய்து சுவாமிக்கு படைத்து இந்த ஆண்டு நமக்கு சிறப்பான ஆண்டு என்ற நம்பிக்கையுடன் பொங்கலை உண்டு மகிழ்வார்கள். பண்டிகை காலங்களில் மெய்மறந்த்து தூங்கி மகிழ்வார்கள். டிவியில் குடுப்ப பாங்கான காமெடி படங்களை பார்த்து தூங்கி மகிழ்வார்கள்.

சேற்றில் உழவன் கால் வைக்காவிட்டால்
நாம் உணவில் கை வைக்க முடியாது.
உழவு தொழில் செய்து நாட்டைக் காக்கும் உழவர் தம் குடுப்பத்தை வாழ்த்துவோம்.
தன் ரத்தத்தை பாலக்கி தரும் பசும் மற்றும் கால் நடைகளை பேணிக்காப்போம்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக