வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

12 ராசி (லக்கின) காரர்கள் எழுதும் ஸ்டையில்

12 ராசி (லக்கின) காரர்கள் எழுதும் ஸ்டையில்
(கற்பனை கருதுகோள் பொதுபலன்)


1) மேச ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக வேகமாகவும், அதிக அழுத்தம் இல்லாமலும், எழுத்துக்கள் உயரமாகவும் மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். இடத்திற்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துகள் உயரமாகவும் நீள் வட்ட வடிவிலும் எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

2) ரிஷபம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து அழகாகவும், பொறுமையாகவும் அதிக அழுத்தம் கொடுத்து எழுத்துக்கள் குட்டையாகவும் வட்ட வடிவமாகவும் மற்றவர்களை வசிகரிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துகள் குட்டையாகவும் எழுத்து முடிவு ஸ்ரோக் வட்டமாக இருக்கும்படி எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

3) மிதுனம் ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து வித்தியாசமாவும், தனித்துவமாகவும், அழுத்தமாகவும், எழுத்துக்கள் ஏற்ற இறக்கத்துடன் ஸ்டையிலாக மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் ஏற்ற இறக்கத்துடன் ஸ்டையில் லெட்டரில் விதியாசமாக எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

4) கடகம் ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக வேகமாகவும், அதிக அழுத்தம் இல்லாமலும், எழுத்துக்கள் உயரமாகவும் மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் வட்டமும் கூர்மையும் கலந்ததாக இருக்கும். எழுத்தில் பாதி கூர்மையும், பாதி வட்ட வடிவம் கொண்டதாக எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

5) சிம்மம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து வேகமாகவுன், அழுத்தமில்லாமலும் சமமாகவும் நேர்த்தியாகவும் சுருக்கெழுத்தாகவும் தனித்துவமாகவும் எழுதுபவர்கள். தேவைக்கெற்ப அழகாக எழுதுபவர்கள். அதிர்ஷ்ட ஸ்டார் குறியீடுகள் அடங்கிய எழுத்துக்களை அடிக்கடி எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

6) கன்னீ ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து வேகமாகவும், அதிக அழுத்தமாகவும், எழுத்துக்கள் உயரம் குறைவாகவும், அகலமாக மற்றவருக்கு புரியாதபடி எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் அகலமாகவும் உயரம் குறைவாகவும் கூர்மையான எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

7) துலாம் ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக சீரான வேகத்தோடு அதிக அழுத்தமில்லாமல் ஒழுங்காக உயரமான எழுத்துகளை மற்றவர் எளிதில் படிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். இறைசின்னங்களுடன் உயரமான எழுத்துக்களை நீள் சதுர வடிவில் எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

8) விருச்சகம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து மெதுவாகவும், அதிக அழுத்தமாகவும், குட்டையாகவும் கூர்மை இல்லமலும் மற்றவர் சற்று கஷ்டபட்டு படிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். குட்டை எழுத்துக்களில் மேல் இருந்து கீழ்வரும் ஸ்ரோக் திக்காகவும் கீழ் இருந்து மேலே போகும் ஸ்ரொக் மெலிதாகவும் இருக்குமாறு எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

9) தனுசு ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து சீரான வேகத்தோடு அதிக அழுத்தமில்லாமல் ஒழுங்காக குட்டையாகவும் கூர்மை இல்லமலும் மற்றவர் எளிதில் படிக்கும்படி எழுதுபவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாக எழுதும் தன்மை உள்ளவர்கள். தனித்துவமான எழுத்துகளின் முடிவு கடிகார எதிர்சுழற்சியாக அமையும்படியும் புள்ளிக்கு பதில் சிறு வட்டம் போடுவது போல் எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

10) மகரம் ராசி (லக்கின) காரர்கள் :
சாய்வு இல்லாமல் நேராக மெதுவாகவும், அதிக அழுத்தமில்லாமல் ஒழுங்காக எழுத்துக்கள் உயரமாகவும் மற்றவருக்கு எளிதில் புரியும்படியும் எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்தும் வேகத்தை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். எழுத்துக்கள் கூர்மை இல்லாமல் உயரமாக நீள்வட்ட வடிவில் எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

11) கும்பம் ராசி (லக்கின) காரர்கள் :
வலது புறம் சாய்த்து வேகமாகவும், அதிக அழுத்தமாகவும், எழுத்துக்கள் உயரம் குறைவாகவும், அகலமாக மற்றவருக்கு புரியும்படி எழுதுபவர்கள். மனோ நிலைக்கு தகுந்தாற்போல் தனது எழுத்து நடையை மாற்றி எழுதும் தன்மை உள்ளவர்கள். கூர்மையான உயரம் குறைவான வலது சுழற்சி எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.
12) மீனம் ராசி (லக்கின) காரர்கள் :
இடதுபுறம் சாய்த்து சீரான வேகத்தோடு அழகாகவும் சம உயரத்திலும் அதிக அழுத்தமில்லாமல் மற்றவர் பாராட்டும் படி இடம் விட்டு எழுதுபவர்கள். மனோ நிலை மாறினாலும் எழுதும் எழுத்தும் எழுதும் விதமும் மாறாது. அழகான பூ பொன்ற வடிவ ஸ்டையில் எழுத்துக்களை எழுதுவது பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

எண்ணும் எழுத்தும் கண் என தகும்
உங்கள் எழுத்து வடிவம் நடை ஆகியவற்றை மாற்றினால்
உங்கள் ஆழ்மனம் மாற்றம் அடைந்து
உங்கள் தலைஎழுத்து மாறும்
ஏன்னா கையெழுத்துமாதிரி தான்
தலை எழுத்து இருக்குமுன்னு சொல்லுவாங்க
அது நிஜம் தான்
உங்கள் கையெழுத்து வடிவம் மாறின
15 நாள்ல வித்தியாசம் தெரியும்
முயன்று பாருங்கள்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக