திங்கள், 13 ஏப்ரல், 2015

மன்மத வருட புத்தாண்டு பலன் ஆதாயம் விரையம். (ராசி பலன்)

மன்மத வருட புத்தாண்டு பலன்
ஆதாயம் விரையம்.
(ராசி பலன்)
முகனூல் நண்பர்கள் அனைவருக்கும் 
மன்மத வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!


பஞ்சாங்கத்தில் போடும் இராசிகளின் ஆதாயம் விரையம் கணிப்பது எப்படி என பார்ப்போம்.
1)ஆதாயம் விரையம் கண்டரிய வேண்டிய ராசிகளின் அதிபதிக்கு கதிர் தெரிய வேண்டும்.
2) அடுத்து அந்த ஆண்டின் இராஜா யார் என்பது தெரிய வேண்டும்.
3) அந்த ஆண்டின் இராஜா எப்படி கண்டு பிடிப்பது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாளின் அதிபதி அந்த ஆண்டின் இராஜா கிரகம் ஆகும். இது தெலுங்கு வருட பிறப்பு நாள் ஆகும்.
4) கிரக கதிர் செவ்வாய் =8, சுக்கிரன் = 21, புதன் = 17, சந்திரன் = 2, சூரியன் = 6, குரு = 19, சனி = 10 ஆகும்.
5) (((ஆதாயம் அறிய வேண்டிய ராசி அதிபதி கதிர் + அந்த ஆண்டு இராஜா கிரக கதிர்) X 3) + 5) / 15 இன் மீதம் ஆதாயம் ஆகும். மீதம் 0 வந்தால் 15 எனக் கொள்க.
6) மேற்கண்ட விடையின் ஈவை 3 ஆல் பெருக்கி அத்துடன் 5 யை கூட்டி வருவதை 15 ஆல் வகுக்க வரும் மீதன் விரயம் ஆகும். மீதம் 0 வந்தால் 15 எனக் கொள்க.
உதாரணம் மன்மத வருடத்துக்கு மேச, விருச்சக ராசியின் ஆதயம் விரயம் கண்போம்.
மன்மத வருடத்தின் இராஜா கண்டரிய மன்மத வருடத்தின் முந்தைய வருடமான ஜய வருடத்தின் பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதமை பங்குனி 07 (21-3-2015) சனிக்கிழமை ஆகும். ஆகவே மன்மத வருடத்தின் இராஜா = சனிபகவான் ஆவர்
.
ஆதயம் மேசம், விருச்சகம்
(((8+10)x3)+5)/15 = 59/15 இதன் மீதம் 14 ஆகவே ஆதாயம் 14 ஆகும்
ஈவு 3 இதை ((3X3)+5) / 15 இன் மீதி 14 ஆகும் ஆகவே விரையம் 14 ஆகும்.
ஆக மேசம், விருட்ச்சக ராசிகளின் ஆதாயம் 14 விரையம் 14 ஆகும்.
இதே போல் மற்ற ராசிக்கும் கண்டறியவும்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக