செவ்வாய், 23 டிசம்பர், 2014

(மேடையில் மைக் பிடிக்கலாம் வாங்க) 12 ராசி (லக்கின) காரர்கள் பேசும் ஸ்டையில்

(மேடையில் மைக் பிடிக்கலாம் வாங்க)
12 ராசி (லக்கின) காரர்கள் பேசும் ஸ்டையில்
(கற்பனை கருதுகோள் கவிதை பொதுபலன்)

 
1) மேச ராசிக்காரர்கள் வேகமாக பேசுபவர்கள், விவாத பிரியர்கள், மற்றவர் சொல்லும் கருத்தை எளிதில் ஏற்கமாட்டர்கள். வேகமாக தர்க்கம் செய்பவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. உணர்ச்சிவச பட்டு பேசும்போது சில சமயத்தில் நாதடுமாறும். உண்மையை எந்த இடத்திலும் பூசி மெழுகாமல் சிதறு தேங்காய் போல் உடைப்பார்கள். கட்டளை வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவரை கட்டுபடுத்துவதுபோல் தைரியமாக பேசுவார்கள். தனது காரியம் நடக்க யாரையும் காக்கா பிடிக்கமாட்டர்கள். நேரம் தவறாமை, உணவு, பணம் செல்வாக்கு ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

2) ரிசப ராசிக்காரர்கள் கவர்ச்சியாக நுனி நாக்கில் பிறமொழி கலந்து பேசுபவர்கள். மற்றவர் கவனத்தை ஈக்கும்படி பேசுவார்கள். சமரச பேச்சாளர்கள். தனது கருத்தை எளிதில் வெளியிட மாட்டார்கள். பிறரை தாக்கி பேசமாட்டார்கள். அதனால் அனைவருக்கும் இவரை பிடிக்கும். இடத்துக்கு தகுந்தாற்போல் அல்லது ஆளுக்கு தகுந்தாற்போல் பேசுவார்கள். நாதடுமாறமல் கோர்வையாக பேசுபவர்கள். சிலர் பாடகராக இருப்பார்கள். பனிவான வார்தைகளை பயன்படுத்துவார்கள். சிலர் இரட்டை அர்த்தம், சிலைடையாக பேசுபவராக இருப்பார்கள். தனது காரியம் நடக்க மற்றவரை காக்கா பிடிக்கும் சூட்சமம் அறிந்த விகடகவி இவர்கள்.

3) மிதுனம் ராசிக்காரர்கள் தெளிவாகவும் நிதானமாகவும் அன்பாகவும் பேசுபவர்கள். தன் பேச நினைப்பதை மனதில் அசை போட்டுவிட்டு நிதானமாக பதறாமல் பேசுவார்கள். தனது கருத்தை மற்றவர் ஏற்க வேண்டும் என கட்டாய படுத்தமாட்டர்கள். தவறு நடக்கும் இடத்தில் உண்மையை நாம் சொல்லி என்ன நடக்கபோகிறது என கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள். கட்டளை வார்த்தைகளுக்கு பதில் அன்பான, பாராட்டுதலான வார்த்தைகளை பேசி வேலையை முடித்துக்கொள்வார்கள். தற்புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள். தன்னை புகழ்ந்து பேசுபவர்களுக்கு எதையும் தயங்காமல் செய்வார்கள். அயல் நாடு, உணவு மருந்து சிக்கனம் ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

4) கடகம் ராசிக்காரர்கள் அன்பும் கண்டிப்பும் கலந்து பேசுபவர்கள். இவர்கள் பேசுவதை கேட்பதற்கேன்றே ஒரு கூட்டம் இருக்கும். இவர்களின் பேச்சு தனிதன்மையுடன் புகழ்மிக்கதாக இருக்கும். இவரின் பேச்சுக்கு மற்றவர்கள் கட்டுபடுவார்கள். காதல் வசனங்களை பேசுவதில் வல்லவர்கள். உண்மையை எந்த இடத்திலும் தயங்காமல் சொல்லுபவர்கள். கற்பனை குதிரையை தட்டிவிட்டு கவிதை நடையுடன் பேசி மயக்கும் சிலரும் இதில் அடக்கம். தற்புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள். வெற்றி, லாபம், லட்சியம் ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுவார்கள்.

5) சிம்ம ராசிக்காரர்கள் அறிவும், தெளிவும், கண்டிப்பும், ஆளுமை திறனுடன் பேசுபவர்கள். சமயோசித புத்தியுடன் பேசுபவர்கள். காமடியாகவும் பேச தெரிந்தவர்கள். மற்றவரை கேலி, கிண்டல், நையாண்டி செய்வதில் வல்லவர்கள். இடத்துக்கு தகுந்தாற்போல் அல்லது ஆளுக்கு தகுந்தாற்போல் பேசுவார்கள். நாதடுமாறமல் கோர்வையாக பேசுபவர்கள். சிலர் இரட்டை அர்த்தம், சிலைடையாக பேசுபவராக இருப்பார்கள். உண்மைக்கு உயிக்கொடுப்பவர்கள். லட்ச்சியம், கௌரவம், நிர்வாக திறன், தலைமை பண்பு, தொழில ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

6) கன்னி ராசிக்காரர்கள் மெதுவாகவும் மற்றவருக்கு புரியும்படியும் பேசுபவர்கள். ஞாயத்தை தேவையானவர் தேவையில்லாதவர் என பாகுபாடு இல்லாமல் எந்த இடத்திலும் பேசுபவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. உணர்ச்சிவச பட்டு பேசும்போது சில சமயத்தில் கூட நாதடுமாறாமல் பேசுவார்கள். சிலர் சிறந்த பாடகராகவும் பேச்சாளராகவும் இருப்பார்கள். ஒழுக்கமாகவும் பிறர் மதிக்கும் படியும் பேசுவார்கள். ஆன்மீகம், வித்தை, புத்தகம், நன்னெறி ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

7) துலாம் ராசிக்காரர்கள் தான் சொல்லும் கருத்தை மற்றவர் தட்டாமல் கேட்க வேண்டும் என நினைப்பவர்கள். ஆனால் மற்றவர் சொல்லும் கருத்தை எளிதில் ஏற்கமாட்டர்கள். வேகமாக பேசுபவர்கள், விவாத பிரியர்கள், வேகமாக தர்க்கம் செய்பவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. உணர்ச்சிவச பட்டு பேசும்போது சில சமயத்தில் நாதடுமாறும். தனக்கு தெரிந்த உண்மையை நன்மை கருதி வெளியே சொல்லமாட்டர்கள். ரகசியம் காப்பவர்கள். கோபம் வந்துவிட்டால் நாகரீகமில்லமல் சிலர் பேசுவார்க்ள். அதிர்ஸ்டம், எதிகாலம், யோகம், மறைபொருள் ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

8) விருச்சக ராசிக்காரர்கள் வேகமாகவும், புரியும் படியும் பேசுபவர்கள். சமரச பேச்சாளர்கள். மற்றவர்கள் பேசுவதை கவனமாக இடைமறிக்காமல் கேட்டு அதன்பின் அதற்கேற்றாற்போல் பேசுவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் ஞாயத்துடன் பேசுவார்கள். இரட்டை அர்த்த இலக்கிய சொர்களை கையால்வதில் சிலர் கை தேர்ந்தவராக இருப்பார்கள். விட்ட சொல்லும் செலவழிந்த நேரமும் திரும்ப பெறமுடியாது என்பதை அறிந்தவர்கள். தனக்கு கேடு ஏற்பட்டாலும் உண்மையை சொல்ல தயங்க மாட்டார்கள். தன்னை சார்ந்தவர்களின் நன்மை, நலம், உயர்வு ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

9) தனுசு ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரம் பேசமாட்டர்கள், பேசினால் நிறுத்தமாட்டர்கள். கீழ்தட்டு மக்களின் உயர்வை பற்றி பேசுவார்கள். உண்மையை ஊருக்கு சொல்வதில் சந்தோசம் கொள்வார்கள். ரகசியம் என்று எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். மெதுவாகவும் நிதானமாகவும் பேசுவார்கள். ஞாயத்தை தேவையானவர் தேவையில்லாதவர் என பாகுபாடு இல்லாமல் எந்த இடத்திலும் பேசுபவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. கீழ்தட்டு மக்கள், உழைப்பு, வேற்றி, விளையாட்டு, உயர்வு ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

10) மகர ராசிக்காரர்கள்  நாம் பத்து வார்த்தை பேசினால் இவர்கள் ஒரு வார்த்தை தான் பேசுவார்கள். தனக்கு பிடித்தவர்களிடம் சந்தோசமாக வெகு நேரம் பேசுவார்கள். உண்மையை ஊருக்கு சொல்வதில் சந்தோசம் கொள்வார்கள். ரகசியங்களை மனதுக்குள் வைத்து ரசிக்கவும் வருந்தவும் செய்வார்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் கோபம் வந்துவிட்டால் கண்ரோல் செய்யமுடியாது வயிக்கு வந்தபடி பேசிவிடுவார்கள். காதல், அன்பு, கற்பனை, தனக்கு பிடித்த பொழுது போக்கு விஷயங்களை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

11) கும்ப ராசிக்காரர்கள் ரம்யமாக பேசுபவர்கள், அவ்வளவு சீக்கிரம் பேசமாட்டர்கள், பேசினால் நிறுத்தமாட்டர்கள். தன்னை எப்போதும் ஞாயமானவற்போல் காட்டிக்கொள்வர். பாவம், புண்ணியம், நல்லது கெட்டது ஆகிவற்றை சொல்லி மற்றவரை கட்டுபடுத்தும்படி பேசுவர்கள். தனது நல்ல ஒரு முகத்தை மட்டும் வெளியுலகத்துக்கு காட்டும்படி பேசுவார்கள். பிறர் ரகசியத்தை சொல்லுவார்கள் தனது ரகசியத்தை எப்போதும் வெளியே சொல்லமாட்டார்க்ள். இரட்டை அர்த்த இலக்கிய சொர்களை கையால்வதில் சிலர் கை தேர்ந்தவராக இருப்பார்கள். சொந்தம், வசதி, வாய்ப்புகள் ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

12) மீன ராசிக்காரர்கள் ஒழுக்கமாகவும், வேகமாகவும், புரியும் படியும் பேசுபவர்கள். சமரச பேச்சாளர்கள். மற்றவர்கள் பேசுவதை கவனமாக இடைமறிக்காமல் கேட்டு அதன்பின் அதற்கேற்றாற்போல் பேசுவர்கள். சிலர் சிறந்த பேச்சாளராகவும், பாடகராகவும் இருப்பார்கள். மற்றவர் கவனத்தை ஈர்க்கும்படி பேசுவதில் வல்லவர்கள். தேவையான போது தைரியமான கட்டளை வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவரை இயக்குபடி பேசுவார்கள். சில நேரங்களில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசுவார்கள். முயற்சி, வெற்றி, புத்தகம், செய்தி ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள். 
12 ராசியில் நீங்கள் யாகவராயினும் நா காக்க
பிறர் மனம் புண்படும் படி பேசாமல்
நல்லா பேசுவோம் நல்லதையே பேசுவோம்.
பொய்மை இல்லாமல் உண்மையுடன் வாழ்ந்தால்
உலகத்தில் உள்ளவர் உள்ளத்தில் எல்லாம் நாம் இருப்போம்.
இனிய சொல் நமக்கும் பிறர்க்கும் இனிமை தரும்.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!

AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக