வெள்ளி, 12 டிசம்பர், 2014

12 ராசி (லக்ன) காரர்களை பணம் படுத்தும் பாடு. (கருதுகோள் பொதுபலன்)

12 ராசி (லக்ன) காரர்களை பணம் படுத்தும் பாடு.
(கருதுகோள் பொதுபலன்)


1) மேச ராசிகார்கள் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என தனது கடமையை தர்மத்தின் வழியில் செய்து பணத்தை ஈட்டுவார்கள். பணம் இவரை தேடி வரும். அதிகம் கடன் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

2) ரிசப ராசிகார்கள் பணம் பத்தும் செய்யும் அந்த பணம் எனிடம் இருந்தால் நான் பதினொன்றும் செய்வேன் என்பது போல் பணத்தின்மீது அதிக பற்று உள்ளவர்கள். பணம் இருக்கும் இடத்தில் இவர்கள் இருப்பார்கள். எவ்வளவு கடன் வாங்கினாலும் எளிதில் கட்டும் திறமைசாலிகள்.

3) மிதுனம் ராசிகாரர்கள் பணத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மட்டார்கள். பணம் வருவதற்குள் செலவு தயாராக வைத்து இருப்பார்கள். கடன் வாங்கி வீடு, சொத்து, வாகனம் என சந்தோசமாக வாழ்பவர்கள்.
4) கடகம் ராசிகார்கள் சின்ன மீனை போட்டி பெரியமீனை பிடிக்கும் லாப சிந்தனையாளர். பல வழிகளில் பணம் பன்னும் யுத்தியை கையால்பவர். வரவுக்குவமேல் செலவு செய்ய மாட்டார்கள். அடகு பொருள், பத்திரம் இல்லாமல் தன்னம்பிக்கையின் பேரில் கடன் பெற விரும்ப மாட்டர்கள்.

5) சிம்ம ராசிகாரர்கள் பணம் போட்டு பணம் எடுக்கும் சூட்சமம் தெரிந்த தோழிலதிபர்கள். தனித்துவமான முறையில் பணத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியாளராக திகழ்வார்கள். கடன் வாங்கிய பணத்தை வைத்தே கடனை கட்டி லாபமும் பெறுவார்கள்.

6) கன்னி ராசிகாரர்கள் தர்மத்தின் வழியில் பணத்தை ஈட்டுபவர்கள். வீண் செலவு செய்ய மாட்டர்கள். தினமும் ஒரேமதிரியான வருமானம் ஈட்டும் தன்மையுள்ளவர்கள். கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதுபோல் கடன் வாங்கிவிட்டல் அதை கட்டும்வரை தூங்க மாட்டார்கள்
.
7) துலாம் ராசிகார்கள் அடுத்தவர் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை தனது பாக்கெட்டுக்கு கொண்டு வர தெரிந்த வியாபாரி. ஒவ்வொரு நாளூம் ஏற்ற இறக்கத்துடன் வருமானம் ஈட்டும் தன்மையுள்ளவர்கள். கடன் வாங்கி வீண் செலவு செய்துவிட்டு பின்பு சிலர் கட்டமுடியாமல் முழிப்பார்கள்.

8) விருச்சக ராசிகார்கள் பணத்தை அடைய மற்றவரால் முடியாத செயலையும் மகிழ்ச்சியுடன் செய்து பணம் ஈட்டுபவர்கள். பணத்தின்மீது அதிக பற்று உள்ளவர்கள் ஆனால் பணத்தை சேமிக்க தெரியாதவர்கள். சந்தை வியாபாரத்தில் காலையில் கடன்வாங்கி மாலைக்குள் அதில் லாபம் ஈட்டி கட்டும் திறமைசாலி.

9) தனுசு ராசிகாரர்கள் என் செயல் பணி செய்து கிடப்பதே என பிறர்க்கு முன்னுதாரணமான தர்மத்தின் வழியில் பணத்தை ஈட்டுவார்கள். பணத்தின் மீது அதிக பற்று இல்லாதவர்கள். கடன் வாங்கி நேர்மையான முறையில் தொழில் செய்து கட்டுபவர்கள்.

10) மகர ராசிகாரர்கள் பணம் இவரை தேடி வருவதும் இவர் உணவு உறக்கம் இன்றி பணத்தை தேடி போவதும் இவரின் வாடிக்கை. பணத்தின்மீது அதிக பற்று உள்ளவர்கள்.
இவருக்கு கைமாத்தாக பணம் தந்து உதவுவதற்கு பலர் இருப்பார்கள்.

11) கும்ப ராசிகாரர்கள் பணம் போட்டு பணம் எடுக்கும் சூட்சமம் தெரிந்த தோழிலதிபர்கள். தனித்துவமான முறையில் பணத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியாளராக திகழ்வார்கள். கடன் வாங்கி கட்டமுடியாமல் சில அவமான படவேண்டி வரும்.

12) மீன ராசிகாரர்கள் தர்மத்தின் வழியில் பணத்தை ஈட்டுபவர்கள். வீண் செலவு செய்ய மாட்டர்கள். தினமும் ஒரேமதிரியான வருமானம் ஈட்டும் தன்மையுள்ளவர்கள்.
இவர்கள் முக ராசிக்கு யாருடம் கடன் கேட்டாலும் கிடைக்கும்.

வரவு எட்டணா செலவு பத்தணா என்று இல்லாமல்
வரவுக்குள் செலவு செய்வது நல்லது.
ஒரு லட்சம் சம்பதித்து ஒன்றேகால் லட்சம் செலவு செய்வரை விட
பத்தாயிரம் சம்பதித்து ஒன்பதாயிரம் செலவு செய்து மீதம் ஆயிரம் ரூபாய் சேமிப்பவர் மேலானவர் மேலும் அவர் என்றும் சறுக்கி விழமாட்டர்.
இன்றைய சேமிப்பு நாளைய மகிழ்ச்சி.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக