வியாழன், 11 டிசம்பர், 2014

12 ராசி (லக்கின) காரர்கள் சாமி கும்பிடும் ஸ்டையில்(கருதுகோள் பொதுபலன்)

12 ராசி (லக்கின) காரர்கள் சாமி கும்பிடும் ஸ்டையில்(கருதுகோள் பொதுபலன்)


1) மேச ராசிகாரர்கள் தெய்வபக்தி மிக்கவர்கள், முன்னோர்கள் (குரு சொல்லிக் கொடுத்த) வழிபாட்டு முறையை பின்பற்றுவார்கள். சுவாமி சிலாவிக்ரகத்தின் அழகை தீப ஆராத்தியில் பார்த்து மகிழுவார்கள். தன்னம்பிக்கையாளர். கடவுளின் அன்புக்கு பாத்திரமானவர்கள். இறை வழிபாட்டின் மூலம் ஒழுக்க நெறியை பேணுவார்கள். தீபம் ஏற்றி இறைவனை ஜோதி ரூபமாக வழிபட விரும்புவார்கள்.

2) ரிசப ராசிகாரர்கள் கடவுளிடம் நிறையா வேண்டுதல் வைப்பவர்கள். எனக்கு இது செய்தால் உனக்கு இது செய்கிறேன் என டீல் பேசுபவர்கள். தொழில் முன்னேற்றத்துக்காக இறைவழிபாடு செய்வார்கள். சிலர் செய்யும் தொழிலே தெய்வம் என இருப்பார்கள். தன் பெயருக்கு, தொழில் பெயருக்கு அர்சனை செய்வார்கள். பிரசாத பிரியர்கள். அன்னதானம் வழங்கி மகிழ்வார்கள். இறைவனை கட்டண தரிசனத்தில் விரைவாக பார்ப்பவர்கள்.

3) மிதுனம் ராசிகாரர்கள் தனது ஒவ்வொரு செயலும் இறைவனால் தான் நடந்தது என மனதார நம்புவார்கள். கோவிலில் பக்தர்கள் போடும் சரண கோசம் மற்றும் மந்திரத்தை கேட்டு மகிழ்ந்தவாறே இறைவழிபாடு செய்பவர்கள். இறைவன் மந்திரத்தை ஜபம் செய்வார்கள். புராண இதிகாச காலசபங்களை கேட்டு மகிழ்வார்கள். கோவில் வளாகத்தை சுற்றி வருவதற்கு விருப்ப படுவார்கள்.

4) கடகம் ராசிகாரர்கள் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என இருப்பவர்கள். இறை ஸ்தலங்களுக்கு சென்று நீராட விரும்புவார்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசை கொள்வார்கள். கடவுக்கு நேர்த்திக்கடன் என்று ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலி இடும் எண்ணம் உள்ளவர்கள். குலதெய்வ வழிபாட்டு ப்ரியர். தீ மிதித்தல், அலகு முத்துதல் போன்ற ஆபத்தான நேர்த்தி கடன் செய்து கடவுளிடம் அருள்பெறுபவர்கள்.

5) சிம்ம ராசிகாரர்கள் தனது இஷ்ட தெய்வத்தை தவறாமல் வழிபடுபவர்கள். குரு உபதேசத்துடன் தெய்வத்தை தனது காதலனாகவோ, நண்பனாகவோ பாவித்து (மீரா - கண்ணன், ஆண்டாள்-பெருமாள் ,குசேலன்- கண்ணன்) வழிபடுபவர்கள். சிலர் நான் கடவுள் என்பது போலவும் இருப்பார்கள். சூரிய நமஸ்காரம், தீபம் ஏற்றி இறைவனை ஜோதி ரூபமாக வழிபட விரும்புவார்கள். தனக்கென்று ஒரு இஷ்ட தெய்வத்தை வைத்திருப்பார்கள்.

6) கன்னி ராசிகாரர்கள் தாய் தந்தையரை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள், தனகு ஒரு பிரச்சனை என்றால் தெய்வ வழிபாடு செய்வார்கள். செல்வ மேன்மைக்காக தெய்வமாக வழிபடக்கூடியவர்கள், கோவில்களில் தரக்கூடிய விற்கக்கூடிய பிரசாதத்தை விரும்பி உண்பார்கள். இறைவன் மந்திரத்தை சொல்வதில் ஆனந்தம் கொள்வார்கள். தெய்வந்தின் பெயரை தனது நிறுவனங்களுக்கு வைப்பார்கள். வீட்டிலேயே இறைவழிபாடு செய்ய விரும்புவார்கள்.

7) துலாம் ராசிகாரர்கள் இறைவனின் வளகத்தை சுற்றி வருவதில் ப்ரியம் உள்ளவர்கள். இறைவன் மூலம் ஆதாயம் பெறுபவர்கள். கடவுள் பற்றிய விசயத்தை மற்றவருக்கு சொல்லும் குணமுடையவர்கள். புராண இதிகாச காலசபங்களை கேட்டு மகிழ்வார்கள். கோவிலில் பக்தர்கள் போடும் சரண கோசம் மற்றும் மந்திரத்தை கேட்டு மகிழ்ந்தவாறே இறைவழிபாடு செய்பவர்கள்.

8) விருச்சக ராசிகாரர்கள் இறை ஸ்தலங்களுக்கு சென்று நீராட விரும்புவார்கள். தாயாரை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள், பெண்தெய்வத்தை அதிகம் வழிபடுவார்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசை கொள்வார்கள். கோவிலில் அன்னதானம், நீர் மோர், கூல் ஆகியவை தானமாக வழங்குவார்கள். செல்வ மேன்மைக்காக இறைவழிபாடு செய்பவர்கள். கடவுளுக்காக எதுவும் செய்பவர்கள்.


9) தனுசு ராசிகாரர்கள் நான் கடவுள் என்பது சொல்லும் அளவுக்கு இருப்பார்கள். தன்னம்பிக்கையாளர். தர்ம ஒழுக்க நெறியோடு இறைவனை காண மற்றவருக்கு உபதேசம் செய்பவர்கள். இயற்கை பஞ்சபூதங்களில் இறைவனை காண்பார்கள். தனது இஷ்ட தெய்வத்தை தனது காதலனாகவோ, நண்பனாகவோ பாவித்து (மீரா - கண்ணன், ஆண்டாள்-பெருமாள் ,குசேலன்- கண்ணன்) வழிபடுபவர்கள்.


10) மகர ராசிகாரர்கள் கடவுளுக்காக எதையும் செய்பவர்கள். கடவுள் தான் நிணைப்பதை செய்வார் என்று மனதார நம்புபவர்கள். இறை காரியங்கள் நிறைய செய்பவர்கள். தான் சம்பாதிப்பதி குறிப்பிட்ட பகுதியை நற்காரியங்களுக்கும் இல்லாதவருக்கும் செய்வதன்மூலம் இறைவனுக்கு செய்ததாக மனதார நம்புபவர்கள். தன்னுடன் பக்த கூட்டங்களை கூட்டிக்கொண்டு அடிக்கடி யத்திரை செல்பவர்கள்.

11) கும்ப ராசிகாரர்கள் கடவுள் பற்றிய விசயத்தை மற்றவருக்கு சொல்லும் குணமுடையவர்கள். இறைவன் மூலம் ஆதாயம் பெறுபவர்கள். புராண இதிகாச காலசபங்களை கேட்டு மகிழ்வார்கள். கடவுள் பெயரில் நிறுவனம், தொழில் தொடங்கி வெற்றி பெறுவார்கள். இறைவன் மந்திரத்தை ஜபம் செய்வார்கள். கோவில் வளாகத்தை சுற்றி வருவதற்கு விருப்ப படுவார்கள்.

10) மீன ராசிகாரர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என இருப்பவர்கள். பொது செவை மூலம் இறைவனை கான்பார்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பது போல். இறைவனின் பாசத்துக்குரியவர்கள். கடவுக்கு நேர்த்திக்கடன் என்று ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலி இடும் எண்ணம் உள்ளவர்கள். தீ மிதித்தல், அலகு முத்துதல் போன்ற ஆபத்தான நேர்த்தி கடன் செய்து கடவுளிடம் அருள்பெறுபவர்கள்.

தர்மவழியில் நடந்து
தனது கடமையை சரியாக செய்து
மண்ணசை, பெண்ணாசை, பொன்னாசை (காமத்தை) விட்டு
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்தால்
வீடு பேறு என்னும் மோட்சம் அடைந்து நாமும்
இறைவன் ஆகலாம்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக