வெள்ளி, 12 டிசம்பர், 2014

12 ராசி (லக்கின) காரர்கள் தன்னை அழகு படுத்திக்கொள்ளும் ஸ்டையில் (கருதுகோள் பொதுபலன்)

12 ராசி (லக்கின) காரர்கள் தன்னை அழகு படுத்திக்கொள்ளும் ஸ்டையில்
(கருதுகோள் பொதுபலன்)
1) மேச ராசிக்காரர்கள் தனது வயதுக்கு ஏற்ற அளவிற்கு தன்னை அழகு படுத்திக்கொள்ளுவார்கள். தனது தலைமுடிக்கும் முக அழகுக்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள். எப்போதும் கையில் சீப்பு வைத்து தலை வாரிக்கொண்டே இருப்பார்கள். தனது வீரமான பேச்சின் மூலம் மற்றவரை மயக்குவார்கள். வாசனை திரவியங்களை பூசி எப்போதும் கமகம என இருப்பவர்கள். இறுக்கமான உடை அணிந்து மற்றவரை கவருவார்கள். தலைமுடியை அடிக்கடி வெட்டி தன்னை அழகுடன் காட்டுவார்கள். உடற்பயியிற்சி மூலம் தனது உடம்பை கட்டுடலாக வைத்திருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பது தான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

2) ரிசப ராசிக்காரர்கள் எப்போதும் இளமையுடன் இருப்பவர்கள். மேக்கப் செய்த்தாலும் செய்யாவிட்டாலும் அழகாக இருப்பவர்கள். அளவோடு சாப்பிட்டு தனது உடலை இளமையாக வைத்துக் கொள்வார்கள். முக அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். புருவகளை அழகுற வைத்திருப்பார்கள். சிலர் கண் கண்ணாடி ஸ்டையாக அணிந்து மற்றவரை கவருவார்கள். வசிகரமான பேச்சின் மூலம் மற்றவரை மயக்குவார்கள். பல வர்ணங்களில் தனது உடலுக்கு ஏற்ற உடைகள் மட்டுமே அணிவார்கள். முகம் பார்க்கும் கண்ணாடியில் அடிக்கடி தனது முகத்தை பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள். தனது நகைச்சுவையான பேச்சிதான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

3) மிதுனம் ராசிக்காரர்கள் தன்னை அழகு படுத்திக்கொள்வதன் மூலம் அழகாக தெரிவார்கள். உடலை பராமரித்தால் எப்போதும் இளமையுடன் இருக்கலாம் என்பதை அறியாமல் அழகு சாதன பொருளில் தான் அழகு இருக்கிறது என நம்பி நிறைய பணத்தை செலவிடுவார்கள். அழகான காதணி, மூக்குத்தி கலுத்தணிகள் மூலம் அழகுடன் மின்னுவார்கள். அழகான உடைகளை தேந்தெடுப்பதில் வல்லவர்க்ள். மேட்சிங்கான உடைகளை அணிந்து மகிழ்வார்கள். வாசனை திரவியங்களை பூசி எப்போதும் கமகம என இருப்பவர்கள். காதோர முடி அழகும் ஸ்டையிலும் தரும். அன்பான ஆதரவான பேச்சிதான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

4) கடகம் ராசிக்காரர்கள் கம்பீரமான உடல் வாகின் மூலம் இயற்கையான அழகுள்ளவர்கள். தனது தோலுக்கு பொருந்தகூடிய கிரீம்களை தடவி தன்னை அழகுடன் காட்டிக்கொள்வார்கள். வாசனா திரவியங்களை அதிகம் பயன்படுத்துவார்கள். எளிமையான காட்டன் ஆடை அணிந்தாலும் அழகுடன் தெரிவார்கள். கவர்சியான மார்பழகு உள்ளவர்கள். அடிக்கடி தனது உடையை சரி செய்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள். வசிகரிக்கும் முக அழகு மிக்கவர்கள். யோக மூலம் உடல் பரமரிப்பு செய்பவர்கள் அதனால் இளமையுடன் இருப்பார்கள். அடிக்கடி முகம் கழுவும் பழக்கம் உள்ளவர்கள். தனித்துவமான தனது ஸ்டையில் தொற்றம் தான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.
5) சிம்ம ராசிக்காரர்கள் இடத்துக்கு தகுந்தாற்போல் தன்னை அழகு படுத்திக்கொள்வார்கள். மேக்கப் செய்த்தாலும் செய்யாவிட்டாலும் அழகாக இருப்பவர்கள். அழகான வி.ஐ.பி அணியும் ஆடைகளை அணிந்து கெளரவமாக வலம் வருவார்கள். அழகான இடுப்பழகு உள்ளவர்கள். வயது ஏறினாலும் இளமை மாறாது. வேலை செய்யும் இடத்துக்கு தகுந்த ஆடை, அலங்காரம் செய்வார்கள். நெற்றியில் விபூதி அல்லது நாமம் பொட்டு வைத்து அழகுடன் தெரிவார்கள். வித்தியாசமான பேச்சி, விகடம், நகைசுவை கலந்த பேச்சற்றல் தனி அழகு. வாசனை மிக்க பவுடர்களை உடல் முழுக்க பூசி அழகுடன் வலம் வருவார்கள். பனிவும், துணிவும் ராஜதந்திரம் தான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

6) கன்னி ராசிக்காரர்கள் எதிர்ப்பாளர்களை கவருவது பொல தன்னை அழகு படுத்திக்கொள்வார்கள். அழகான ஆடைகளை பார்த்து பார்த்து அணிவார்கள். மார்டன் டிரஸ் அணிந்து கலக்குவார்கள். உடம்பை பருமன் ஆகாம பார்துக்கொள்வார்கள். உடம்பை ஒட்டியபடி பொருத்தமான ஆடைகளை அணிவார்கள். தனது தந்தை மற்றும் வழிகாட்டி (ரோல்மாடல்) போல் தன்னை அழகு படுத்திக்கொள்வார்கள். இயற்கை அழகு இல்லாவிட்டாலும் தன்னை அழகு படுத்திக்கொள்வதன் மூலம் அழகாக தெரிவார்கள். தனது அழகின் மூலம் எளிதில் மற்றவரை கவர்வார்கள். மற்றவரிடம் அடிபனிந்து மற்றவரை உயர்த்துவது தான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

7) துலாம் ராசிக்காரர்கள் தனது வயதுக்கு ஏற்ற அளவிற்கு தன்னை அழகு படுத்திக்கொள்ளுவார்கள். தனது தோலுக்கு பொருந்தாத கிரீம்களை தடவி முக அழகை கெடுத்துக்கொள்வார்கள். தனக்கு பொருந்தகூடிய சரியான உள்ளாடைகளை அணிந்து தன்னை எப்பொதும் கவர்ச்சியாக காட்டிக்கொள்வார்கள். அழகான பின்னழகும் நடையழகும் கொண்டவர்கள். எதிர் பால் இனத்தவரை கவரும் அளவுக்கு தன்னை அழகாக காட்டுவார்கள். வீரமும் வேகமும் எதையும் செய்யும் தைரியமும் சாதனையும் தான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

8) விருச்சக ராசிக்காரர்கள் எப்போதும் இளமையுடன் இருப்பவர்கள். மேக்கப் செய்த்தாலும் செய்யாவிட்டாலும் அழகாக இருப்பவர்கள். அளவோடு சாப்பிட்டு தனது உடலை இளமையாக வைத்துக் கொள்வார்கள். யோக மூலம் உடல் பரமரிப்பு செய்பவர்கள் அதனால் இளமையுடன் இருப்பார்கள். நேர்த்தியாக உடை அணிந்து அழகுடன் உலா வருவார்கள். சற்று இறுக்கம் குறைவான ஆடை அணிவார்கள். தொடை அழகு கொண்டவர்கள். தேவையற்ற அழகு பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்கள் மஞ்சள், சந்தனம், பழங்களை முகத்தில் பூசி பாரம்பரிய அழகுடன் வலம் வருவார்கள். ஒழுக்கம், நிதானம், முன்னுதாரணம் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.


9) தனுசு ராசிக்காரர்கள் தன்னை அழகு படுத்திக்கொள்ள பெரிதாக விருப்பம் கொள்ளமாட்டார்கள். தனக்கு பொருத்தமான பாரம்பரிய உடைகளை அழகுடன் அணிபவர்கள். தன்னை அழகு படுத்திக்கொண்டால் மிகவும் அழகாக தெரிவார்கள். இவரின் அழகு மற்றவரை அடிமை ஆக்கும். உடம்பை ஒட்டியபடி பொருத்தமான ஆடைகளை அணிவார்கள். தலை முடியை சரியாக பராமரித்து அழகாக கவர்வார்கள். அளவாக உண்டு உடம்பை பருமன் ஆகாமல் பார்துக்கொள்வார்கள். வேலைக்கு ஏற்ற முறையில் உடை, அலங்காரம் இருக்கும். உத்தியோகம், உழைப்பு, சாதனை, கெளரவம் தான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

10) மகர ராசிக்காரர்கள் தனது மனமகிழ்ச்சியை அலங்காரத்தின் மூலம் வெளியே காட்டுவார்கள். சற்று இறுக்கமில்லாத ஆடையை அணிவார்கள். பிடித்த வர்ணத்தில் ஆடையை தேந்தெடுப்பார்கள். தனது வயதுக்கு ஏற்ற அளவிற்கு தன்னை அழகு படுத்திக்கொள்ளுவார்கள். எளிமையான காட்டன் ஆடை அணிந்தாலும் அழகுடன் தெரிவார்கள். கவர்சியான மார்பழகு உள்ளவர்கள். அடிக்கடி தனது உடையை சரி செய்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள். வசிகரிக்கும் உடல் அழகு மிக்கவர்கள். ஊர், இடம், இனம், மொழி ஆகியவற்றிற்கு தகுந்தற்போல் தனது உடை, அலங்காரம் இருக்கும். கடின உழைப்பு + சாதனை = அதிர்ஷ்டம் இது தான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

11) கும்ப ராசிக்காரர்கள் எந்த நேரத்திலும் அழகுடன் இருப்பவர்கள் (தூங்கி எழும்போது கூட). மேக்கப் செய்த்தாலும் செய்யாவிட்டாலும் அழகாக இருப்பவர்கள். அளவோடு சாப்பிட்டு தனது உடலை இளமையாக வைத்துக் கொள்வார்கள். கட்டுடலுடன் இருப்பார்கள். பொருத்தமான இறுக்கமான ஆடைகளை அணிபவர்கள். நேர்த்தியாக உடை அணிந்து அழகுடன் உலா வருவார்கள். தேவையற்ற அழகு பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்கள் மஞ்சள், சந்தனம், பழங்களை முகத்தில் பூசி பாரம்பரிய அழகுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியமான தூக்கம் தூங்கி முகத்தை பொழிவுடன் வைத்துக் கொள்வார்கள். காலணிகளை கூட தேர்ந்தெடுத்து அணிவார்கள். மற்றவர்கள் உதவி என்று கேக்காமலே உதவுவது தான் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

10) மீன ராசிக்காரர்கள் தன்னை அழகு படுத்திக்கொள்வதன் மூலம் அழகாக தெரிவார்கள். தலைமுடியை பேணுவதில் ஆர்வம் உள்ளவர்கள். தலைமுடிக்கு வர்ணம் மற்றும் சரியான அளவில் தலைமுடியை வெட்டிக்கொள்வதில் ஆர்வம் மிக்கவர்கள். உடலை பராமரித்தால் எப்போதும் இளமையுடன் இருக்கலாம் என்பதை அறியாமல் அழகு சாதன பொருளில் தான் அழகு இருக்கிறது என நம்பி நிறைய பணத்தை செலவிடுவார்கள். தனக்கு பொருத்தமான ஒரே மதிரியான உடைகளை தேர்ந்தெடுத்து அணிவார்கள். அழகு நிலையம் சென்று அடிக்கடி தன்னை அழகு படுத்திக் கொள்வார்கள். அழகான நடை நடந்து மற்றவரை கவருவார்கள். தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவை இரண்டும் இவர்களின் பேரழகு என்று சொல்லலாம்.

மற்றவர் ரசிக்கும்படியும் மதிக்கும்படியும்
மேக்கப்போ உடையோ போடலாம்
மற்றவர் முகம் சுழிக்கும்படி
மேக்கப்போ உடையோ போட கூடாது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
என்று சொல்லும் அளவிற்கு மற்ற உயிரினங்கள் மீது
நாம் வைக்கும் அன்புதான் விலைமதிப்பில்லா அழகு.
அழகு என்பது முகத்திலோ, உடலிலோ
நாம் அணியும் உடையிலோ
நாம் பூசும் கிரீமிலோ இல்லை
நாம் நடந்துக் கொள்வதில் தான் உள்ளது.
நம்மை மற்றவர் மதிக்கும் அளவிற்கு
அழகுடன் வாழ வாழ்த்துக்கள்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக