சனி, 30 அக்டோபர், 2010

அரசியலில் ரஜினி..?! ( ஜோதிடம் என்ன சொல்கிறது )

அரசியலில் ரஜினி..?!
( ஜோதிடம் என்ன சொல்கிறது )


நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பிறந்தது 12-12-1950 இரவு 11-54
சிம்மம் லக்னம், மகரம் ராசி, திருஒனம் நட்சத்திரம்.

சிம்ம லக்னம் சூரியனைப்போல் தான் இயங்கி மற்றவரையும் இயக்கும் மகத்தான லக்னம்.

சிம்ம லக்னம் அழகு கலை, ஸ்டைல், தனித்துவம் மிக்கது.
ஒளிவு மறைவு இல்லாத வெட்ட வெளிச்சமான லக்னம்.
நல்ல அரசனை (அரசியல் தலைவரை) தரும் லக்னம்.

லக்னம் தர்ம திரிகோணமாகவும்,
லக்னாதிபதி நின்ற வீடு மோட்ச திரிகோனமாகவும் இருப்பதால் தர்மம் மற்றும் இறை நம்பிக்கை உள்ளவர்.

இவருக்கு லக்கினத்திற்கு 6,7,8 ல் கிரகம் அமைந்து
லக்ன அதியோகம் பெறுவது சிறப்பு.

இந்த 6ம் வீடு எதிரி இல்லா வாழ்க்கை, எதிலும் வெற்றி தரும்.

7 ம் வீடு நல்ல மனைவி, நல்லவர் நட்பு,
மக்கள் (வாடிக்கையாளர், ரசிகர்) ஆதரவு தரும்.

8 ம் வீடு இந்த யோகதை ஆண்டு அன்பவிக்க நீண்ட ஆயுளை தரும்.

இதை ( 6 7 8 ) நம் அறிவு மூலம் பெற வேண்டும் என்பதை உணர்தவே
இஸ்லாம் மதத்தில் பிறை போட்டு அதன் மேல் 786 போடுவர்கள்.

நாம் விசயத்திற்கு வருவோம்.
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஜாதகத்தில்
1,2,3,6,9,10,11 ஆம் வீடுகள் சிறப்புடன் இருப்பதால்
இவர் உறுதியாக அரசியலில் குதிப்பார் என்றது ஜோதிட விதி.

ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு
1 ம் வீடு - தனிமனித செல்வாக்கு.
10ம் வீடு - கெளரவம், அதிகாரம்.
9 ம் வீடு - ஒழுக்கம், நீதி, நேர்மை, தர்ம குணம், இறை நம்பிக்கை, சேவை மனம்.
5ம் வீடு - தேர்தலில் போட்டியிடும் எண்ணம்,
7 ம் வீடு - செல்வாக்கு,
11 ம் வீடு - மக்களின் ஏகோபித்த நம்பிக்கை மற்றும் ஆதரவு,
6 ம் வீடு - தேர்தலில் வெற்றி, சேவை குணம்.
10 ம் வீடு - அதன் மூலம் பெறும் பதவி, செல்வாக்கு, அதிகாரம்.
2 ம் வீடு - அதன் மூலம் பெறும் பணம்.

எண்கணித படி
12-12-1950 ல் பிறந்து அவரின் விதி எண்ணும், மதி எண்ணும் 3-ஆக ( குரு ) வருவதால்
ஒழுக்கமும், ஆன்மீக நாட்டமும் உள்ள இவர் அரசியலுக்கு வருவாரா.?


இது 14-6-2011 க்கு பின் சனி திசை செவ்வாய் புத்திக்கு பின் அவரின் அறிவிப்பு மூலம் அறியலாம்....!!!!
நாளும் கோளும் நல்ல தலைவரை தருமா ..?!!.. பொறுத்திருந்து பார்க்கலாம் .?!!..

உங்கள் ஆதரவை தெரிவிக்க ஓட்டு அளியுங்கள்.....

.
.

5 கருத்துகள்:

வெங்கட் சொன்னது…

அவர் சும்மா இருந்தாலும்
ஏன் சார் இப்படி கோத்து விடறீங்க..?
அடங்க மாட்டீங்களா நீங்க..

அப்படியே நம்ம டாக்டர் விஜய்
அடுத்த படம் ஹிட் ஆகுமான்னு
அவர் ஜாதகத்தையும் கணிச்சி
ஒரு பதிவு போடுங்களேன்..

LK சொன்னது…

//அடுத்த படம் ஹிட் ஆகுமான்னு
அவர் ஜாதகத்தையும் கணிச்சி
ஒரு பதிவு போடுங்களேன்..
//

no chance

Dhayanithi Sriram ( Astro ) சொன்னது…

@ வெங்கட்,

// அவர் சும்மா இருந்தாலும்
ஏன் சார் இப்படி கோத்து விடறீங்க..?//

நான் கோத்தி விடலைங்க.,
அவர் ஜாதகம் அமைப்பு அப்படி இருக்கு

// அப்படியே நம்ம டாக்டர் விஜய்
அடுத்த படம் ஹிட் ஆகுமான்னு
அவர் ஜாதகத்தையும் கணிச்சி
ஒரு பதிவு போடுங்களேன்.. //

நீங்க கேட்ட பிரசன்ன நேரத்தை
வெச்சி கணிச்சி பார்க்கும் போது
அவரோட அடுத்த படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.

ஜெகதீஸ்வரன். சொன்னது…

அடடே எனக்கும் சிம்ம லக்கனம், மகர ராசி. தலைவரோட ராசியா என் ராசியும் ,..

சரியாப்போச்சு போங்க, இனி என்ன யாராலையும் பிடிக்கவே முடியாது.

தயாநிதிஸ்ரீராம் சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக