வியாழன், 13 நவம்பர், 2014

12 ராசி (லக்கின) காரர்கள் வாகனம் ஓட்டும் ஸ்டையில்
(கருதுகோள் பொதுபலன்)


1) மேச ராசிகாரர்கள் சாலைவிதிகளை மதிக்காமல் வருபவரை திட்டிக்கொண்டே வேகமாகவும் குறிக்கோளுடன் வாகனம் ஓட்டுவார்கள். வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் மிக்கவர்கள்.

2) ரிசப ராசிகாரர்கள் நிதானமாக சாலைவிதிகளை மதித்து சகிப்பு தன்மையுடன் உடன் இருப்பவருடன் பேசிக்கொண்டே(சாப்பிட்டுக்கொண்டே) வாகனம் ஓட்டுவார்கள். பிரயாண பிரியர். 

3) மிதுனம் ராசிகாரர்கள் இடத்துக்கு தகுந்தற்போல் வேகம் அதிகப்படுத்தியும், குறைத்தும் படல் கேட்டுக்கொண்டோ அல்லது செல் பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். 
வாகனம் வருவாய் ஈட்டி தரவேண்டும் என விரும்புவார்கள்.

4) கடகம் ராசிகாரர்கள் சாலையில் நடக்கும் விசயங்களை பார்த்துக்கொண்டே உணர்ச்சி வசத்துடனும் பதட்டத்துடனும் வாகனம் ஓட்டுவார்கள். வாகனத்தை சுயகெளரவத்துக்காக வைத்திருப்பார்கள்.

5) சிம்ம ராசிகாரர்கள் கம்பிரமாக யாரை பற்றியும் கவலைபடாமல் வேகமாக அறிவாறலுடன் வாகனம் ஓட்டுவார்கள். வாகனத்துக்காக வீன் செலவு செய்வார்கள்.

6) கன்னி ராசிகாரர்கள் மெதுவகவும் நிதானமாகவும் பாதுகாப்பாக்வும் சாலைவிதிகளை மதித்து  வாகனம் ஓட்டுவார்கள். வண்டியின் மூலம் ஆதாயம் தேடுவார்கள்.


7) துலாம் ராசிகாரர்கள் பிறரையும் தன்னைபோல் மதித்து முன்னாலும் பின்னலும் வருபவர்களின் வேகத்தை அனுசரித்து வாகனம் ஓட்டுவார்கள். வாகனத்தை தொழிலுக்காக பயன்படுத்துவார்கள்.

8) விருச்சக ராசிகாரர்கள் யாரை பற்றியும், விபத்தை பற்றியும், கவலைபடாமல் சாலைவிதிகளை மதிக்காமல் மிக வேகமாக வாகனம் ஓட்டுவார்கள்.  வாகனத்தில் அடிக்கடி கோவில்களுக்கு சென்றுவருவதில் விருப்பம் உள்ளவர்கள்.

9) தனுசு ராசிகாரர்கள் ஒழுக்கமாக சாலைவிதிகளை மதித்து மிதவேகத்துடன் வழியில் காணும் விஷயங்களில் அறிவை செலுத்தி வழிதடங்களை ஞாபகத்தில் கொண்டபடியே  வாகனம் ஓட்டுவார்கள். வாகன காப்பீடு விஷயத்தில் அக்கரையுடன் இருப்பார்கள்.

10) மகர ராசிகாரர்கள் மிகுந்த செயல்திறனுடன் மெதுவாக கன்டிசன் இல்லாத வாகனத்தையும் தொழில் திறமையுடன் சகிப்பு தன்மையுடன் வாகனம் ஓட்டுவார்கள். பெரும்பாலும் அடித்தவர் வாகனத்தை ஓட்டுதில் விருப்பம் உள்ளவர்கள்.

11) கும்ப ராசிகாரர்கள் ரிப்பேர் ஆன வண்டியை கூட சரி செய்து ஓட்டி சாதனை படைப்பவர்கள் மிதவேகத்தில் வாகனம் ஓட்டுவார்கள். வாகனத்தில் தன்னிடல் பனிபுரிபவரையும் கூட்டிசென்று சமத்துவத்துடன் இருப்பதில் விருப்பம் உள்ளவர்.
10) மீன ராசிகாரர்கள் கற்பனை குதிரையை அவில்து விட்டபடி ஒரு மயக்க நிலையில் மிதவேகத்தில் வாகனம் ஓட்டுவார்கள். இரவில் வாகனம் ஓட்ட பிடிக்கும். அடிக்கடி சொந்த வாகனத்தில் இன்ப சுற்றுலா செல்ல விருப்பம் உள்ளவர்.


வாகனம் ஓட்டும்போது
மித வேகம் மிக நன்று
வாகனம் ஓட்டிக்கொண்டே செல் அழைப்பில் பேசுபவருக்கு
அழைப்பது எமனாக கூட இருக்கலாம்.
சாலை விதிகளை மதிப்போம். 
வெற்றி+மகிழ்ச்சி நமதே !! 
வாழ்க வளமுடன் !!!
AstroMarichettyகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக