வெள்ளி, 17 அக்டோபர், 2014

இரண்டாம் பாவகத்தில் 9 கிரகமும் கண் அழகும்

இரண்டாம் பாவகத்தில் 9 கிரகமும்
கண் அழகும்
இரண்டாம் பாவகத்தில் சூரியன் இருந்தல்
செந்நிற ஆளுமை திறன் பொருந்திய கண்கள்,
(எங்கேயோ பார்த்த கண்கள் என்று சொல்லக்கூடிய பிரபலகண்கள்),
அதிகார பார்வை.
இரண்டாம் பாவகத்தில் சந்திரன் இருந்தல்
வெண்மையான, உருண்டையான அன்பும், பாசமும்,
கருணையும் பொருந்திய கண்கள்.
பாச பார்வை.
இரண்டாம் பாவகத்தில் செவ்வாய் இருந்தல்
சிவந்த கரடு முரடான கோபம் பொருந்திய கண்கள்.
முரட்டு பார்வை.
இரண்டாம் பாவகத்தில் புதன் இருந்தல்
நீண்ட கண்கள், கூரிய பார்வை பொருந்திய கண்கள்.
சமரச, இடத்திற்க்கு தகுந்தாற்போல் மாறும் பார்வை.
இரண்டாம் பாவகத்தில் குரு இருந்தல்
ஒழுங்கன கண்கள்,தெளீவான அறிவும்,
ஆளுமை திறனும் பொருந்திய கண்கள்.
இரண்டாம் பாவகத்தில் சுக்கிரன் இருந்தல்
அழகன வசிகரிக்ககூடிய சுண்டி இழுக்கும் கவர்ச்சி கண்கள்.
பேசும் கண்கள்.
இரண்டாம் பாவகத்தில் சனி இருந்தல்
சுருக்கம், கருவளையம், ஆரவாரம் இல்லாத
பணிவான கண்கள்.
இரண்டாம் பாவகத்தில் ராகு இருந்தல்
செயற்கை அழகு கூட்டபட்ட (மை தீட்டபட்ட)
கள்ள பார்வை பார்க்கும் பயம் பொருந்திய கண்கள்.
இரண்டாம் பாவகத்தில் கேது இருந்தல்
பிடிவாதம், கோபம், ஞானம், மற்றவரை
கட்டுபடுத்தக் கூடிய கண்கள்.
குறிப்பு: ஜோதிடம் தெரியாதவர்கள், கே.பி. தெரியாதவர்கள் விளையாட்டாக ஜோதிடம் தெரிந்துக்கொள்ள எழுதிய பொதுவான பலன் பதிவு ஆகும்.
இதை இரண்டாம் பாவக உப நட்சத்திர அதிபதி, இரண்டாம் பாவகம் (ராசியின் தன்மை), இரண்டாம் பாவகாதிபதி (பாவகாதிபதி தன்மை), இரண்டாம் பாவககத்தில் அமர்ந்த கோள்கள் ஆகியவற்றை வைத்து முழூமையாக கண்டு பிடிக்கவும். பரம்பரை விஷயம், சுருதி, புத்தி, யுத்தி, கால, தேச, வர்த்தமானம் பார்த்து ஜோதிடம் சொல்ல வேண்டும். நன்றி !
ஒரு யானையை பார்வை இல்லாத 4 பேர் பார்த்து உலக்கை, முறம், பானை, தூண் என்று வர்ணித்த கதை போல் ஆகிவிடும்.
ஜோதிடத்தில் 2ம் பாவகம் முகம், கண், வாய், பேச்சாற்றல், ஆகியவற்றை குறிக்கும். சுக்கிரன் கண்கள் மற்றும் கண்களின் அழகை குறிக்கும். சூரியன் வலது கண் பார்வையையும், சந்திரன் இடது கண் பார்வையையும் குறிக்கும். குறிப்பாக 2ம் பாவகம் வலது கண்ணையும், 12ம் பாவகம் இடது கண்ணையும் குறிக்கும்.
வணக்கம். நன்றி !.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக