சனி, 18 அக்டோபர், 2014

12 ராசி (லக்ன) காரர்கள் எப்படி தீபாவளி கொண்டாடுவார்கள். (ஒரு சின்ன கற்பனை)

12 ராசி (லக்ன) காரர்கள் எப்படி தீபாவளி கொண்டாடுவார்கள்.
(ஒரு சின்ன கற்பனை)



1) மேச ராசிகார்கள்  : 
தைரியாமாக மற்றவரை திட்டிக்கொண்டே கூட்டமாக உடன் இருப்பவருடன் சண்டை போட்டுக்கொண்டே தீபாவளி பட்டாசு வெடிப்பார்கள். 


2) விருச்சக ராசிகார்கள் : 
கூட்டத்த கூட்டி சாகசத்திற்காக ஆபத்தான முறையில் (வாய்ல கடிச்சி வெடிக்கிறது, கைல புடிச்சி வெடிக்கிறது  இப்படி) பட்டாசு வெடித்து வீரத்தை காட்டுவார்கள். 

3) ரிசப ராசிகார்கள்  : 
தனது புத்தாடை மினுக்கோடு என்னிடம் இவ்வளவு வகை பட்டாசு இருக்கிறது என காட்டிக் கொண்டு ஒன் பை ஒன்னா ரசனையோடு வெடிப்பார்கள்.
சுவையான உணவுக்கு முக்கியத்துவம் தருவங்க. 

4) துலாம் ராசிகார்கள் : 
மத்தவங்க வெடிக்கறத பார்த்து சந்தோசபடுவாங்க, பட்டாசு கடை வச்சிருப்பங்க (வியாபாரி யாஸ்சே). மனசு திருப்திக்காக, மத்தவங்களுக்காக கொஞ்சமா வெடிப்பார்கள். 
5) கடகம்  ராசிகார்கள் : 
குடுப்பத்தோடு சந்தோசமா வீட்டுக்கு உள்ளும் வெளியும் பட்டாசு வெடிப்பார்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவாங்க.

6) சிம்ம ராசிகாரர்கள் : 
ஊருக்கே தெரிவதுபோல 1000, 2000, 5000, 10000 வாலா வெடி வெடித்து மற்றவரை கவர்வார்கள். இன்ப சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் தருவாங்க.


7) மிதுனம் ராசிகாரர்கள்:  உடன்பிறப்போடோ மனைவியோடோ இரட்டையாராக வித்தியாசமான பட்டாசு வெடிப்பார்கள். டிவி புரோக்ராமுக்கு  முக்கியத்துவம் தருவாங்க. பீச் சினிமானு போக விருப்ப படுவாங்க.



8) கன்னி ராசிகாரர்கள் : 
பாதுகாப்பாக சின்ன வெடிகளை வெளியே தெரியாம சைலண்ட்டா வெடிப்பாங்க. மத்தவங்க விருப்பத்த நிறைவேத்துறதுக்கு முக்கியத்துவம் தருவாங்க.



9) தனுசு ராசிகாரர்கள் : 
கோவிலுக்கு போயிட்டு வந்து அல்லது சாமி கும்புட்டுட்டு விளக்கு ஏத்தி பயபக்தியோட  பட்டாசு வெடிப்பார்கள். கோவில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் தருவாங்க.

10) மீன ராசிகாரர்கள் :
மத்தவங்க தூங்குற நேரத்துல பட்டாசு வெடிச்சி டிஸ்டப் பண்ணுவாங்க. வெளியூர் பிரயாணத்துக்கு முக்கியத்துவம் தருவாங்க.

11) மகர ராசிகாரர்கள் :
பட்டாசு எந்த தொழிற்சாலையில எப்படி செஞ்சி இருப்பங்கனு உழைப்பாளிய கெளரவமா நெனச்சிகிட்டே வெடிப்பாங்க.

12) கும்ப ராசிகாரர்கள் :
 இந்த பட்டாசுக்கு இவ்வளவு செலவு பன்னுறதுக்கு செமிச்சா எவ்வளவு லாபமுன்னு நெனச்சிகிட்டே வெடிப்பாங்க.  


தீபாவளியை பாதுகாப்போடு பாதுகாப்பாக கொண்டாடி மகிழுங்கள், குழந்தைகளை பெரியோர்கள் மேற்பார்வையில் பட்டாசை வெடிக்க சொல்லவும்.

அனைவருக்கும் மகிழ்ச்சியான் தீபாவளி வாழ்த்துக்கள் !

வெற்றி+மகிழ்ச்சி நமதே !!  
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக