வெள்ளி, 17 அக்டோபர், 2014

ஆங்கில தேதியின் கிழமை உங்கள் விரல் நுனியில்
வருடம் 1900 முதல் 5000 வருடம் வரை.
நம் இன்று பயன்படுத்தும் ஆங்கில காலாண்டர் ரிகோரியன் என்பவர் புனித கத்தோலிக்க திருச்சபையின் போப் ஆண்டவர் ஆவார். இவர் இந்நாட்காட்டியை ஏற்றுக் கொண்டதால் அவர் பெயராலேயே கிரிகோரியன் காலண்டர் என்று வழங்கப் படுகிறது.

அ) நீங்கள் கிழமை கண்டறிய வேண்டிய வருடத்தின் எண்ணில் இருந்து 1900 தை கழித்து வரும் எண் = வருட எண் எனக் கொள்க.
ஆ) வருட எண்ணை 7ஆல் வகுத்து வரும் மீதியை குறித்துக் கொள்ளவும். ;
இ) பின் வருட எண்ணை 4ஆல் வகுத்து வரும் ஈவை குறித்துக் கொள்ளவும். ;
ஈ) மாத எண்
ஜனவரி = 1
பிப்ரவரி = 4
மார்ச் =4
எப்ரல் =0
மே = 2
ஜுன் -5
ஜுலை = 0
ஆகஸ்ட் = 3
செப்டம்பர் = 6
அக்டோபர் = 1
நவம்பர் = 4
டிசம்பர் = 6
உ) தேதி
உதாரணம் : 31-08-2001 ந்தேதியின் கிழமையை கண்டறிவோம்.
வருட எண் : 2001-1900 = 101
அ) வருட எண் : 101
ஆ) வருட எண்ணை 7ஆல் வகுத்து வரும் மீதி = 101/7 ன் மீதி = 3
இ) வருட எண்ணை 4ஆல் வகுத்து வரும் ஈவு = 101/4 ன் ஈவு = 25
ஈ) மேலே கண்டபடி ஆகஸ்ட் மாத எண் = 3
உ) தேதி = 31
ஸ்டெப் ஆ+இ+ஈ+உ ஆகியவற்றை கூட்டவும். = 3+25+3+31 = 62
வரும் விடையை 7 ஆல் வகுத்து மீதத்தை ஞாயிறு முதலாக எண்ண வரும் கிழமை அந்த தேதியின் கிழமை ஆகும்.
62/7 ன் மீதி 6
ஆக ஞாயிறு முதலாக எண்ண வெள்ளி வரும்.
முக்கிய விஷயம் நீங்கள் வருட எண்ணை 4 ஆல் வகுக்கும்போது மீதமின்றி வகுபடும் வருடத்திற்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு மட்டும் 1 யை கழித்து விட்டு நாளை கண்டறியவும்.
வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக