சனி, 27 டிசம்பர், 2014

(காதலில் நீங்கள் சைவமா ? அசைவமா ?) 12 ராசி (லக்கின) காரர்கள் காதலிக்கும் ஸ்டையில்

(காதலில் நீங்கள் சைவமா ? அசைவமா ?)
12 ராசி (லக்கின) காரர்கள் காதலிக்கும் ஸ்டையில்
(கற்பனை கருதுகோள் கவிதை பொதுபலன்)

1) மேச ராசிக்காரர்கள் : 
கஞ்சுபோட்ட சட்டைபோல விரைப்பாக இருக்கும் மேச ராசிகாரர்களே நீங்கள் யாரிடமும் சிரித்து பேசமாட்டீர்கள் உங்கள் காதலி மட்டும் உங்களிடம் சிரித்து சிரித்து பேச வேண்டும், கலகல என இருக்க வேண்டும் என நினைப்பீர்கள். புடிச்சாலும் புடிச்சேன் புளியம்கொம்பா புடிச்சேன்னு சொல்லுர மாதிரி பெரிய இடத்து பொண்ணா பாத்து புடிப்பீங்க. உங்க காதல வெளிய சொல்லுறதுக்குள்ள வேற ராசிகாரங்க உங்க லவ்வற உஷார் பன்னிடுவாங்க. ஆகவே காலம் தாழ்தாமல் ஒன்றே செய், அதுவும் இன்றே செய், அதுவும் நன்றே செய் என்பது போல காதலில் செயல் பட்டால் உங்கள் காதலி உங்கள் வருங்கால மனைவி ஆவாள்.
2) ரிசப ராசிக்காரர்கள் :
பேச்சு கலையில் வல்லவரான ரிஷப ராசிகாரர்களே. வசிகரமாக பேசுவதில் வல்லவர்கள். உங்கள் விருப்பத்தை நாசூக்காக இரட்டை அர்த்தத்தில் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். உங்கள் காதலி அறிவாளியாகவும், சமயோசித புத்தியுள்ளவராகவும், கொஞ்சம் ரிசர்வு டைப்பாகவும் இருக்க வேண்டும் என விரும்புவீர்கள். நீங்கள் வாழும் சமுதாயத்துக்கு தகுந்தாற்போல் தகுந்தமாதிரி உங்கள் காதலி இருக்கவேண்டும் என விரும்புவீர்கள். காதலி உங்கள் வசமானலும், உங்கள் காதலில் வெற்றியடைய பட்டாத பாடு பட்டுதான் திருமணம் செய்ய வேண்டும்.
3) மிதுனம் ராசிக்காரர்கள் :
இன்பம் துன்பம் இரண்டையும் ஒன்றாக யோசிக்க தெரிந்த மிதுன ராசிகாரர்க்ளே. இன்னைக்கு என்ன என்ன லேட்டேஸ்டு உபகரணம் வந்து இருக்க அதனையையும் பயன்படுத்தி லவ் பன்னுறதுல உங்கள யாரும் மிஞ்சமுடியாது. லெட்டர், போன், செல். மெசேஜ், சேட், என முகம் பாக்கமலே லவ் பன்னிட்டு லோ லோனு அலைய வைக்கும் உங்கள் காதல். காதலுக்காக யோசிக்கிறதுக்கு பதிலா தொழிலுக்கு யோசிச்சா பில்கேட்ஸ்ஸ விட ஒரு படி மேல போகலாம். உங்கள் காதலியை மனைவியாக்குவது உங்களின் வாழ்நாள் சாதனையாக எண்ணி மகிழ்வீர்கள்.
4) கடகம் ராசிக்காரர்கள் :
இடத்த குடுத்த மடத்த புடிக்க தெரிந்த கடக ராசிகாரர்களே. உங்களுக்கு ஆப்பு அடிப்பது உங்கள் காதல்தான் என்பது தெரியாமல் காதலியின் பின்னால சுத்தி செருப்படி வாங்கவும் தயாராக இருப்பீர்கள். உங்கள் காதலி விஷயத்தில் அடிக்கடி உங்கள் நிலைப்பட்டை மாற்றிக்கொள்வீர்கள். தைரிய சாலியாகவும் சாதனை செய்பவரையும் உங்களுக்கு அதிகம் புடிக்கும். நீங்கள் பருவகோலாறு காரணமாக காதல் வயப்படுவீரகள் ஆகவே உங்கள் லட்சியங்கள் மூலமாகவும் இறைபக்தி மூலமாக்வும் உங்கள் காதலையும் காமத்தையும் விரட்டுங்கள்.
5) சிம்ம ராசிக்காரர்கள் :
பந்தாவும் படாடீபமும் கொண்ட சிம்ம ராசிகாரர்களே. உள் ஒன்று வெளியொன்று பேச தெரியாமல் அடிக்கடி காதலியிடம் பொய் சொல்லி மட்டி உங்கள் காதல் நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என்பது போல் அடிக்கடி தேய்ந்து வளரும். காதலுக்காக பொய் சத்தியம் கூட பன்னவைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட காதலியை கரெக்ட் பன்னி அதுல பெஸ்ட தெர்ந்தெடுக்கும் அளவுக்கு உங்களுக்கு பிகர் உஷார் ஆகும். உங்களோட எப்பவும் கூடவே இருக்குற வெட்டி பசங்க சொல்லுறத கேக்காம வாழ்கையில எதாவது சாதிக்கணுமுன்னு இறங்கின நீங்கதான் உண்மையான தலைவர்.
6) கன்னி ராசிக்காரர்கள் : கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்குற கன்னி ராசிகாரர்களே. நாள் பார்த்து நேரம் பார்த்து உங்களோட லவ்வ சொல்லி லவ்வற உஷார் பன்னுறதுல நீங்க கில்லி. ஆனா உங்கள விட தகுதி கம்மியா இருக்குற பொண்ண தான் உங்களுக்கு புடிக்கும். நீங்க காதலிக்குறதுல எவ்வளவு சின்சியர இருக்குறீங்கலோ அதே அளவுக்கு அந்த காதல சக்சஸ் பன்னி வீட்டோட சம்மததோட கல்யாணம் பன்னிக்கிறதிலும் இருப்பீங்க. லவ்வருக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து எதையும் இழக்க தயாரா இருப்பீங்க. சிலர் லவ்வரோட லெவலுக்கு தன்ன உயர்த்தி சாதனை செய்வாங்க.
7) துலாம் ராசிக்காரர்கள் : ஆலமரமும் சொம்பும் இல்லாம தீர்ப்பு சொல்லும் துலாம் (நாட்டாமை) ராசிகாரர்களே. எவ்வளவு தப்பு செஞ்சாலும் வெளிய தெரியாம மறைக்கிறதுல கெட்டி காருங்க. அத காதல் லையும் பாலோ பன்னுவீங்க. உங்க காதலி கௌரவமாகவும், ஒழுக்கமாகவும், வசதியாகவும் இருக்கனுமுண்ணு தொலவி தொலவி காதலிப்பீங்க. காதல் வெற்றியடையுமுன்னு தன்னம்பிக்கையுடன் இருப்பீங்க. சிலர் சொந்தகார பொண்ண காதலிச்சி ஈஸியா உஷார் பன்னிடுவாங்க. காதல் நல்ல அமைஞ்ச சிலர் சிறந்த வெற்றியாளராக இருப்பாங்க.
8) விருச்சக ராசிக்காரர்கள் : சோதனையை சாதனை ஆக்கும் விருட்சக ராசிகாரர்களே. ஹஸ்டட்டல்கு போன நர்ச உஷார் பன்னபாப்பீங்க. வெளி நாட்டுக்கு போன வெளி நாட்டு காரிய உஷார் பன்னபாப்பீங்க. சிலருக்கு காதல் டைம் பாஸ இருக்கும். சிலருக்கு சோதனையா இருக்கும். உங்கள் விருப்பத்தை நாசூக்காக இரட்டை அர்த்தத்தில் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். நீங்கள் காதலில் மாட்டிவிட்டால் தூக்கம் கெட்டு ஆரோக்கியம் கெட்டு வீடு தங்காம லோலோனு திரிய வரும். கதலுக்காக நிறைய இழக்கவேண்டி வரும் மரியாதை உட்பட. இத தொழில்ல காட்டினா நீங்க நல்ல ஏற்றுமதியாளர்.
9) தனுசு ராசிக்காரர்கள் : பேச்சில் மடக்கினாலும் உங்களை செயலில் மடக்க முடியாத தனுசு ராசிகாரர்களே. காதல சொல்லுற தைரியம் சொல்லுற விதம் எல்லாமே தனியா யோசிச்சி பன்னுவீங்க. கோவில்ல காதலி செருப்பு பொட்டு இருக்க மாட்டன்னு தெரிஞ்சி அக்க தைரியமா காதல சொல்லி தப்பிப்பிங்க. தைரியமான துணிச்சலான பொண்ணா பாத்து லவ் பன்னுவீங்க. சின்ஸியரா லவ் பன்னுவீங்க. உங்க லவ் சக்சஸ் ஆக எல்ல சாமியையும் கும்புடுவீங்க. நீங்க பீகர பாத்த கொழைவீங்க உங்க பிகர் சும்ம போல்ட எதையும் சமாளிக்கும். காதலிக்குற நேரத்துல காதலியை பத்தி யோசிக்கிறதுக்கு பதில் உங்கள பத்தி யோசிச்சா உலக வரலாற்றில் நீங்கள் முதலிடம்.
10) மகர ராசிக்காரர்கள் : உத்தியோகம் புருஷலட்சணம் என இருக்கும் மகர ராசிகாரர்களே. கண்ணால் பேசி மடக்குறதுல, பல மொழி கலந்த கலவியா பேசி பொண்ணுங்க மனசுல இடம் புடிக்கிறதுல நீங்க மன்னன். காதலிக்க ஆரம்பித்து விட்டால் காதலியியை ஒரு நாள் கூட பாக்காமல் இருக்க மாட்டார்கள். கண்ணால் பார்த்ததும் காதல் என பருவ கோளாறு மூலம் சிலர் தனது வாழ்க்கையை சீரழித்துக் கொள்வார்கள். செல்வாக்கான அழக்கான பெண்ணாக பார்த்து காதலிப்பவர்கள். சிலரின் உண்மையான காதல் வெற்றியடைய தனது குடும்பத்தினரும் உதவுவார்கள்.
11) கும்ப ராசிக்காரர்கள் : தனது மரியாதையை எந்த இடத்திலும் குறைத்துக் கொள்ளாத கும்ப ராசிகாரர்களே. இன்னைக்கு என்ன என்ன லேட்டேஸ்டு உபகரணம் வந்து இருக்க அதனையையும் பயன்படுத்தி லொவ் பன்னுறதுல உங்கள யாரும் மிஞ்சமுடியாது. லெட்டர், போன், செல். மெசேஜ், சேட், என முகம் பாக்கமலே லவ் பன்னிட்டு லோ லோனு அலைய வைக்கும் உங்கள் காதல். இரட்டை அர்த்தத்தில் பேசி காதலியை உஷார் பன்னுறதுல கெட்டிக்காரர். ஒண்ணுக்கு மேற்பட்ட காதலியை கரெக்ட் பண்ணி அதுல பேஸ்ட தேர்ந்தெடுப்பாங்க. காதலுக்கு எடுக்குற சிரத்தைக்கு நடிக்க போன நல்ல ஸ்டார் ஆகலாம்.
12) மீன ராசிக்காரர்கள் அடுத்தவங்க பிரச்சனையை தன் பிரச்சனையாக நினைத்து உதவும் மீன ராசிகாரர்களே. அன்பும் பாசமும் அரவணைப்பும் கொண்ட பெண்ணாக பார்த்து பார்து காதலிப்பார்கள். அவ்வளவு எளிதில் காதலியை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். சொந்தத்தில் அழக்கான அறிவான அன்பான பெண்ணாக பார்த்து யாருக்கும் தெரியாமல் தனது காதலை வெளிப்படுத்தி. காதல் ரகசியத்தை அவ்வளவு எளிதில் யாரிடமும் சொல்ல மாட்டார்கள். சிலரின் உண்மையான காதலுக்கு குடுப்ப நபர்கள் உதவுவார்கள். இவர்கள் காதலுக்கு எடுக்கு முயற்சியை தொழிலுக்கு எடுத்தால் மாட மாளிகை கூட கோபுரத்துடன் கார் பங்களா என இருக்கலாம்,
அவன் (அவள்) கண்ணுக்கு அழகாக தெரியும் பெண் (ஆண்) + உண்மையான அன்பு = காதல்
12 ராசியில் நீங்கள் யாகவராயினும் காதலிக்கலாம்
ஆனால காதலுக்கு பின்னால் நிகழும் விஷயத்தை
மனக்கண்ணால் பார்த்துவிட்டு காதலிக்கவும்
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
நாம 12 ராசிகாரர்களும் பெண்ணால் கெடாமல்
லட்சிய வீரராக இருந்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

செவ்வாய், 23 டிசம்பர், 2014

(மேடையில் மைக் பிடிக்கலாம் வாங்க) 12 ராசி (லக்கின) காரர்கள் பேசும் ஸ்டையில்

(மேடையில் மைக் பிடிக்கலாம் வாங்க)
12 ராசி (லக்கின) காரர்கள் பேசும் ஸ்டையில்
(கற்பனை கருதுகோள் கவிதை பொதுபலன்)

 
1) மேச ராசிக்காரர்கள் வேகமாக பேசுபவர்கள், விவாத பிரியர்கள், மற்றவர் சொல்லும் கருத்தை எளிதில் ஏற்கமாட்டர்கள். வேகமாக தர்க்கம் செய்பவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. உணர்ச்சிவச பட்டு பேசும்போது சில சமயத்தில் நாதடுமாறும். உண்மையை எந்த இடத்திலும் பூசி மெழுகாமல் சிதறு தேங்காய் போல் உடைப்பார்கள். கட்டளை வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவரை கட்டுபடுத்துவதுபோல் தைரியமாக பேசுவார்கள். தனது காரியம் நடக்க யாரையும் காக்கா பிடிக்கமாட்டர்கள். நேரம் தவறாமை, உணவு, பணம் செல்வாக்கு ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

2) ரிசப ராசிக்காரர்கள் கவர்ச்சியாக நுனி நாக்கில் பிறமொழி கலந்து பேசுபவர்கள். மற்றவர் கவனத்தை ஈக்கும்படி பேசுவார்கள். சமரச பேச்சாளர்கள். தனது கருத்தை எளிதில் வெளியிட மாட்டார்கள். பிறரை தாக்கி பேசமாட்டார்கள். அதனால் அனைவருக்கும் இவரை பிடிக்கும். இடத்துக்கு தகுந்தாற்போல் அல்லது ஆளுக்கு தகுந்தாற்போல் பேசுவார்கள். நாதடுமாறமல் கோர்வையாக பேசுபவர்கள். சிலர் பாடகராக இருப்பார்கள். பனிவான வார்தைகளை பயன்படுத்துவார்கள். சிலர் இரட்டை அர்த்தம், சிலைடையாக பேசுபவராக இருப்பார்கள். தனது காரியம் நடக்க மற்றவரை காக்கா பிடிக்கும் சூட்சமம் அறிந்த விகடகவி இவர்கள்.

3) மிதுனம் ராசிக்காரர்கள் தெளிவாகவும் நிதானமாகவும் அன்பாகவும் பேசுபவர்கள். தன் பேச நினைப்பதை மனதில் அசை போட்டுவிட்டு நிதானமாக பதறாமல் பேசுவார்கள். தனது கருத்தை மற்றவர் ஏற்க வேண்டும் என கட்டாய படுத்தமாட்டர்கள். தவறு நடக்கும் இடத்தில் உண்மையை நாம் சொல்லி என்ன நடக்கபோகிறது என கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள். கட்டளை வார்த்தைகளுக்கு பதில் அன்பான, பாராட்டுதலான வார்த்தைகளை பேசி வேலையை முடித்துக்கொள்வார்கள். தற்புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள். தன்னை புகழ்ந்து பேசுபவர்களுக்கு எதையும் தயங்காமல் செய்வார்கள். அயல் நாடு, உணவு மருந்து சிக்கனம் ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

4) கடகம் ராசிக்காரர்கள் அன்பும் கண்டிப்பும் கலந்து பேசுபவர்கள். இவர்கள் பேசுவதை கேட்பதற்கேன்றே ஒரு கூட்டம் இருக்கும். இவர்களின் பேச்சு தனிதன்மையுடன் புகழ்மிக்கதாக இருக்கும். இவரின் பேச்சுக்கு மற்றவர்கள் கட்டுபடுவார்கள். காதல் வசனங்களை பேசுவதில் வல்லவர்கள். உண்மையை எந்த இடத்திலும் தயங்காமல் சொல்லுபவர்கள். கற்பனை குதிரையை தட்டிவிட்டு கவிதை நடையுடன் பேசி மயக்கும் சிலரும் இதில் அடக்கம். தற்புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள். வெற்றி, லாபம், லட்சியம் ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுவார்கள்.

5) சிம்ம ராசிக்காரர்கள் அறிவும், தெளிவும், கண்டிப்பும், ஆளுமை திறனுடன் பேசுபவர்கள். சமயோசித புத்தியுடன் பேசுபவர்கள். காமடியாகவும் பேச தெரிந்தவர்கள். மற்றவரை கேலி, கிண்டல், நையாண்டி செய்வதில் வல்லவர்கள். இடத்துக்கு தகுந்தாற்போல் அல்லது ஆளுக்கு தகுந்தாற்போல் பேசுவார்கள். நாதடுமாறமல் கோர்வையாக பேசுபவர்கள். சிலர் இரட்டை அர்த்தம், சிலைடையாக பேசுபவராக இருப்பார்கள். உண்மைக்கு உயிக்கொடுப்பவர்கள். லட்ச்சியம், கௌரவம், நிர்வாக திறன், தலைமை பண்பு, தொழில ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

6) கன்னி ராசிக்காரர்கள் மெதுவாகவும் மற்றவருக்கு புரியும்படியும் பேசுபவர்கள். ஞாயத்தை தேவையானவர் தேவையில்லாதவர் என பாகுபாடு இல்லாமல் எந்த இடத்திலும் பேசுபவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. உணர்ச்சிவச பட்டு பேசும்போது சில சமயத்தில் கூட நாதடுமாறாமல் பேசுவார்கள். சிலர் சிறந்த பாடகராகவும் பேச்சாளராகவும் இருப்பார்கள். ஒழுக்கமாகவும் பிறர் மதிக்கும் படியும் பேசுவார்கள். ஆன்மீகம், வித்தை, புத்தகம், நன்னெறி ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

7) துலாம் ராசிக்காரர்கள் தான் சொல்லும் கருத்தை மற்றவர் தட்டாமல் கேட்க வேண்டும் என நினைப்பவர்கள். ஆனால் மற்றவர் சொல்லும் கருத்தை எளிதில் ஏற்கமாட்டர்கள். வேகமாக பேசுபவர்கள், விவாத பிரியர்கள், வேகமாக தர்க்கம் செய்பவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. உணர்ச்சிவச பட்டு பேசும்போது சில சமயத்தில் நாதடுமாறும். தனக்கு தெரிந்த உண்மையை நன்மை கருதி வெளியே சொல்லமாட்டர்கள். ரகசியம் காப்பவர்கள். கோபம் வந்துவிட்டால் நாகரீகமில்லமல் சிலர் பேசுவார்க்ள். அதிர்ஸ்டம், எதிகாலம், யோகம், மறைபொருள் ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

8) விருச்சக ராசிக்காரர்கள் வேகமாகவும், புரியும் படியும் பேசுபவர்கள். சமரச பேச்சாளர்கள். மற்றவர்கள் பேசுவதை கவனமாக இடைமறிக்காமல் கேட்டு அதன்பின் அதற்கேற்றாற்போல் பேசுவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் ஞாயத்துடன் பேசுவார்கள். இரட்டை அர்த்த இலக்கிய சொர்களை கையால்வதில் சிலர் கை தேர்ந்தவராக இருப்பார்கள். விட்ட சொல்லும் செலவழிந்த நேரமும் திரும்ப பெறமுடியாது என்பதை அறிந்தவர்கள். தனக்கு கேடு ஏற்பட்டாலும் உண்மையை சொல்ல தயங்க மாட்டார்கள். தன்னை சார்ந்தவர்களின் நன்மை, நலம், உயர்வு ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

9) தனுசு ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரம் பேசமாட்டர்கள், பேசினால் நிறுத்தமாட்டர்கள். கீழ்தட்டு மக்களின் உயர்வை பற்றி பேசுவார்கள். உண்மையை ஊருக்கு சொல்வதில் சந்தோசம் கொள்வார்கள். ரகசியம் என்று எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். மெதுவாகவும் நிதானமாகவும் பேசுவார்கள். ஞாயத்தை தேவையானவர் தேவையில்லாதவர் என பாகுபாடு இல்லாமல் எந்த இடத்திலும் பேசுபவர்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. கீழ்தட்டு மக்கள், உழைப்பு, வேற்றி, விளையாட்டு, உயர்வு ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

10) மகர ராசிக்காரர்கள்  நாம் பத்து வார்த்தை பேசினால் இவர்கள் ஒரு வார்த்தை தான் பேசுவார்கள். தனக்கு பிடித்தவர்களிடம் சந்தோசமாக வெகு நேரம் பேசுவார்கள். உண்மையை ஊருக்கு சொல்வதில் சந்தோசம் கொள்வார்கள். ரகசியங்களை மனதுக்குள் வைத்து ரசிக்கவும் வருந்தவும் செய்வார்கள். தன் மனதுக்கு சரி என பட்டதை தயங்காமல் சொல்வார்கள். அதனால் இவரை சிலருக்கு பிடிக்காது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் கோபம் வந்துவிட்டால் கண்ரோல் செய்யமுடியாது வயிக்கு வந்தபடி பேசிவிடுவார்கள். காதல், அன்பு, கற்பனை, தனக்கு பிடித்த பொழுது போக்கு விஷயங்களை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

11) கும்ப ராசிக்காரர்கள் ரம்யமாக பேசுபவர்கள், அவ்வளவு சீக்கிரம் பேசமாட்டர்கள், பேசினால் நிறுத்தமாட்டர்கள். தன்னை எப்போதும் ஞாயமானவற்போல் காட்டிக்கொள்வர். பாவம், புண்ணியம், நல்லது கெட்டது ஆகிவற்றை சொல்லி மற்றவரை கட்டுபடுத்தும்படி பேசுவர்கள். தனது நல்ல ஒரு முகத்தை மட்டும் வெளியுலகத்துக்கு காட்டும்படி பேசுவார்கள். பிறர் ரகசியத்தை சொல்லுவார்கள் தனது ரகசியத்தை எப்போதும் வெளியே சொல்லமாட்டார்க்ள். இரட்டை அர்த்த இலக்கிய சொர்களை கையால்வதில் சிலர் கை தேர்ந்தவராக இருப்பார்கள். சொந்தம், வசதி, வாய்ப்புகள் ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள்.

12) மீன ராசிக்காரர்கள் ஒழுக்கமாகவும், வேகமாகவும், புரியும் படியும் பேசுபவர்கள். சமரச பேச்சாளர்கள். மற்றவர்கள் பேசுவதை கவனமாக இடைமறிக்காமல் கேட்டு அதன்பின் அதற்கேற்றாற்போல் பேசுவர்கள். சிலர் சிறந்த பேச்சாளராகவும், பாடகராகவும் இருப்பார்கள். மற்றவர் கவனத்தை ஈர்க்கும்படி பேசுவதில் வல்லவர்கள். தேவையான போது தைரியமான கட்டளை வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவரை இயக்குபடி பேசுவார்கள். சில நேரங்களில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசுவார்கள். முயற்சி, வெற்றி, புத்தகம், செய்தி ஆகியவற்றை பற்றி அடிக்கடி பேசுபவர்கள். 
12 ராசியில் நீங்கள் யாகவராயினும் நா காக்க
பிறர் மனம் புண்படும் படி பேசாமல்
நல்லா பேசுவோம் நல்லதையே பேசுவோம்.
பொய்மை இல்லாமல் உண்மையுடன் வாழ்ந்தால்
உலகத்தில் உள்ளவர் உள்ளத்தில் எல்லாம் நாம் இருப்போம்.
இனிய சொல் நமக்கும் பிறர்க்கும் இனிமை தரும்.
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!

AstroMarichetty