வியாழன், 16 அக்டோபர், 2014

நட்சத்திர கந்தாயம் பலன் கண்டறியும் முறை. (Nakshatra Kanthayam)

நட்சத்திர கந்தாயம் பலன் கண்டறியும் முறை.
பஞ்சாங்கத்தில் போடும் நட்சத்திர கந்தாயம் கணிப்பது எப்படி என பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாளின் சைத்ர சுத்தபிரதமை தினத்தின் (தெலுங்கு வருட பிறப்பு) சூரிய உதய நேரத்தில் 1) திதி, 2) நாள், 3) நட்சத்திரம், 4) யோகம், 5) கரணம் என்று சொல்லும் பஞ்ச அங்கம் 5யையும் குறித்துக் கொள்ளவும்.
1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ
முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
உதாரணம் : ஜய வருடத்துக்கு பரணி நட்சதிரத்திற்கு கந்தாயம் கண்டறிவோம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாள் (தெலுங்கு வருட பிறப்பு).
ஜய வருடத்தின் முந்தைய வருடமான விஜய வருடத்தின் பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதமை நாளின் பஞ்சஅங்கங்கள்.
பங்குனி 17 (31-3-2014) திங்கட்கிழமை, ரேவதி நட்சத்திரம், ஐந்திரம் யோகம், கிம்ஸ்துக்கினம் கரணம் அன்றைய பஞ்ச அங்கங்கள் ஆகும்.
1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ = பிரதமை = 1
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ = திங்கள் = 2
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ = ரேவதி = 27
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ = ஐந்திரம் = 26
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ = கிம்ஸ்துக்கினம் = 11
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ = 1+2+27+26+11 = 67 ஆகும்
ஊ = 67
பரணி நட்சதிரத்திற்கு முதற்கந்தாயம் கண்டறிவோம்.
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ = பரணி = 2
முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) = ((67+2)x3) / 8 = 207 / 8 இன் மீதம் = 7 ஆகும்.
பரணி நட்சதிரத்திற்கு நடுகந்தாயம் கண்டறிவோம்.
நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) = ((67+2)x7) / 3) = 483 / 3 இன் மீதம் = 0 ஆகும்.
பரணி நட்சதிரத்திற்கு கடை கந்தாயம் கண்டறிவோம்.
கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) = ((67+2)x3) / 5) = 207 / 5 இன் மீதம் = 2 ஆகும்.
இவ்வாறு மற்ற நட்சத்திரத்திற்கும் கண்டறியவும்.
(குறிப்பு : ஒரு சில பஞ்சங்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை திதி முடியும் நேரத்தில் உள்ள திதி, நாள், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை வைத்தும் கணிக்கிறார்கள்.)
(குறிப்பு : ஒரு சில பஞ்சங்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை திதி ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள திதி, நாள், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை வைத்தும் கணிக்கிறார்கள்.)
வாழ்க வளமுடன்

நவகிரகங்களும் தீபாவளி பட்டாசும் (Navagiraha and Deepavali Crackers)

நவகிரகங்களும் தீபாவளி பட்டாசும்
 (Navagiraha and Deepavali Crackers)
மனிதனால் உருவாக்க கூடிய ஒரே பஞ்சபூதம் நெருப்பு மட்டுமே. சிக்கி முக்கி கல் மூலம் நெருப்பை உருவாக்க தெரியும் வரை இயற்கையாக உருவான நெருப்பை பல நூறு ஆண்டுகள் மனிதன் சிப்டு போட்டு அனையாமல் காத்தான் என்று சொன்னல் இன்று ஒரு லைட்டர், தீ பெட்டிக்குள் நெருப்பை கொண்டுவந்த நமக்கு சிரிப்பாக தான் இருக்கும். இருந்தாலும் இது தான் உண்மை. அந்த தீ பஞ்சபூத்தை வணங்கும் விதமாக அமைந்த 2 பண்டிகை தீபாவளி, கார்த்திகை தீப திரு நாள் ஆகியவை ஆகும்.

தீபாவளி நாளில் நாம் வெடிக்கும் பட்டாசை குறிக்கும் கிரகங்கள் செவ்வாய் (கெமிக்கல்,நெருப்பு ) + ராகு (விஷப்பொருள்) ஆகும்.
நாம் வெடுக்கும் பட்டாசுகளை நவகிரங்களைக் கொண்டு எவ்வாறு பிரிக்கலாம் என்பதே இந்த சின்ன பட்டாசு பதிவு.

செவ்வாய்+ராகு+சூரியன் = 1000, 5000, 10000 வாலா வெடி, துப்பாக்கி+சுருள் பட்டாசு, ரெயின்போ 7 வர்ண வெடி.
செவ்வாய்+ராகு+சந்திரன் = கம்பி மத்தப்பு, தீ பெட்டி மத்தாப்பு, ரெயின் ஸ்டார் கிராண்ட் ஷவர். டிஷ்கோ ஷவர். பவுண்டென் லிங்கா.
செவ்வாய்+ராகு+செவ்வாய் = ஆட்டம் பாம், புல்லட் பாம், லட்சுமி வெடி, யானை வெடி, துப்பாக்கி
செவ்வாய்+ராகு+புதன் = இரட்டை வெடி, பாரசுட் வெடி, ராக்கெட் வெடி, கார்டுன் முயல், யானை, புலி சீறி பாயும் பட்டாசு, நிலபுருஷ் வெடி. ராக்கெட் பாம். உதிரி பட்டாசு.
செவ்வாய்+ராகு+குரு = கேபுல் ரயில், பராசூட் வானில் வர்ணம், ராக்கெட்,
செவ்வாய்+ராகு+சுக்ரன் = நிலபுருஷ், சங்கு சக்கரம், பலவர்ண பொறி மத்தாப்பு. 7 ஒண்டர்ஸ் 100 சார்ட்சஸ்.
செவ்வாய்+ராகு+சனி = கையால் வெடிக்கும் அணு குண்டு, டாட் கேப், உதிரி பட்டாசு.
செவ்வாய்+ராகு+ராகு = பாம்பு குலுவை, கார்டுன் சீறி பாயும் முயல், யானை, புலி பாம்பு பட்டாசு,
செவ்வாய்+ராகு+கேது = எலக்ட்ரானிக் ஸ்டோன், பாம்பு குலுவை, சாட்டை மத்தாப்பு.
இன்னும் பல உள்ளது. எல்லம் சின்ன நவகிரக சிந்தனைக்காக தான்.
தீபாவளியை பாதுகாப்போடு பாதுகாப்பாக கொண்டாடி மகிழுங்கள், குழந்தைகளை பெரியோர்கள் மேற்பார்வையில் பட்டாசை வெடிக்க சொல்லவும்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான் தீபாவளி வாழ்த்துக்கள் !
மகிழ்ச்சி நம் கையில் !!
வாழ்க வளமுடன் !!!
Astro Marichetty