வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

ஸ்ரீ கணபதியின் உருவத்தில் பொதிந்து கிடக்கும் வாழ்வியல் வெற்றிச்சிந்தனைகள்

ஸ்ரீ கணபதியின் உருவத்தில் பொதிந்து கிடக்கும் வாழ்வியல் வெற்றிச்சிந்தனைகள்1. பெரிய தலை : எதையும் பெரிய இலக்கோடு சிந்தித்தல்.

2. பெரிய காதுகள் : அறிவார்ந்தவர்கள் பேசுவதை நிறைய கேட்க வேண்டும்.

3. பக்கவாட்டு சிறிய கண்கள் : ஒன்று குவித்த கூர்மையான கவனத்துடன் எதையும் செய்ய வேண்டும்.

4. சிறிய வாய் : குறைவாக பேசுதல்.

5. ஏக தந்தம் : கெட்டதை விலக்கி நல்லதை எற்றுக்கொள்ளல்.

6. வளையக்கூடிய தும்பிக்கை : சுழ் நிலைக்கு ஏற்ப வளைந்துக் கொடுக்கும் தன்மை.

7. கோடரி கை : பாசம், பந்தம் ஆகியவற்றை அறுத்தல்.

8. கயிறு கை : வாழ்வின் உண்மை குறிக்கோளை தன்பால் இழுத்தல்.

9. அபய கை : மற்றவருக்கு உதவுதல், மற்றவரை வாழ்த்துதல்.

10. கொழுக்கட்டை கை : இனிப்பான வாழ்வை மற்றவருக்கு அளித்தல்.

11. பெரிய வயிறு : தனக்கு பெரிய பிரச்சனை வந்தளும் அதை ஜீரணிக்க வேண்டும்.

12. மூஞ்சுறு வாகனம் : நமது தேவையற்ற ஆசைகள் நம்மை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும்.

ஸ்ரீ கணபதியின் உருவத்தில் பொதிந்து கிடக்கும்
விஷயத்தை மனதில் நிறுத்தி
ஸ்ரீ வினாயகர் சதுர்த்தி நாளில் கணபதியை வணங்கி
உலக மக்கள் யாவரும்
வாழ்வியல் வெற்றியும், மகிழ்ச்சியும் பெற
அவன் அருளால் அவன் தாழ்வணங்கி வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்.